எலான் மஸ்கை பின்னுக்குதள்ளி உலகின் நம்பர் 1 பணக்காராக மாறியவரிடம் இவ்வளவு காஸ்ட்லியான கார்கள் இருக்குதா?
ஆரக்கல் நிறுவனத்தின் கோ-பவுண்டரான லாரி எல்லிசன் என்பவர் தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ளார். எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி இவர் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இவரிடம் உள்ள கார் கலெக்ஷன் குறித்து பலர் தேடி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
லாரி எல்லிசன் ஆரக்கல் நிறுவனத்தின் கோ-பவுண்டாராக இருக்கிறார். இவர் தான் தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரர். இவரது பண மதிப்பு 101 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதுவரை யாரிடமும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் பணக்காரராக உயர்ந்துள்ளார். இதற்கு இவரது நிறுவனத்தின் ஸ்டாக் மதிப்பு உயர்ந்தது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது.

லாரி எல்லிசனிற்கு தற்போது 81வயதாகிறது. இந்த வயதில் இவர் உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறியுள்ள நிலையில் இவரிடம் உள்ள கார் கலெக்ஷன் குறித்து பலர் தேடி வருகின்றனர். இவரிடம் உள்ள கார்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை என்றாலும் இதற்க முன்னர் இவர் பயன்படுத்திய கார்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் உள்ள தகவல்கள் பிரம்மிக்க வைக்கின்றன.
இவரிடம் உள்ள பிரபலமான கார் என்றால் 1997ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மெக்லாரன் எஃப் 1 கார்தான். இந்த கார் தற்போது இவரிடம் இல்லை. இந்த காரை இவர் சில ஆண்டுகள் வைத்திருந்தார். இந்த கார் தற்போது ஏலத்திற்கு போயுள்ளது. யார் ஏலத்திற்கு எடுத்தார்கள் எவ்வவு விலைக்கு ஏலம் போனது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் ஒரு காலத்தில் இந்த கார் இவருக்கு சொந்தமாக இருந்தது. 2005ம் ஆண்டே இவர் இந்த காரை விற்றுவிட்டார்.

லாரி எல்லிசன் அக்யூரா என்எஸ்எக்ஸ் என்ற காரை பல முறை வாங்கியுள்ளார். இதன் முதல் தலை முறை காரிலிருந்து ஏகப்பட்ட கார்களை வாங்கியுள்ளார். இ்நத கார்களை எல்லாம் அவரது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதனால் இந்த காரும் அவருக்கு பிடி்ததமாக காராக இருக்கிறது.
மேலும் லாரி ஆடி ஆர்8 காரை பயன்படுத்துவதை அடிக்கடி பார்க்க முடிந்தது. பல இடங்களுக்கு இவர் இந்த காரில் பயணித்துள்ளார். இந்த கார் அதிக ஃபெர்பார்மென்ஸ் ஸ்போர்ட்ஸ் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. பல பணக்காரர்கள் இந்த காரை சொந்தமாக வைத்துள்ளது.

இது மட்டுமல்ல இவரிடம் லெக்ஸஸ் நிறுவனம் எல்எஃப்ஏ காரும் இருக்கிறது. இந்த காரை் லெக்ஸஸ் நிறுவனத்தின் சூப்பர் காராகும். இதையும் இவர் வாங்கியுள்ளதாக இவற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது. இது போக லெக்ஸஸ் நிறுவனத்தின் சொகுசு செடான் காராக எல்எஸ் 600எச் என்ற சொகுசு ஹைபிரிட் காரையும் இவர் சொநதமாக வைத்துள்ளார்.
இது போக ஃபெராரி நிறுவனத்தின் லிமிடெட் எடிசன் காராக ஃபெராரி என்ஸோ என்ற காரை இவர் சொந்தமாக வைத்துள்ளார். இந்த கார் லிமிடெட் எடிசன் கார் என்பதால் ஸ்பெஷலனாக காராக இருக்கிறது. இந்த கார் வரை தற்போது பொது வெளியில்தகவல்கள் உள்ளன. மற்ற வேறு எந்த காரை வைத்துள்ளார் என்ற விபரங்கள் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லாரி எல்லிசன் தற்போது உலக பணக்காரராக மாறியுள்ள நிலையில் தற்போது இவரிடம் உள்ள கார்கள் குறித்த தகவல்கள் தற்போது சமூகவலைத்தளில் வைரலாக பரவி வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓவான எலான் மஸ்கையே தூக்கி சாப்பிடும் வகையில் தற்போது இவர் வளர்ந்துள்ளார். இவரது வளர்ச்சி பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இவரிடம் உள்ள கார்கள் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









