டிராக்டரை குப்புற தள்ளிய ரூ4.7 கோடி கார்! வைரலாகும் வீடியோ!
நீங்கள் வைத்திருக்கும் கார் எவ்வளவு காஸ்ட்லியான காராக இருந்தாலும் சரி, அதில் எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும் சரி, அந்த காரில் நீங்கள் இந்திய சாலையில் பயணிக்கும் போது விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்படியாக ரூபாய் 4.7 கோடி மதிப்பிலான கார் ஒன்று சமீபத்தில் விபத்து சிக்கி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமீபத்தில் ABHI00018 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் நீல நிற லம்போகினி உருஸ் என்ற கார் காட்டப்படுகிறது. அந்த காரின் பின்பகுதி பக்கவாட்டு பகுதிகளெல்லாம் சிறப்பாக இருக்கிறது ஆனால் முன் பகுதிக்கு வரும்போது முன்பக்கம் இடது பக்கம் உள்ள பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஹெட்லைட் பம்பர் எல்லாம் சேதமாகியுள்ளது. இந்த கார் விபத்தில் சுற்றியுள்ளதாக தெரிகிறது. இந்த காரை சுற்றி மக்கள் பலர் செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கார் ஒரு டிராக்டர் மீது மோதியுள்ளது. இந்த கார் மோதியதில் அந்த டிராக்டர் கவிழ்ந்து விழுந்தது இந்த வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது என்ற தெளிவான விபரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்து சேதத்தை வைத்து பார்க்கும் போது ஓவர் டேக் செய்யும்போது இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த லம்போகினி ஒரு காரை டிராக்டரில் வந்தவர் இடது பக்கமாக முந்த முயற்சி செய்திருக்கலாம் என தெரிகிறது. ஆனால் ஏதோ காரணமாக ஓவர்டேக் செய்யும் போது முழுமையாக ஓவர்டேக் செய்ய முடியாமல் காரின் பக்கவாட்டு பகுதியில் டிராக்டர் மோதி இருக்கலாம். இதனால் காரின் பக்கவாட்டு பகுதி மட்டும் சேதம் அடைந்திருக்கும் இதில் வேகமாக டிராக்டர் மோதியதில் புவியீர்ப்பு விசை காரணமாக டிராக்டர் குப்புற கவுந்து இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் உறுதியாக இதுதான் நடந்ததா என்பது தெரியவில்லை.

இந்த லம்போகினி நிறுவனத்தின் ரூஸ் கார் உலக அளவில் பிரபலமான காராக இருக்கிறது . இந்த கார் ஒரு எஸ்யூவி காராகவும் இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 666 பி எஸ் பவரையும் 750 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடியில் பிக்கப் செய்து விடும் திறன் கொண்டதாக இருக்கிறது.
A yellow Lamborghini was allegedly driven at 251 kmph on Mumbai’s Bandra-Worli Sea Link, with the incident captured on video and widely shared across social media platforms.
— Mid Day (@mid_day) December 17, 2025
Following the viral clip, Worli Police seized the luxury car and registered a case of dangerous driving… pic.twitter.com/Ht1HeU4YvP
லம்போகினி ஒரு ஸ்கார் இப்படியாக செய்திகள் சிக்குவது இது முதல் முறையல்ல கடந்த வாரம் கூட மும்பை பகுதியில் ஒருவர் லம்போகினி ஒரு காரை பயன்படுத்தி 252 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ கூட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதன் பிறகு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் செல்லும்போது ஒரு வாகனத்தை முந்தும் போது போதுமான அளவு இட வசதி மற்றும் நேரம் வேகம் எல்லாம் இருந்தால் மட்டுமே உந்த வேண்டும். இல்லை என்றால் இப்படியாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக டிராக்டர்கள் போன்ற கனரக வாகனங்கள் வாகனங்களை முந்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








