லம்போர்கினி காருல விளையாட்டுக்குகூட இப்படி பண்ணாதீங்க.. பாருங்க தவக்களைய போல தரையோடு தரையாவே ஆகிருச்சு!

ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கார் ரேலியின்போது ஏற்பட்ட சோகம். பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி ஹீராகேன் விபத்தில் சிக்கி கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. இந்த சம்பவம் எப்போது?, எப்போது? எப்படி அரங்கேறியது? என்பது பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம், வாங்க.

உலகம் அறிந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட் கார் உற்பத்தி நிறுவனமாக லம்போர்கினி இருக்கின்றது. இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்திய சொகுசு மற்றும் சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Lamborghini huracan supercar crashed

அந்தவகையில் லம்போர்கினி நிறுவனம் புகழ்பெற்ற தயாரிப்பான ஹூராகேன் காருக்கும் நம் நாட்டவர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மிக மிக அதிக விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த கார் விபத்தில் சிக்கி மீண்டும் பயன்படுத்தவே முடியாத எனும் அளவிற்குக் கடுமையான சேதத்தைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. சமீபத்தில் இந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் 60ம் ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள லம்போர்கினி உரிமையாளர்களை அழைத்து கார் ரேலி-யை அது நடத்தியது.

Lamborghini huracan supercar

இது பல லம்போர்கினி கார் உரிமையாளர்கள் கலந்துக் கொண்டு நிறுவனத்தின் கொண்டாட்டத்தைச் சிறப்பித்தனர். இந்த கார் ரேலியின்போதே அந்த அசம்பாவித நிகழ்வு கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறி இருக்கின்றது. விபத்திற்கு அந்த கார் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி அதிக வேகத்தில் சென்றதே காரணம் என கூறப்படுகின்றது.

ராஜஸ்தானின் மூல் சாகர் கிராமத்திலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. ஜெய்சல்மருக்கு செல்ல 10 கிமீ மட்டுமே இருக்கின்ற நிலையிலேயே விபத்து அரங்கேறி இருக்கின்றது. இந்த கார் விபத்தைச் சந்தித்ததற்கு அதிக வேகம் மட்டுமல்ல மாடுகள் சில குறுக்கில் வந்ததும் காரணம் என கூறப்படுகின்றது.

supercar crashed

ஆனால், உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. காரின் தற்போதைய நிலை மீண்டும் பயன்படுத்துவதற்கு துளி அளவும் உகந்ததல்ல என கூறும் அளவிற்கு மிகுந்த சேதத்திற்கு ஆளாக இருக்கின்றது. கால்களை இழந்த தவளை தரையோடு தரையாக இருப்பதைப் போல அந்த கார் இருக்கின்றது.

சுமார் 30 அடி ஆழத்தில் விழுந்து பல முறை உருண்டு சென்றதன் விளைவாகவே அந்த காருக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. கார் முழுக்க தூசியும், அழுக்குகளும் தற்போது படர்ந்துக் கிடப்பதை நம்மால் காண முடிகின்றது. மேலும், அனைத்து வீல்களும் உருக்குலைந்து போயிருக்கின்றன. மிகவும் அழகான காருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இத்தனை சேதங்களுக்கு ஆளாகியபோதும் காரில் இருந்த பயணிகளுக்கு எந்த பெரிய ஆபத்தோ, காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. கார் விழுந்த இடத்தில் செடிகள் மிகுந்த அடர்த்தியான நிலையில் இருந்ததன் காரணமாக அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இருக்கின்றனர். மாற்று வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு காரில் இருந்த பயணிகள் வீடு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இத்துடன், விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து காரும் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கின்றது. உண்மையில் இந்த கார் வேறு ஏதேனும் காருடன் மோதலைச் சந்தித்து இருந்தால் மிகப் பெரிய ஆபத்தான சூழல் அங்கு ஏற்பட்டு இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது பள்ளத்தில் மட்டும் விழுந்தது.

ஒட்டுமொத்தமாக 60க்கும் மேற்பட்ட லம்போர்கினி கார்கள் இந்த ரேலியில் பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது. ரேலியில் அவென்டேடார் (Aventador), ஹூராகேன் (Huracan), உருஸ் (Urus) மற்றும் ஹூராகேன் எஸ்டிஓ (Huracan STO) உள்ளிட்ட மாடல்களே ஈடுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு கார் மாடலின் விலையும் பல கோடிகள் ஆகும்.

இதேபோல், விபத்தைச் சந்தித்து இருக்கும் லம்போர்கினி ஹூராகேன் 3.12 கோடி ரூபாய் ஆகும். இந்த கார் இந்தியாவில் முதன் முதலில் 2013 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட்டது. கல்லர்டோ காரை ரீபிளேஸ் செய்யும் விதமாக இந்த காரை லம்போர்கினி விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.

இதில் அதிக திறனை வெளியேற்றும் 5.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் வி10 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 640 பிஎஸ் மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்ற முடியும். இந்த அதீத திறன் வெளிப்பாடே லம்போர்கினி ஹூராகேன் விபத்திற்கான மிக முக்கியமான காரணம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று சூப்பர்கள் விபத்தைச் சந்திப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சம்பவம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிதாக லம்போர்கினி ஹூராகேன் விபத்து சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறி இருக்கின்றது. இதில் பெரும்பாலான சம்பவங்கள் அதீத வேகம் காரணத்தினாலேயே அரங்கேறி உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 17:26 [IST]
English summary
Lamborghini huracan supercar crashed in rajasthan
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X