பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

லம்போர்கினி உருஸ் காரின் உண்மையான மைலேஜ் எவ்வளவு? என்பது தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளன.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

''உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது?'' என்பது இந்தியர்கள் அதிகமாக கேட்கும் கேள்விகளில் ஒன்று. எந்த காரை பார்த்தாலும், அதன் உரிமையாளரிடம் இந்த கேள்வியை கேட்கும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது என்பதுதான் உண்மை. ஒருவர் புதிய காரை வாங்குவதை தீர்மானிப்பதிலும் மைலேஜ் மிக முக்கியமான காரணியாக உள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

சாதாரண கார்கள் ஓரளவிற்கு மைலேஜ் கொடுத்தாலும், மிகவும் விலை உயர்ந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் சொல்லிக்கொள்ளும்படி மைலேஜ் தராது என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட கார்களின் மைலேஜ் என்ன? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதில், நீங்களும் ஒருவர் என்றால் இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கும்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) கார் ஒன்று இந்திய சாலைகளில் எவ்வளவு மைலேஜ் தருகிறது? என்ற கேள்விக்கு நமக்கு விடை கிடைத்துள்ளது. இது லம்போர்கினி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிக பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும். இந்தியாவில் திரையுலக நட்சத்திரங்கள் உள்பட கோடீஸ்வரர்கள் பலரிடம் லம்போர்கினி உருஸ் உள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

பொதுவாக லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் குறைவான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் காரணமாக இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்காது. ஆனால் அந்நிறுவனத்தின் உருஸ், இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக திகழ்கிறது. எனவே இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பலர் லம்போர்கினி உருஸ் காரை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

அப்படி லம்போர்கினி உருஸ் காரை வைத்திருக்கும் ஒருவர், அதனை பெங்களூர் நகரில் பொது சாலைகளில் ஓட்டி வந்தார். அப்போது எரிபொருள் சிக்கனம் எவ்வளவு? என்பது தொடர்பாக அந்த கார் காட்டிய தகவல் மைலேஜிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியர்களை எல்லாம் நிச்சயமாக அதிர்ச்சியில் உறைய வைக்கும்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

கேட்ச் ஏ மைல் என்ற யூ-டியூப் சேனலில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில், தோன்றும் இளைஞர் அவரது நண்பருடைய லம்போர்கினி உருஸ் காரை பார்வையிடும் காட்சிகளை இந்த காணொளியில் காண முடிகிறது. இந்த காணொளியில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அளிக்க கூடிய முக்கியமான விஷயமே லம்போர்கினி உருஸ் காரின் மைலேஜ்தான்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

இந்த லம்போர்கினி உருஸ் காரின் உரிமையாளர், காலியாக இருக்கும் சாலையில் அதன் ஆக்ஸலரேஷனை காட்ட முயல்வதை இந்த காணொளியில் பார்க்க முடிகிறது. ஓரளவிற்கு காலியான சாலை கிடைத்ததும், அவர் காரை சீறி பாய செய்தார். சில நூறு மீட்டர்கள் தூரத்திற்கு இந்த பிரம்மாண்ட எஸ்யூவி காரானது மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை தொட்டது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

மைலேஜ் தொடர்பாக கேட்டதும், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் டிஸ்ப்ளேவை அந்த காரின் உரிமையாளர் காட்டினார். அப்போது அது ஒரு லிட்டருக்கு வெறும் 2.4 கிலோ மீட்டர்கள் என மட்டுமே காட்டியது. கொஞ்சம் அமைதியாக இருங்கள். இதற்கே அதிர்ச்சியடைந்து விட வேண்டாம். இதை காட்டிலும் அதிர்ச்சிகரமான மற்றொரு தகவல் ஒன்று உங்களுக்கு காத்திருக்கிறது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரின் மைலேஜ் இதுதான்... எவ்வளவுனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க

லம்போர்கினி உருஸ் காரை கோர்ஸா மோடில் (Corsa Mode) வைத்து ஓட்டும்போது, ஒரு லிட்டருக்கு 1.3-1.8 கிலோ மீட்டர் மைலேஜை மட்டுமே தருவதாக அந்த காரின் உரிமையாளர் கூறினார். பல கோடி ரூபாய் மதிப்புடைய லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி சீறி பாய்ந்து செல்லும் வல்லமை வாய்ந்தது. சிறப்பான செயல்திறன் கொண்ட கார் என்பதால், லம்போர்கினி உருஸ் எஸ்யூவிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 17, 2020, 23:56 [IST]
English summary
Lamborghini Urus SUV Fuel Efficiency - Details. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+