விமானிகளுக்கும், விமான பயணிகளுக்கும் பேராபத்தை தரும் லேசர் லைட் தாக்குதல்கள்!

Written By:

அறிவியல் துறையின் வேகமான வளர்ச்சி காரணமாக, நவீன தொழில்நுட்பங்களை மிக மலிவான விலையில் எளிதாக கிடைக்கப் பெறும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்த வகையில், அறுவை சிகிச்சை முதல், பாதுகாப்புத் துறை வரை இன்று வியாபித்து இருக்கும் லேசர் கதிர்வீச்சு தொழில்நுட்பமும் அளப்பரிய முன்னேற்றத்தையும், பயன்பாட்டையும் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி சில வேளைகளில் மனித குல அழிவுக்கும் பாதை வகுத்து கொடுக்கிறது.

அதேபோன்றதொரு தொழில்நுட்பமான லேசர் விளக்குகள் இன்று குழந்தைகள் வரை பெறும் அளவுக்கு மலிவானதாக மாறியிருக்கிறது. அதேநேரத்தில், இந்த லேசர் விளக்குகளால் விமானிகளுக்கும், விமான பயணிகளுக்குமான பேராபத்தை விளைவிக்கும் கருவியாகவும் மாறியிருக்கிறது. சிலர் விளையாட்டுக்கும், சிலர் விஷமத்தனமாகவும் லேசர் லைட்டுகளை வைத்து செய்யும் காரியங்களால் விமான போக்குவரத்து துறைக்கு பெரும் இன்னல்களும், மாபெரும் சவாலாகவும் மாறியிருக்கிறது.

லேசர் ஆபத்து

லேசர் ஆபத்து

தரையிலிருந்து பாய்ச்சியடிக்கப்படும் லேசர் விளக்குகளின் ஒளிக்கற்றைகளால் விமானிகள் நிலைகுலைந்து போகும் ஆபத்து இருக்கிறது. ஏன் அவர்கள் பார்வை பறிபோகும் ஆபத்து கூட ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய சம்பவம்

சமீபத்திய சம்பவம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரை இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தின் மீது லேசர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், விமானத்தை இயக்கிய விமானியின் சுகவீனம் ஏற்பட்டு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் வெர்ஜின் அட்லாண்டிக் விமானத்தின் விமானி லேசர் தாக்குதலால், கண்களின் கருவிழி பெரிதும் பாதிக்கப்பட்டு, அவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்ட சோகம் நடந்தது.

 திக், திக்...

திக், திக்...

அத்துடன், அந்த விமானத்தை கடும் சிரத்தையுடன் அவர் துணை விமானியின் உதவியுடன் தரை இறக்கினார். இதனால், பல நூறு பயணிகள் உயிர் பிழைத்தனர். இருப்பினும், சிறிய பிசகு ஏற்பட்டாலும், அந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்க்கூடும்.

கோழிக்கோட்டில் சம்பவம்

கோழிக்கோட்டில் சம்பவம்

கடந்த மாதம் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்க முற்பட்டபோது, இதேபோன்று லேசர் லைட் தாக்குதல் நடத்தப்பட்டது. இது பல நூறு பயணிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை தந்தது.

விசாரணை பகீர்

விசாரணை பகீர்

கோழிக்கோட்டில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், 15 கிமீ தூரத்திற்கு அப்பால் இருந்து அந்த லேசர் லைட் விமானத்தின் மீது அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, விஷமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையிலும்...

சென்னையிலும்...

இது உலக அளவிலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் கூட இதுபோன்ற லேசர் லைட் தாக்குதல்கள் நடந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான லேசர் தாக்குதல் சம்பவங்கள் உலக அளவில் பரவலாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

 பதிவான சம்பவங்கள்

பதிவான சம்பவங்கள்

அமெரிக்காவின் விமான போக்குவரத்துத் துறை புள்ளிவிபரங்களின்படி, 2005ம் ஆண்டில் 311 லேசர் தாக்குதல் சம்பவங்களும், 2006ல் 441 சம்பவங்களும், 2007ம் ஆண்டு 643 சம்பவங்களும், 2008ம் ஆண்டில் 955 சம்பவங்களும், 2009ம் ஆண்டில் 1527 சம்பவங்களும், 2010ம் ஆண்டில் 2836 சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. இது ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்து வருவதுதான் சவாலாக மாறியிருக்கிறது.

சக்திவாய்ந்த கருவிகள்

சக்திவாய்ந்த கருவிகள்

சிவப்பு வண்ண லேசர் விளக்குகள் பழைய புராணமாகிவிட்டன. தற்போது பச்சை நிற லேசர் விளக்குகள்தான் விமானிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. இவை மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாக உள்ளதாகவும் விமானிகள் தெரிவிக்கின்றன.

வீரியம்

வீரியம்

தற்போது சில லேசர் லைட்டுகள் 320 கிமீ தூரம் வரை ஒளிக்கற்றையை பீய்ச்சியடிக்கும் வீரியம் கொண்டதாக கிடைக்கிறது.

