இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்டின் வீரதீரம்.. இத்தாலி காரை அசால்ட்டாக வீழ்த்தியது..

கோவா மாநிலத்தில் நடத்தப்பட்ட ட்ராக் ரேஸில், லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை, இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட் எளிதாக வீழ்த்தியது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

கோவா மாநிலத்தில் நடத்தப்பட்ட ட்ராக் ரேஸில், லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரை, இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட் மிக எளிதாக வீழ்த்தியது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட் (Indian Air Force MIG 29 Fighter Jet) மற்றும் லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் கார் (Lamborghini Huracan Supercar) ஆகியவற்றுக்கு இடையே ட்ராக் ரேஸ் (Drag Race) நடத்தப்பட்டது.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

கோவா மாநிலத்தில், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் இந்த ரேஸ் நடத்தப்பட்டு, வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்த பந்தயத்தில், இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட், மிக மிக எளிதாக வெற்றி பெற்றது.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

ஒரு ஃபைட்டர் ஜெட்டிற்கு எதிராக, அதுவும் இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்டிற்கு எதிராக, ஒரு ஸ்போர்ட்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்றால் என்ன நடக்கும்? என்பதற்கான விடை கிடைத்துள்ளது. சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வீடியோவில் நீங்கள் பார்த்தது இந்திய விமானப்படை ஆபரேட் செய்யும் மிக் 29கே ஃபைட்டர் ஜெட். இது இந்திய கடற்படையின் ப்ளாக் பேந்தர் படைப்பிரிவின் ஒரு அங்கமாக உள்ளது. அதனை எதிர்த்து போட்டியிட்ட கார், லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி. இது லம்போர்கினி ஹூராகேன் காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனாகும்.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் லம்போர்கினி ஹூராகேன் பெர்ஃபாமென்டி கார், முன்னேறி செல்ல முயல்கிறது. என்றாலும் இறுதியில், மிக் 29 ஃபைட்டர் ஜெட் அதனை கடந்து சென்று, உடனடியாக டேக் ஆஃப் (take off) ஆகிவிடுகிறது.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

மிக் 29 ஃபைட்டர் ஜெட்டின் டேக் ஆஃப் ஸ்பீடு மணிக்கு 280 கிலோ மீட்டர்கள். எனினும் இந்த ஃபைட்டர் ஜெட் வானில், மணிக்கு 2,200 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறக்க கூடிய வல்லமை படைத்தது.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

உலகில் உள்ள மிகவும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஃபைட்டர் ஜெட்களில் ஒன்றாக மிக் 29 கருதப்படுகிறது. இந்த ஸ்டண்ட் நிகழ்த்தப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டதற்கான சுவாரசிய காரணமும் வெளியாகியுள்ளது.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

இந்திய நாட்டின் இளைய தலைமுறையினரை இலக்காக வைத்து எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தின் ஒரு பகுதிதான் இந்த ஸ்டண்ட். இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவம் போன்ற படைப்பிரிவுகளில், இளைய தலைமுறையினர் இணைவதை ஊக்குவிப்பது என்பதே இதன் நோக்கம்.

லம்போர்கினி சூப்பர் காரை வீழ்த்திய இந்திய விமானப்படையின் மிக் 29 ஃபைட்டர் ஜெட்...

சமீபத்தில் இந்திய கடற்படையும், ராணுவமும் ஆட்பற்றாக்குறையை எதிர்கொண்டன. கடற்படையில் 91 பைலட் பணியிடங்களும் (மொத்த பணியிடம்-735), ராணுவத்தில் 192 பணியிடங்களும் (மொத்த பணியிடம்-794) காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Huracan Supercar lost Drag Race against Indian Air Force MIG 29 Fighter Jet. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X