பிங்க் நிறத்திற்கு மாறிய 2கோடி ரூபா கார்.. மகளுக்கு தந்தை செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover SUV) சொகுசு காரை அதன் உரிமையாளர் ஒருவர் இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றி இருக்கின்றார். அத்துடன், பட்டாம்பூச்சி, குழந்தை போன்ற கிராஃபிக்குகளையும் அந்த காரில் இடம் பெற செய்திருக்கின்றன.

இவ்வாறு அதன் உரிமையாளர் மாற்றுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க பதிவிற்குளஅ போகலாம். இந்திய தொழிலதிபர்கள் பலரின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி இருக்கின்றது. இதன் இந்திய மதிப்பு ரூ. 1.62 கோடிக்கும் அதிகம் ஆகும்.

Land rover range rover wrapped in pink colour

இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை எப்படியும் ரூ. 2 கோடியைத் தாண்டும். இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலையே அதன் உரிமையாளர் ஒருவர், தற்போது இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றி இருக்கின்றார்.

இந்த இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கும் காரின் படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சிறுவர்களை இந்த வீடியோ வெகுவாக கவரத் தொடங்கி இருக்கின்றது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரே இந்த மாற்றத்தைச் செய்தவர் ஆவார். தன்னுடைய பெண் குழந்தையை அவருடைய பிறந்தநாள் அன்று குஷிப்படுத்துவதற்காகவே இவ்வாறு அவர் மாற்றி இருக்கின்றார்.

தற்போது இந்த மாற்றத்துடனேயே லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் சொகுசு கார் குஜராத்தின் சூரத் நகரின் சாலைகளில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இதுபோன்று காரை புதிய வண்ணத்திற்கு மாற்றுவது சட்டப்படி சரியா என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கக் கூடும்.

உருவத்தை மாற்றக் கூடிய மாற்றங்களுக்கே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று வண்ணத்தை மாற்ற தடைவிதிக்கப்படவில்லை. அதேவேளையில், வண்ணம் மாற்றம் பற்றிய தகவலை அக்காரின் ஆர்சி புத்தகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். இதை செய்ய தவறும்பட்சத்திலேயே காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனை குஜராத்தைச் சேர்ந்த இந்த காரின் உரிமையாளர் செய்திருப்பார் என்றே நம்பப்படுகின்றது. ரேஞ்ஜ் ரோவர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பாலிவுட் திரையுலகினர் மத்தியில் மிக தரமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இத்தகைய காரையே பிங்க் நிறத்தில் மகளுக்கு மாற்றி பலரின் மனம் கவர்ந்தவராக மாறி இருக்கின்றார், குஜராத்தைச் சேர்ந்த நபர்.

திஷா படானி மற்றும் அனன்யா பாண்டே உள்ளிட்ட முக்கிய நபர்களே இந்த மாடல் காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சொகுசு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் பெட்ரோல் மற்றும் டீசல் இரு ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைத்தது. ரேஞ்ஜ் ரோவர் ஸ்போர்ட் 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல், 4.4லிட்டர் வி8 டர்போ டீசல் மற்றும் 5.0லிட்டர் சூப்பர்சார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய தேர்வுகளிலேயே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை மாடிஃபைச் செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். உருவத்தை மாற்றும் வகையில் வாகனங்களில் மாற்றங்கள் செய்யப்படும் எனில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் காவல்துறை தயங்காது. மேலும், வாகனத்தை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பினால் மட்டுமே அந்த வாகனத்தை சாலையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அத்துடன், மிகப் பெரிய அளவில் அபராதமும் வசூலிக்கப்படும். இதனால்தான் வாகன மாடிஃபிகேஷன் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2024, 5:00 [IST]
English summary
Land rover range rover wrapped in pink colour
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+