நானோ பெட்டர்... ஒரு கோடி லேண்ட்க்ரூஸரை கழுதைகளை கட்டி இழுத்த தொழிலதிபர் புலம்பல்!

By Saravana Rajan

சூரத் நகரில், ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவியை தொழிலதிபர் ஒருவர் கழுதைகளை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்வீஸ் பிரச்னைகளால் கோபமடைந்த அவர், டீலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த நூதன போராட்டத்தை நடத்தியுள்ளார்.

கட்டுமான அதிபர்

கட்டுமான அதிபர்

சூரத் நகரின் பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் துஷார் கிலானி. அங்குள்ள நவனீத் டொயோட்டா டீலர் வழியாக ஒரு லேண்ட்க்ரூஸர் காரை சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினார்.

டீலர் பரிந்துரை

டீலர் பரிந்துரை

மும்பையை சேர்ந்த மில்லெனியம் டொயோட்டா டீலர் வழியாக 20 டொயோட்டா லேண்ட்க்ரூஸர் கார்கள் ஆர்டர் செய்யப்பட்டது. அதில், ஒன்றை நவனீத் டொயோட்டா டீலர் மூலமாக, அந்த ஷோரூம் விற்பனை அதிகாரியின் பரிந்துரையின் பேரில் வாங்கியுள்ளார். ஒரு காரின் மதிப்பு ரூ.1.13 கோடி. வாங்கும்போது, சிறப்பான சர்வீஸ் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். ஆனால், அந்த உறுதிமொழிகள் பின்னால் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

பிரச்னை

பிரச்னை

இதுகுறித்து துஷார் கூறுகையில், "சமீபத்தில் கீ லாக் சரியாக வேலை செய்யவில்லை. இதையடுத்து, கீ லாக்கில் உள்ள பேட்டரியை மாற்றுவதற்காக ரூ.1,500 வரை பில் செய்தனர். ஆனால், அந்த பேட்டரி வெளிமார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு கிடைக்கிறது. சரி, பணம் பிரச்னை இல்லை என்று பார்த்தால், கீ லாக் பேட்டரியை மாற்றித் தருவதற்கு 5 நாட்கள் எடுத்துக் கொண்டனர். மேலும், பிரேக் லைனர் மற்றும் ஆயில் சேஞ்ச் என சிறிய வேலைகளுக்கு கூட 5 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களிடம் உதிரிபாகங்கள் ஸ்டாக் இருப்பதில்லை. வரவழைத்து சரிசெய்து தருவதற்கு மிகுந்த கால தாமதம் செய்கின்றனர்.

 கோபம்

கோபம்

சமீபத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டேன். இதற்காக, பிரேக் லைனரை மாற்றித் தர சொல்லி, சர்வீஸ் விட்டேன். உதிரிபாகம் வர தாமதமடைவதாக கூறி கால தாமதம் செய்துவிட்டனர். இதனால், என்னுடைய பயணத்தையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, டீலருக்கு பாடம் கற்பிக்க இதுபோன்று கழுதைகளை கட்டி இழுக்க முடிவு செய்தேன், என்று தெரிவித்துள்றா.்

நானோ கார் பெட்டர்...

நானோ கார் பெட்டர்...

இந்த காருக்கு ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய் இன்ஸ்யூரன்ஸ் கட்டுகிறேன். இதனை வாங்கியதற்காக வேதனையடைகிறேன். ஒரு நானோ காரை வாங்கியிருந்தால் கூட உதிரிபாகங்களை வாங்கவும், சர்வீஸ் செய்யவும் எளிதாக இருந்திருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

டொயோட்டா விளக்கம்

டொயோட்டா விளக்கம்

இந்த பிரச்னை குறித்து புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

 சொற்ப எண்ணிக்கையிலான கார்கள்

சொற்ப எண்ணிக்கையிலான கார்கள்

2009ம் ஆண்டு மாடல் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன. பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போன்றோரிடம் இதே 2009ம் ஆண்டு மாடல் டொயோட்டா லேண்ட்க்ரூஸர் மாடல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கழுதைகளை கட்டி இழுத்த சம்பவங்கள்

கழுதைகளை கட்டி இழுத்த சம்பவங்கள்

இது நம் நாட்டுக்கு புதிது அல்ல... ஏற்கனவே நடந்த இதுபோன்ற நூதன செய்திகளின் இணைப்பு கீழே...

Photo Source: divyabhaskar

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Land Cruiser Runs on Donkey Power in Surat.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X