வீடியோவை பார்த்த பிறகு லம்போர்கினி கார் வாங்கும் ஆசையே போயிடும்!! கோடி ரூபாய் கொடுத்து வாங்கி என்ன பிரயோஜனம்?

லம்போர்கினி (Lamborghini) உலகளவில் மக்கள் அதிகம் விரும்பும் கார் நிறுவனங்களுள் ஒன்று. எப்படியாவது ஒரு லம்போர்கினி காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என நம்மில் நிறைய பேர் நினைக்கிறோம். சிலர், வாழ்க்கையில் ஒருமுறையாவது லம்போர்கினி கார் ஒன்றை நேரில் பார்க்க மாட்டோமா என இருப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால், கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்து வைத்து லம்போர்கினி காரை வாங்கினாலும் அது நம்ம ஊர் சாலைகளுக்கு எந்த அளவிற்கு ஏற்றதாக இருக்கும் என்கிற கேள்வி நம் இந்தியர்களிடையே உள்ளது. அதற்கு வலு சேர்ப்பதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

'இந்தியா அனுபவம் இல்லாதவர்களுக்கானது கிடையாது' என்கிற வாக்கியத்தை சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்த்திருப்பீர்கள். இதன் அர்த்தம் என்னவென்றால், பல்வேறு திறமைகளை கொண்டவர்களால் மட்டுமே இந்தியாவில் வாழ்க்கை போராட்டத்தில் தாக்கு பிடிக்க முடியும் என்பதாகும். இது நகைச்சுவைக்காக தெரிவிக்கப்பட்டாலும், அதுதான் உண்மையான நிலையாக உள்ளது.

lamborghini huracan jumps into pothole

சாலையில் வாகனத்தில் செல்கிறீர்களில் என்றால், குறுக்கே மாடு, நாய், மனிதன் என எது எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும். அதேபோல், சாலையில் இருக்கும் குண்டும், குழிகளில் வாகனத்தை விடாமல் தவிர்க்க சுற்றி சுற்றி செல்ல வேண்டியதாக இருக்கும். அதற்காக தான் டிரைவிங் லைசன்ஸ் வாங்கும்போது 8 போட்டு காட்ட சொல்கிறார்கள்.

2-வீலர்களில் செல்பவர்கள் குண்டும், குழிகளை அவ்வாறு 8 போட்டு கடந்து சென்றுவிட முடியும். ஆனால், கார், வேன் போன்ற 4-வீலர்களில் செல்பவர்கள் வேறு வழியின்றி அந்த பள்ளத்தில் எல்லாம் வாகனத்தை இறக்கியே செல்ல வேண்டும். இதனாலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்கள் நன்கு உயரமானதாக உருவாக்கப்படுகின்றன. ஆனால், லம்போர்கினி கார்களின் அழகே அவற்றின் தாழ்வான உடலமைப்பு ஆகும்.

lamborghini huracan jumps into pothole

இருப்பினும், லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களை மட்டும் கொஞ்சம் அதிக உயரத்துடன் உற்பத்தி செய்கிறது என்றாலும், அதனையும் தாண்டி இங்கு ஒரு லம்போர்கினி ஹூராகென் கார் சாலையின் பள்ளங்களில் குதித்தப்படி தாறுமாறாக சென்றுள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த கருப்பு நிறத்திலான விலையுயர்ந்த லம்போர்கினி ஹூராகென் கார் மேம்பாலம் ஒன்றிற்கு அருகே செல்லும்போது சாலையில் இருந்த ஒவ்வொரு பள்ளங்களிலும் இறங்கி ஏறும்போது வித்தியாசமாக குதிப்பதை பார்க்க முடிகிறது.

வீடியோவில், சாலையில் இருக்கும் பள்ளங்கள் அவ்வளவு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. கார்களால் எளிதாக கடக்கக் கூடியவைகளாவே தெரிகிறது. ஆனால், இந்த லம்போர்கினி ஹூராகென் காரால் கடக்க முடியவில்லை. பள்ளத்தில் இறங்கிய உடன் இந்த ஹூராகென் கார் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளது. காரை அங்கிருந்து வெளியே கொண்டுவர டிரைவர் முயற்சித்த போதிலும், கார் அந்த இடத்திலேயே குதித்தப்படி இருந்துள்ளது.

lamborghini huracan jumps into pothole

இதற்கு காரணம், பள்ளம் அந்த அளவிற்கு ஆழமானதாக இருந்துள்ளது. பள்ளத்தில் இறங்கிய பின், காரின் முன் சக்கரங்களால் அதன் ஆழத்தை தொட முடியவில்லை. இதனால், அந்த இடத்தில் காரின் முன்பக்க எடை மொத்தத்தையும் அதன் அடிப்பகுதிதான் தாங்கி நின்றுள்ளது. இது, காரின் முன்பக்க கீழ் தாடை பகுதியையும், சஸ்பென்ஷனையும் சேதப்படுத்தக்கூடும்.

மற்றப்படி, இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, சம்பந்தப்பட்ட லம்போர்கினி ஹூராகென் காரில் இதன் காரணமாக ஏதேனும் சேதாரங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. அதேபோல், இந்த ஹூராகென் கார் ஆல்-வீல்-டிரைவ் காரா அல்லது ரியர்-வீல்-டிரைவ் காரா என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், இந்த லம்போர்கினி கார் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் லம்போர்கினி கார்களை வாங்குவதை காட்டிலும் அவற்றை முறையாக பராமரிப்பதுதான் பெரிய வேலையாகும். ஏன் என்பதற்கு மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவை பார்த்தாலே தெரிந்திருக்கும். காரை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டு, சாலையின் குண்டு குழியினால் பல லட்ச ரூபாய்களை செலவு செய்துக் கொண்டிருக்காதீர்கள். ஆகவே, இவ்வாறான காரை வாங்குவதற்கு முன் குறைந்தப்பட்சம் உங்களது இருப்பிடத்தையும், அலுவலகத்தையும் சுற்றியுள்ள சாலைகள் நல்ல தரத்தில் உள்ளனவா என்பதை முதலில் பார்க்கவும்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 24, 2024, 19:47 [IST]
English summary
Lamborghini huracan supercar jumps into indian road pothole check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X