108 டன் எடையுள்ள ரயிலை இழுத்து சென்று லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் சாதனை - வீடியோ

Written By:

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மிகவும் திறன்மிக்க வாகனம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதனை நிரூபிக்கும் விதமாக லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி ஸ்போர்ட், 108 டன் எடை கொண்ட ரயிலை இழுத்து சென்று சாதனை படைத்துள்ளது.

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ஆன்-ரோட் அல்லது ஆஃப்-ரோட் என எந்த விதமாக வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். லேண்ட்ரோவர் நிறுவனம், ஒரிஜினல் லேண்ட்ரோவர் கார் கொண்டு, 27 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ரயிலை இழுத்து சாதனை படைத்தது.

land-rover-discovery-sport-pulls-100-ton-train-in-switzerland

லேண்ட்ரோவர் நிறுவனம், இதே சாதனையை மீண்டும் நிகழ்த்த முடிவு செய்தது. இதற்காக, 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், 108 டன் எடை கொண்ட ரயிலுடன் இணைக்கபட்டது.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் ம்யூசியம்பாஹ்ன் ஸ்டீன் அம் ரெய்ன் (Museumsbahn Stein am Rhein) என்ற பகுதியில் உள்ள ரயில் டிராக்கில், 108 டன் எடை கொண்ட ரயிலை இழுக்க துவங்கிய லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், 10 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றது. இந்த 10 கிலோமீட்டர் தூரம் செல்லும் பாதையில், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ரைன் நதியை கடந்து, சுற்றியுள்ள பள்ளத்தாக்கில் இருந்து 26 மீட்டர் உயரத்தில், 285 மீட்டர் நீளம் உள்ள ஹெமிஷோஃபென் பிரிட்ஜ்-ஜையும் (Hemishofen bridge) கடந்து சென்றது.

land-rover-discovery-sport-pulls-100-ton-weight-train-switzerland

இந்த சாதனையை நிகழ்த்த, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு ஒரே ஒரு சிறு மாற்றம் தான் செய்யபட்டது. இது ரயில் டிராக்கின் மீது கடந்து ஏதுவாக சிறிய ரயில்வே வீல்கள் பொருத்தபட்டது.

English summary
Land Rover Discovery Sport is vehicle which can go anywhere - on-road and off-road. To demonstrate its pulling power, Land Rover decided to re-create stunt it registered off 27 years back with original Land Rover, pulling train. Discovery Sport with 2.0-litre diesel engine, pulled 108-ton train across 10km of railway track at Museumsbahn Stein am Rhein in Switzerland. To know more, check here...
Story first published: Friday, June 17, 2016, 12:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark