வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் கார் வெள்ள நீரில், மீனை போல் நீந்தி சென்ற சம்பவத்தின் காணொளி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

உலகின் மற்ற நிறுவனங்களை சேர்ந்த கார்களால் செய்ய முடியாத ஒரு சில விஷயங்களை லம்போர்கினி நிறுவன கார்கள் எளிதாக செய்யும். ஆனால் உலகில் உற்பத்தி செய்யப்படும் மற்ற அனைத்து கார்களை போலவே, லம்போர்கினி நிறுவன கார்களாலும் தண்ணீரில் நீந்த முடியாது. எந்த வகையிலும் காரை தண்ணீரில் நீந்த வைப்பது ஆபத்தானது.

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

அப்படி இருக்கும்போது லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் (Lamborghini Huracan Spyder) காரின் ஓட்டுனர் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த இந்த ஸ்போர்ட்ஸ் காரை வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் செலுத்தியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு மீனை போல் அந்த கார் வெள்ள நீரில் நீந்தி சென்றுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் கார் வெள்ள நீரில் நீந்தி சென்றபோது, அங்கே ஒரு சில கார் ஓட்டுனர்கள் இருந்தனர். அவர்கள் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாமல் காரை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரின் ஓட்டுனர் துணிச்சலாக வெள்ள நீரில் காரை ஓட்டியுள்ளார்.

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

அங்கே இருந்த மற்ற நபர்கள் இதனை ஆச்சரியமாக பார்த்தனர். அவர்களில் ஒருவர் இந்த நிகழ்வை காணொளியாக பதிவு செய்து கொண்டார். தற்போது அந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஃப்ளோரிடா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளை தற்போது எட்டா புயல் தாக்கியுள்ளது. அப்படி புயல் தாக்கிய சமயத்தில், ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிகிறது.

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

புயல் தாக்கியதால் அந்த பகுதியில் பெரும்பாலான தெருக்கள் வெள்ள நீரில் மூழ்கி விட்டன. இதில், கார் ஓட்டுனர்கள் பலர் சிக்கி கொண்டனர். ஆனால் இந்த லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரின் ஓட்டுனரை மட்டும் புயலாலும் நிறுத்த முடியவில்லை. லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டி விடும்.

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

இருந்தாலும் என்னென்ன விஷயங்களை செய்யலாம்? என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது? என்ற கட்டுப்பாடுகள் லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காருக்கும் உண்டு. ஆனாலும் இந்த ஓட்டுனர் அங்கே நின்று கொண்டிருந்த பல கார்களை கடந்து லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரை முன்னோக்கி செலுத்தியுள்ளார்.

வெள்ளத்தில் நீந்திய லம்போர்கினி கார்... சட்டுபுட்டுனு சர்வீஸ் சென்டர்ல அப்பாயின்மெண்ட் புக் பண்ணுங்க...

ஒரு கட்டத்தில் கார் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. இந்த காணொளி திடீரென முடிவடைந்து விட்டது. அதாவது ஒரு சில வினாடிகளே ஓடுகிறது. எனவே கார் சேதம் அடைந்ததா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த கார் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் காரின் உரிமையாளருக்கு, சேவை மையத்தில் காரை சர்வீஸ் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதி. மிகவும் விலை உயர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் காரை நீச்சல் அடிக்க வைக்க கூடாது என்பதை இந்த ஓட்டுனர் தெரிந்து கொள்ள வேண்டும் என சமூக வலை தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Huracan Spyder Made To Swim In Flooded Street - Viral Video. Read in Tamil
Story first published: Wednesday, November 11, 2020, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X