‘தி இட்டாலியன் ஜாப்’ படத்தில் இடம்பெற்ற லம்போர்கினி மியூரா விற்பனைக்கு!!

Written By:

'தி இட்டாலியன் ஜாப்' என்ற ஆங்கில திரைபடத்தில் இடம் பெற்ற லம்போர்கினி மியூரா சூப்பர் கார் விற்பனைக்கு வந்துள்ளது.

சில நேரங்களில், சில திரைபடங்களில் இடம் பெறும் வாகனங்கள், அந்த திரைபடங்களுக்கு சமமாக அல்லது அந்த திரைபடங்களை விடவும் பிரபலமாகிவிடும்.

அவ்வகையில், 1969-ஆம் ஆண்டில் வெளியான 'தி இட்டாலியன் ஜாப்' என்ற ஹாலிவுட் திரைபடத்தில் இடம்பெற்ற இந்த லம்போர்கினி மியூரா காரும் ஒன்றாக விளங்குகிறது. இந்த லம்போர்கினி மியூரா தான், உலகின் முதல் சூப்பர் காராக பலரால் கருதப்படுகிறது.

தற்போது, இந்த காரை தங்கள் வசம் கொண்டுள்ள, செஷைர் கிளாசிக் கார்ஸ் என்ற அமைப்பு, உலகில் மிகவும் புகழ்மிக்க காரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த லம்போர்கினி மியூரா, 'தி இட்டாலியன் ஜாப்' திரைபடத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இடம் பெற்றுள்ளது.

'தி இட்டாலியன் ஜாப்' ஹாலிவுட் திரைபடத்தில் இடம் பெற்ற இந்த லம்போர்கினி மியூரா, ஷோரூம் கண்டீஷனில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த மியூரா பி400 கார், 3586 என்ற சேஸி எண்ணை கொண்டுள்ளது. மேலும், 5 கார் சொந்தகாரர்களிடம் கைமாறியபோதும், அது 19,000 கிலோமீட்டர் மட்டுமே இயக்கபட்டுள்ளது.

இஞ்ஜினில் சிறிய மயிரிழையிலான விரிசல் ஏற்பட்டதால், 2011-ஆம் ஆண்டில் இதன் ஒரிஜினில் இஞ்ஜினில் ஒரு புதிய இஞ்ஜின் பிளாக் பொருத்தபட்டது. இந்த காருடன் அந்த பழைய ஒரிஜினல் இஞ்ஜின் பிளாக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த மியூரா பி400 கார் அரான்ஸியோ மியூரா (மியூரா ஆரஞ்ஜ்) நிறத்தில் உள்ளது. இது, ஒரிஜினல் பெல் பியான்கோ லெதர் இண்டீரியர் கொண்டுள்ளது. 1968-ஆம் ஆண்டில் தயாரிக்கபட்ட மூன்றே 3 அரான்ஸியோ மியூரா கார்களில் இதுவும் ஒன்று என்பது சிறப்பான செய்தியாகும்.

இந்த காரை வாங்க விருப்பம் உள்ளவர்கள், செஷைர் கிளாசிக் கார்ஸ் அமைப்பை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகின்றனர்.

Story first published: Thursday, November 26, 2015, 11:42 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos