2 கோடி ரூபாய் காரை வாங்கி வாடகைக்கு விட்ட சலூன் கடைக்காரர்! ஒரு மணி நேரத்திற்கு கட்டணம் எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender). திரையுலக நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போன்ற செல்வந்தர்களிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் டிஃபெண்டர் கார் உள்ளது. எனவே ரோல்ஸ் ராய்ஸ் டிஃபெண்டர் காரை சாலையில் பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமே.

ஆனால் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore), ரோல்ஸ் ராய்ஸ் டிஃபெண்டர் கார், டாக்ஸியாக ஓடி கொண்டுள்ளது. பெங்களூர் சாலைகளில், ரோல்ஸ் ராய்ஸ் டிஃபெண்டர் டாக்ஸி பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, Chaltika.naamgadi என்ற யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ளது.

Land Rover Defender 130

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் மொத்தம் 3 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை 90 (ஷார்ட் வீல்பேஸ்), 110 (ஸ்டாண்டர்டு வீல்பேஸ்) மற்றும் 130 (லாங் வீல்பேஸ்) ஆகியவை ஆகும். இதில், பெங்களூரில் டாக்ஸியாக ஓடி கொண்டிருப்பது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 130 வெர்ஷன் ஆகும்.

இந்த காரில் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 296 ஹெச்பி பவர் மற்றும் 600 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

Land Rover Defender 130 Taxi

இது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் 130 வெர்ஷனின் X-Dynamic HSE வேரியண்ட் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 1.49 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 1.90 கோடி ரூபாய் வரும்.

இது மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், ஒரு மணி நேரத்திற்கே 3 ஆயிரம் ரூபாய் வாடகை வசூல் செய்யப்படுகிறது. சரி, இந்த காரின் உரிமையாளர் யார்? என்ற ஆவல் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருக்கும். இது ரமேஷ் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் (Ramesh Tours And Travels) நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.

இந்த நிறுவனம் ஏராளமான சொகுசு கார்களை வாடகைக்கு வழங்கி வருகிறது. ரமேஷ் பாபு (Ramesh Babu) என்பவர்தான் இதன் உரிமையாளர். இவர் மிகவும் பிரபலமான பார்பர் (Barber) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆம், அடிப்படையில் இவர் ஒரு சலூன் கடைக்காரர் ஆவார். ஆனால் இவருக்கு சொந்தமான ரமேஷ் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தில், பல்வேறு சொகுசு கார்கள் இருக்கின்றன.

இதில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) காரும் அடக்கம். எனவே ரமேஷ் பாபுவை, ரோல்ஸ் ராய்ஸ் பார்பர் என்ற செல்ல பெயருடனும் அழைக்கின்றனர். ரமேஷ் பாபு தனது முதல் காரை கடந்த 1994ம் ஆண்டு வாங்கினார். அது மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni) ஆகும். இதன் பின் அவரது கார்களின் எண்ணிக்கை பெருக தொடங்கியது.

கடந்த 2004ம் ஆண்டில், அவரது கார்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. தற்போது அவரிடம் 200க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாடகைக்கு விட்ட முதல் ஒரு சில மனிதர்களில் ரமேஷ் பாபுவும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை அவரது நிறுவனம் ஒரு மணி நேரத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் என்ற வாடகைக்கு வழங்கி வருகிறது.

இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் (Mercedes Benz G Wagon), மெர்சிடிஸ் பென்ஸ் மேபெக் எஸ் 600 (Mercedes-Benz Maybach S 600), மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் (Mercedes Benz EQS), பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) போன்ற கார்களையும் அவரது நிறுவனம் வாடகைக்கு வழங்கி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிறிய சலூன் கடையில் ஆரம்பித்த பார்பர் ரமேஷ் பாபுவின் வாழ்க்கை பயணம் இன்று, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாடகைக்கு விடும், மிகப்பெரிய தொழிலாக உயர்ந்துள்ளது. எனவே பார்பர் ரமேஷ் பாபுவின் வாழ்க்கை, முன்னேற துடிக்கும் பலருக்கும் உத்வேகம் அளிக்க கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2025, 18:09 [IST]
English summary
Land rover defender 130 taxi spotted in bangalore viral video check all details here
மேலும்... #luxury cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+