லம்போர்கினி காரை பிரச்சார வாகனமாக மாற்றிய உரிமையாளர்!

Written By:

தேர்தல் நெருங்கியிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் ஓடும் பல கார், பைக்குகளில் கட்சி சின்னமும், தலைவர்களின் படத்தையும் ஒட்டி, தங்களது ஆதரவை தெரிவிப்பதோடு, சிலர் ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருவதை பார்த்திருப்பீர்கள். இதே கலாச்சாரம் தற்போது அமெரிக்காவையும் தொற்றிக் கொண்டுள்ளது.

ஆம், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக ஒருவர் தனது லம்போர்கினி கார் முழுவதும் ஸ்டிக்கரை ஒட்டி அமர்க்களப்படுத்தியிருக்கிறார். சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு குட்டு பட்டு வரும் டொனால்டு டிரம்புக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் காஸ்ட்லி

கொஞ்சம் காஸ்ட்லி

நம்மூரில் ஆயிரங்களிலும், லட்சங்களிலும் மதிப்புடைய பைக், கார்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கின்றனர். ஆனால், பல கோடி மதிப்புடைய தனது லம்போர்கினி சூப்பர் கார் முழுவதிலும் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டி அசத்தியிருக்கிறார்.

 கைவண்ணம்

கைவண்ணம்

அமெரிக்காவை சேர்ந்த சுப்பீரியர் ஆட்டோ டிசைன் என்ற நிறுவனம்தான் இந்த லம்போர்கினி அவென்டேடார் கார் முழுவதும் ஸ்டிக்கரை ஒட்டி கொடுத்துள்ளது.

பெயர்

பெயர்

தனது காரின் அவென்டேடார் மற்றும் டொனால்டு டிரம்ப் பெயரை இணைத்து Trumpventador என்று பெயரை பொறித்து தனது ஆதரவை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

வண்ணக் கலவை

வண்ணக் கலவை

கார் முழுவதுமாக அமெரிக்க தேசியக் கொடியின் நீலம், வெள்ளை, சிவப்பு வண்ணக் கலவையிலான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

டிரம்ப் படம்

டிரம்ப் படம்

காரின் பானட்டை டொனால்டு டிரம்ப்பின் படம் முழவதுமாக ஆக்கிரமித்துள்ளது.

கோல்டு ரஷ் ராலியில்...

கோல்டு ரஷ் ராலியில்...

விரைவில் துவங்க இருக்கும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கோல்டு ரஷ் ராலி கார் பந்தயத்தில் இந்த கார் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணம்

பயணம்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் வரை நடைபெற இருக்கும் இந்த கோல்டு ரஷ் ராலி பந்தயத்தில் ஆயிரக்கணக்கான கார்கள் பங்கேற்கும். அதில், இந்த லம்போர்கினி காரும் பங்கேற்று கலக்க இருக்கிறது.

சந்தேகம்

சந்தேகம்

டொனால்டு டிரம்ப்பை கலாய்க்கும் நோக்கில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறதா அல்லது ஆதரவு தெரிவிப்பதற்காக ஒட்டப்பட்டிருக்கிறதா என்பது குறித்து பலர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 லம்போர்கினி அவென்டேடார்

லம்போர்கினி அவென்டேடார்

லம்போர்கினி அவென்டேடார் காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்மாக 700 பிஎஸ் பவரையும், 689 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.5 கோடி விலை மதிப்பு கொண்டது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lamborghini Trumpventador Coming to goldRush Rally.
Story first published: Wednesday, May 11, 2016, 11:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark