மீண்டும் ஏலத்திற்கு வந்த போப் ஆண்டவரின் ஃபெராரி கார்... சுவாரஸ்ய பின்னணி!
ஃபெராரி நிறுவனத்தின் ரசிகர்களையும், உரிமையாளர்களையும் கவர்ந்த மாடல் ஃபெராரி என்ஸோ. ஃபெராரி நிறுவனரின் பெயரில் வெளியிடப்பட்ட மாடல் என்பதுடன், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதுதான் ரசிகர்களை கவர்ந்ததற்கு காரணம்.
லிமிடேட் எடிசனாக தயாரிக்கப்பட்ட இந்த மாடலில் ஒன்றை கூடுதலாக தயாரித்து போப் இரண்டாம் ஜான்பாலுக்கு ஃபெராரி கார் நிறுவனம் பரிசளித்தது. அந்த கார் இப்போது ஏலத்திற்கு வர இருக்கிறது. கூடுதல் சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஏல விபரம்
வரும் ஆகஸ்ட் 13ந் தேதி முதல் 15ந் தேதிக்குள் இந்த காரை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆர்எம் ஏல நிறுவனம் இந்த காரை ஏலத்தில் விடுவதற்கான அதிகாரப்பூர்வ நிறுவனமாக செயல்பட உள்ளது.

இது தெரியுமா?
எத்தனை ஃபெராரி என்ஸோ கார்கள் தயாரிக்கப்பட்டன என்று கேட்டால், 399 என்று பட்டென பதில் வரும். ஏனெனில், மொத்தமாகவே 399 கார்களை தயாரிக்க இருப்பதாக ஃபெராரி அறிவித்தது. முதலில் நிர்ணயிக்கப்பட்ட 349 என்ற எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வந்த வேண்டுகோளின்படி, 399 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர், 400வது என்ஸோ கார் ஒன்றை போப் இரண்டாம் ஜான் பாலுக்காக தயாரித்து பரிசளித்தது ஃபெராரி. ஏற்கனவே, 1.1 பில்லியன் டாலர் விலையில் ஏலம் விடப்பட்ட இந்த கார் மீண்டும் மறு ஏலத்திற்கு வந்துள்ளது.

எக்ஸ்ட்ரா ஆக்சஸெரீகள்
இந்த காரில் கார்பன் ஃபைபர் ரியர் ஸ்பாய்லர் உள்ளிட்ட சில கூடுதல் ஆக்சஸெரீகளை ஆலையிலேயே பொருத்தி, போப் ஆண்டவருக்கு ஃபெராரி பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

போப் ஆசிர்வாதம்
ஏலம் விடப்பட உள்ள இந்த காரை போப் ஆண்டவர் ஆசிர்வதித்துள்ளார். எனவே, இந்த காரை ஏலத்தில் எடுக்க, கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஸோ கார் பற்றி...
ஃபார்முலா ஒன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதாரண சாலையில் ஓட்டும் அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட கார் மாடல். இதில், 12 சிலிண்டர் எஞ்சின் கொண்டது.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அழைப்பு
ஏற்கனவே, ஃபெராரி எஃப்30 மற்றும் எஃப்40 கார்களை வாங்கியிருந்த ஃபெராரி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டது. ஃபார்முலா ஒன் கார்களை போன்ர ஆக்டிவ் ஏரோடைனமிக்ஸ் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருப்பதால், இந்த கார் மணிக்கு 300 கிமீ வேகம் வரை தொடக்கூடியதாக இருக்கிறது.

ஜப்பானிய டிசைனர்
இந்த காரை ஜப்பானை சேர்ந்த கென் ஒகுயாமா என்ற பிரபல டிசைனர் வடிவமைத்தார். இவர் பினின்ஃபரீனா நிறுவனத்தின் முன்னாள் டிசைனராக பணியாற்றியவர்.


Click it and Unblock the Notifications








