சினிமா நட்சத்திரங்கள் போட்டிப் போட்டு வாங்கும் லம்போர்கினி கார்!! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!

லம்போர்கினி (Lamborghini) கார்களை யாருக்கு தாங்க பிடிக்காது... உலகளவில் பிரபலமான இத்தாலிய ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினி சில வருடங்களுக்கு முன் மிக முக்கியமான முடிவை எடுத்தது. அதுதான், உருஸ் என்ற லக்சரி எஸ்யூவி காரை உருவாக்குவது ஆகும். பொதுவாக, லம்போர்கினி கார்கள் என்றாலே தாழ்வானதாக இருக்கும்.

ஆனால், உருஸ் நன்கு உயரம் கொண்ட எஸ்யூவி காராக உருவாக்கப்பட்டது. இதனால், உருஸை எல்லா நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக, நம் இந்தியா போன்ற விலை குறைவான கார்கள் அதிகம் விற்பனையாகும் மார்க்கெட்டிலும் நிறைய உருஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள் நிறைய பேரிடம் உருஸ் கார் உள்ளது.

urus owners in indian cinema

ஜூனியர் என்டிஆர் (Jr NTR): முன்னணி டோலிவுட் நடிகரான இவர் 2021ஆம் ஆண்டில் உருஸ் கார் ஒன்றை சொந்தமாக்கினார். ஜூனியர் என்டிஆர் வாங்கியது கொஞ்சம் ஸ்பெஷலான உருஸ் கிராபைட் கேப்ஸ்யூஸ் எடிசன் ஆகும். இத்தகைய உருஸ் காரை இந்தியாவில் வாங்கிய முதல் கஸ்டமர் ஜூனியர் என்டிஆர் என சொல்லலாம். இதன் விலை அப்போதே ரூ.3.15 கோடி.

urus owners in indian cinema

கார்த்திக் ஆர்யன் (Kartik Aaryan): பாலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்துவரும் கார்த்திக் ஆர்யனும் 2021இல்தான் உருஸ் எஸ்யூவி காரை வாங்கினார். உருஸ் காரை டெலிவிரி எடுக்க 3 மாதம் காத்திருக்க வேண்டும் என சொன்னதாகவும், ஆனால் இவருக்கு அதற்கெல்லாம் பொறுமை இல்லாததால் கார் நேரடியாக இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது எனவும், இதற்காக கார்த்திக் ஆர்யன் ரூ.50 லட்சம் கூடுதலாக செலுத்தியதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

urus owners in indian cinema

ரன்வீர் சிங் (Ranveer Singh): ஜூனியர் என்டிஆர்-ஐ போல் இவரும் உருஸ் காரின் பேர்ல் கேப்ஸ்யூல் எடிசனை வாங்கியுள்ளார். ஆனால், இவர்கள் இருவரது உருஸ் கார்கள் நிறத்தில் வேறுப்படுகின்றன. உருஸ் பேர்ல் கேப்ஸ்யூல் காரில் பளபளப்பான கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்ட பம்பர்கள், பாடி ஸ்கிர்டிங்ஸ், வீல் கிளாடிங், 22 இன்ச்சில் சக்கரங்கள், காரின் பாடி கலரில் காலிபர்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

urus owners in indian cinema

ஷில்பா ஷெட்டி (Shilpa Shetty): தனது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உடன் மிக சமீபத்தில்தான் நடிகை ஷில்பா ஷெட்டி லம்போர்கினி உருஸ் காரை வாங்கி இருந்தார். ஜியால்லோ இண்டி என்ற அடர் மஞ்சள் நிறத்திலான உருஸ் காரை ஷில்பா ஷெட்டியின் குடும்பம் வாங்கியுள்ளது. அத்துடன், அளவில் பெரியதான 22 இன்ச் சக்கரங்களை ஆப்ஷனாக பெற்று பொருத்தி கொண்டுள்ளனர்.

urus owners in indian cinema

பிரித்விராஜ் (Prithviraj): மலையாள நடிகரான இவர் 2022 ஜூனில் ஓர் செகண்ட்-ஹேண்ட் லக்சரி கார் ஷோரூமின் மூலம் உருஸ் காரை வாங்கியுள்ளார். ஆம், பிரித்விராஜ் வைத்திருப்பது ஏற்கனவே வேறொருவரால் பயன்படுத்தப்பட்ட செகண்ட்-ஹேண்ட் உருஸ் கார் ஆகும். மற்றப்படி, எவ்வளவு குறைவான விலையில் இந்த காரை இவர் வாங்கினார் என்பது தெரியவில்லை. இந்த காரின் ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக மட்டும் ரூ.7 லட்சத்தை இவர் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர்கள் மட்டுமின்றி சினிமா துறையை சேர்ந்த வேறு சிலரும் கடந்த சில வருடங்களில் லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளனர். குறிப்பாக, வட இந்தியாவில்தான் உருஸ் கார்கள் அதிகம் விற்பனையாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. வரும் காலங்களில் இன்னும் எந்தெந்த நடிகர், நடிகைகள் லம்போர்கினி உருஸ் காரை வாங்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 15, 2024, 8:00 [IST]
English summary
Lamborghini urus luxury suv car owners in indian cinema check list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X