மூன்று பிரச்னைகள்

மூன்று பிரச்னைகள்

லேசர் தாக்குதல்களால் விமானிகள் மூன்றுவிதமான பாதிப்புகளை சந்திக்கின்றனர். கவனச்சிதறல், எதிரொலிப்பு காரணமாக பார்வை திறன் குறைதல், கண்ணின் கருவிழியில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையிழப்பு போன்ற பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

முக்கிய பாதிப்பு

முக்கிய பாதிப்பு

தரையிலிருந்து குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் விமானத்தின் முன்பக்க கண்ணாடிகளில் லேசர் விளக்கு ஒளியை பாய்ச்சியடித்து, தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, ஏறும்போதும், தரையிறங்கும்போதும் இது பேராபத்தை ஏற்படுத்தும் விஷயமாகியிருக்கிறது.

பார்வை திறன் குறையும்

பார்வை திறன் குறையும்

இது விமானத்தின் கண்ணாடிகளில் படும்போது பெரும் ஒளிப் பிழப்பு போன்ற பிரதிபலிப்பை வழங்குகின்றன. இதனால், விமானிகளின் கண்களில் பெரும் பாதிப்புகளை உண்டாக்குவதுடன், பார்வை திறன் குறைந்து விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி விபத்தை சந்திக்க நேரிடும் வாய்ப்பும் எழுகிறது.

பாதுகாக்கப்பட்ட பகுதி

பாதுகாக்கப்பட்ட பகுதி

லேசர் லைட் தாக்குதல்களை சமாளிக்கும் விதத்தில், விமான ஓடுபாதைகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கி வருகின்றனர். இதில் தரையிறங்கும்போது லேசர் லைட் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வழி இருக்கிறது. மேலும், 12,000 அடிக்கு மேலே செல்லும்போது லேசர் லைட் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க முடியும்.

பைலட்டுகளுக்கு அறிவுரை

பைலட்டுகளுக்கு அறிவுரை

கடும் லேசர் லைட் தாக்குதல்களை சந்திக்கும்போது, கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவலை சொல்லிவிட்டு, ஆட்டோ பைலட் மோடில் வைத்து விமானத்தை இயக்க பைலட்டுகள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், லேசர் வரும் திசையை பார்க்காமல், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்பு மீது கவனத்தை செலுத்துமாறும், கண்களை கசக்க வேண்டாம் என்றும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

தாக்குதல் நேரம்

தாக்குதல் நேரம்

பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் லேசர் லைட் தாக்குதல்கள் அதிகமிருக்கிறது. இதனால், ஓடுபாதையை சரியாக கணித்து விமானத்தை செலுத்த முடியாத நிலைக்கு விமானிகள் தள்ளப்படுகின்றனர்.

மோதல் அபாயம்

மோதல் அபாயம்

பரபரப்பு மிகுந்த விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் பல விமானங்கள் தரையிறங்கவும், மேலே ஏறவும் முயற்சிக்கும் வேளையில் இதுபோன்ற லேசர் லைட் தாக்குதல்கள் பெரும் இடையூறை ஏற்படுத்துவதுடன், வானிலேயே விமானங்கள் மோதிக் கொள்ளும் அபாயத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

கடும் சட்டங்கள்

கடும் சட்டங்கள்

பல நாடுகளில் விமானங்களின் மீது லேசர் விளக்குகளை கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு, சிறை தண்டனை மற்றும் அதிக அபராதங்கள் விதிக்கும் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், அவற்றிற்கு போதிய பலன் கிட்டவில்லை என்பது, லேசர் லைட் தாக்குதல்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லிவிடலாம்.

 கள்ளச்சந்தை

கள்ளச்சந்தை

ஆயுதமாக பயன்படுத்தும் அதிக திறன் கொண்ட லேசர் விளக்குகள் கள்ளச்சந்தையில் மலிவான விலையில் கிடைக்கிறது. இதனை தடுத்தால்தான், இதுபோன்ற தாக்குதல்களின் எண்ணிக்கை குறையும் என்று விமான போக்குவரத்துத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

மலிவு விலை

மலிவு விலை

ரூ.150 முதல் ரூ.4,000 வரை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்கும் வாய்ப்பும் இருக்கிறது.

 சிறை தண்டனை

சிறை தண்டனை

கடந்த ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஒருவர் போலீஸ் ஹெலிகாப்டர் மீது லேசர் லைட் தாக்குதல் நடத்தியதற்காக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமரிக்காவில் 11,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோன்று, பல நாடுகளில் கடுமையான அபாரதங்கள் விதிக்கப்படுகின்றன.

சவால்கள்

சவால்கள்

லேசர் லைட் தாக்குதல் நடத்தும் இடத்தை கண்டறிவதிலும், அந்த விஷமிகளை பிடிப்பதிலும் பெரும் சவால்கள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தீர்வுகள்

தீர்வுகள்

கள்ளச்சந்தையில் இதனை தடுப்பதும், இதனால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்பை ஏற்படுத்துமே தீர்வாக அமையும்.

 திருந்தாத ஜென்மங்கள்

திருந்தாத ஜென்மங்கள்

அதையும் தாண்டி திருடனாக பார்த்து திருந்தாவிட்டால், இந்த லேசர் தாக்குதல் சம்பவங்களை தடுப்பது கடினமாகவே இருந்து வருகிறது.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

விமானிகளின் கண்களுக்கு கூச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துவதுதான் பிரச்னை. மற்றபடி, விமான ஏவியோனிக்ஸ் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களை இந்த லேசர் லைட் தாக்குதல்களால் பாதிப்படையாது என்று நிபுணர்கள் தெரிவிப்பது ஆறுதல்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Laser Beam Attack: A New Threat For Pilots and Air Travellers.
Please Wait while comments are loading...

Latest Photos