பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கிட்டி ஹவாக் நிறுவனத்தின் 'ப்ளையர்' என்ற பறக்கும் காரின் இறுதி வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.

By Arun

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கிட்டி ஹவாக் நிறுவனத்தின் 'ப்ளையர்' என்ற பறக்கும் காரின் இறுதி வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. பறக்கும் கார் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் ப்ளையரின் சிறப்பம்சங்கள் குறித்து பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் லாரி பேஜ். இவரது ஆதரவுடன் கிட்டி ஹவாக் என்ற பறக்கும் கார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுண்டெய்ன் வியூ என்ற நகரை அடிப்படையாக கொண்டு கிட்டி ஹவாக் நிறுவனம் இயங்கி கொண்டுள்ளது.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

கிட்டி ஹவாக் நிறுவனத்தை கட்டமைக்கும் பணிக்காக, லாரி பேஜ் கடந்த சில ஆண்டுகளை செலவிட்டுள்ளார். பறக்கும் கார்களை உருவாக்கும் பணயில், கிட்டி ஹவாக் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 'ப்ளையர்' என்ற பறக்கும் காரின், முதல் வெர்ஷனை கடந்தாண்டு அறிமுகம் செய்திருந்தது.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

எனினும் அதன் இறுதி வெர்ஷன் குறித்த தகவல்கள் மர்மமாகவே இருந்தன. இந்நிலையில், கிட்டி ஹவாக் நிறுவனத்தின் 'ப்ளையர்' பறக்கும் காரின் இறுதி வெர்ஷன் முதல் முறையாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு 'ப்ளையர்' பறக்கும் காரின் இறுதி வெர்ஷனை, கிட்டி ஹவாக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

'ப்ளையர்' பறக்கும் காரை வாங்க விருப்பம் உள்ளவர்கள், பயிற்சிக்கு செல்லலாம். வெறும் ஒரு மணி நேர பயிற்சி எடுத்தாலே, 'ப்ளையர்' பறக்கும் காரை ஓட்டி விட முடியும் என கிட்டி ஹவாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

'ப்ளையர்' பறக்கும் கார், முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வாகனம் ஆகும். இதில், 10 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி, தரைமட்டத்தில் இருந்து 3 முதல் 10 அடி வரையிலான உயரத்தில் பறக்கலாம்.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

'ப்ளையர்' பறக்கும் காரின் தற்போதைய வெர்ஷனில், மணிக்கு 20 மைல் வேகத்தில் (மணிக்கு 32 கிலோ மீட்டர்) செல்ல முடியும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 20 நிமிடங்கள் பயணிக்கலாம். முற்றிலும் செங்குத்தாக டேக் ஆப் ஆக முடியும். அதே முறையில் லேண்டிங்கும் செய்து கொள்ளலாம். எனவே ஓடுபாதை தேவையில்லை.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

இந்த பறக்கும் காரின் மற்றொரு குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், இதனை ஓட்ட பைலட் லைசென்ஸ் தேவையில்லை. ஜாய் ஸ்டிக் மூலமாக இதனை இயக்கலாம். ஆனால் ஒரே ஒரு சீட்தான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஒருவர்தான் பயணிக்க முடியும்.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

'ப்ளையர்' பறக்கும் காருக்கு தற்போது ஆர்டர் செய்ய முடியும். ஆனால் அதன் விலை விபரங்களை, கிட்டி ஹவாக் நிறுவனம் வெளியிடவில்லை. அதே போன்று எப்போது விற்பனைக்கு? வரும் என்ற தகவல்களும் வெளியிடப்படவில்லை. கிட்டி ஹவாக் நிறுவனத்தின் பறக்கும் கார் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பறக்கும் கார்களை பயன்படுத்தினால், சாலை மார்க்கத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் தப்பித்து கொள்ள முடியும். இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற மைய கருத்தை அடிப்படையாக வைத்துதான் தனிநபர் பறக்கும் கார்களை கிட்டி ஹவாக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பறக்கும் காரை களத்தில் இறக்கினார் கூகுள் இணை நிறுவனர்... மர்மங்கள் விலகியது...

அதே நேரத்தில் உபேர், டொயோட்டா உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களும் கூட பறக்கும் கார் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 4 முதல் 6 பேர் வரை பயணிக்கும் வகையிலான பறக்கும் கார்களை தயாரிக்கும் பணியில் அத்தகைய நிறுவனங்கள் ஈடுபாடு காட்டி வருகின்றன.

Article Published On: Thursday, June 7, 2018, 16:15 [IST]
English summary
Larry Page's newest flying car is fit for one and operated by joystick. read in tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+