கர்நாடக அரசியலை புரட்டி போட்டவரின் மகனா இது? இவ்வளவு சின்ன வயதில் இப்படி ஆகும்னு யாரும் எதிர்பார்க்கல!!

புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar), இந்த பெயரை அவ்வப்போது கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். மறைந்த பிரபல கன்னட நடிகர். கர்நாடக மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருப்பவர். இவரது தந்தை தான் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆவார். கர்நாடக அரசியல் களத்திலும் ராஜ்குமார் ஆற்றிய பங்களிப்பு இன்றியமையாதது. தந்தையை போல் மகனும் கர்நாடக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு மக்களின் ஆதரவு புனீத் ராஜ்குமாருக்கு இருந்தது. ஆனால், 46 வயதிலேயே நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

புனீத் ராஜ்குமாரின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (அக்.29). இவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய மனிதரிடம் என்னென்ன சொகுசு கார்கள் இருந்தன? இவர் உயிருடன் இருந்த சமயத்தில் என்னென்ன மாதிரியான விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தினார் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

puneeth rajkumar used luxury cars

ஆடி க்யூ7 (Audi Q7): கன்னட நடிகர், நடிகைகளுக்கு பொதுவாகவே ஆடி கார்கள் மீது கூடுதல் ஈர்ப்பு உள்ளது. க்யூ7 ஆனது ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அளவில் பெரியதான எஸ்யூவி கார் ஆகும். புனீத் ராஜ்குமார் வாங்கிய இந்த ஆடி காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 248 பிஎச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

puneeth rajkumar used luxury cars

ஜாகுவார் எக்ஸ்.எஃப் (Jaguar XF): ஆடி காரை போன்று இந்த ஜாகுவார் காரையும் மறைந்த புனீத் ராஜ்குமார் பயன்படுத்தினார். இவர் வாங்கிய சமயத்தில் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்ட இந்த ஜாகுவார் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

puneeth rajkumar used luxury cars

லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue): இந்த ரேஞ்ச் ரோவர் காருடன் புனீத் ராஜ்குமார், மனைவி அஷ்வினி ரெவந்த் உடன் காட்சித்தரும் படம் ஒன்று இணையத்தில் உள்ளது. இந்த காரை வெள்ளை நிறத்தில் இவரது குடும்பம் வைத்துள்ளது. இந்த காரின் விலை அந்த சமயத்திலேயே ரூ.80 லட்சம் என்கிற அளவில் இருந்தது. இந்த ரேஞ்ச் ரோவர் காரில் 2993சிசி 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

puneeth rajkumar used luxury cars

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): 2019ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக இந்த லம்போர்கினி காரை பளபளக்கும் நீல நிறத்தில் மனைவிக்கு புனீத் ராஜ்குமார் பரிசளித்து இருந்தார். லம்போர்கினியின் முதல் எஸ்யூவி கார் உருஸ் ஆகும். மிகவும் பவர்ஃபுல்லான லம்போர்கினி காராக விளங்கும் உருஸில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது.

puneeth rajkumar used luxury cars

இந்தியன் ஸ்காட் (Indian Scout): இந்தியன் பெயரை கொண்டிருப்பினும், இது ஒரு விலையுயர்ந்த அமெரிக்க மோட்டார்சைக்கிள் ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் என்கிற அளவில் உள்ளது. இதற்கேற்ப இந்த பைக்கில் 1131சிசி, லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 97.7 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

puneeth rajkumar used luxury cars

மஹிந்திரா தார் (Mahindra Thar): புனீத் ராஜ்குமாரிடம் முதல் தலைமுறை மஹிந்திரா தார் வாகனம் ஒன்றும் இருந்தது. புனீத்தின் மிகவும் விருப்பமான வாகனமாக இது விளங்கியது. இதில் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் உள்ளது. பிரபலமான மாருதி சுஸுகி ஜிப்ஸிக்கு போட்டியாக மஹிந்திரா இதனை அறிமுகம் செய்தது. தற்சமயம் விற்பனையில் இருப்பது 2ஆம் தலைமுறை மஹிந்திரா தார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கன்னட மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய புனீத் ராஜ்குமார் மறைந்து அதற்குள் 3 வருடங்கள் உருண்டோடிவிட்டன. மேலே குறிப்பிடப்பட்ட கார்கள் மட்டுமின்றி, இவரிடம் பிஎம்டபிள்யூ கார் ஒன்றும் இருந்தது. அதுகுறித்த போதிய விபரங்கள் கிடைக்க பெறவில்லை. புனீத் பயன்படுத்திய கார் & பைக்குகளுள் உங்களது ஃபேவரட் எது என்பதை கீழே கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 23:25 [IST]
English summary
Late actor puneeth rajkumar used luxury cars collections audi q7 to mahindra thar
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X