மறைந்த அந்த பிரபல நடிகரின் மனைவியா இது!! விலையுயர்ந்த காருக்கு ஓனராகி உள்ளார் - விலை எவ்வளவு தெரியுமா?

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மனைவி புதியதாக விலையுயர்ந்த ஆடி சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். டெலிவிரி எடுக்கப்பட்ட புதிய காருடன் புனீத் ராஜ்குமாரின் மனைவி நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், இந்தியாவில் மிக பிரபலமான நடிகர்கள் என்று பார்த்தால், அதில் புனீத் ராஜ்குமாரும் ஒருவராக இருப்பார். அந்த அளவிற்கு, புனீத் ராஜ்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் என கூறுவதை காட்டிலும் புனீத் ராஜ்குமாரின் பக்தர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ashwini puneeth rajkumar buys audi

ஏழை, எளிய மக்கள் பலருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ள புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு மாநில ரத்னா விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. இவ்வளவு பிரபலமானவராக இருப்பதினாலேயே, புனீத் ராஜ்குமாரின் குடும்பத்தினரையும் கன்னட மக்கள் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இந்த நிலையில்தான், மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி புதியதாக விலையுயர்ந்த ஆடி காரை வாங்கியுள்ளார்.

அஷ்வினி புனீத் ராஜ்குமார் வாங்கியிருப்பது ஆடி நிறுவனத்தின் லக்சரி எஸ்யூவி காரான க்யூ7 (Q7) ஆகும். ஆடி க்யூ7 எஸ்யூவி காரை கிரே நிறத்தில் அஷ்வினி வாங்கியுள்ளார். ஷோரூமில் இருந்து எடுக்கும்போது அஷ்வினி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெங்களூரில் செயல்படும் ஆடி ஷோரூம் ஒன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பி.ஆர்.கே புரோடெக்‌ஷன்ஸ் என்கிற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அஷ்வினி புனீத் ராஜ்குமார் நடத்தி வருகிறார். இந்த புரோடெக்‌ஷன்ஸ் கம்பெனியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதேபோல், பெண் தொழிற்நுட்ப நிபுணர்களுக்கும் தனது புரோடெக்‌ஷன்ஸ் கம்பெனியில் அஷ்வினி முன்னுரிமை அளிக்கிறார்.

அட்வான்ஸ்டு வசதிகள் மற்றும் தொழிற்நுட்பங்களுடன் உருவாக்கப்படும் ஆடி க்யூ7 எஸ்யூவி காரில் 3.0 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு, பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ashwini puneeth rajkumar buys audi

இந்த காரில் மைல்ட்-ஹைப்ரீட் பவர்டிரெயின் வழங்கப்படுகிறது. அதாவது, என்ஜின் சிஸ்டத்துடன் 48-வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரில் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தில் இந்த லக்சரி காரை ஓட்ட முடியும். இந்த ஆடி காரில் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

ஆடி க்யூ7 காரில் 19-இன்ச் அலாய் சக்கரங்கள், 8 ஏர்பேக்குகள், பனோராமிக் சன்ரூஃப், எல்இடி ஹெட்லேம்ப்கள், அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் எலக்ட்ரிக்கல்லி-அட்ஜெஸ்டபிள் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. ஆடி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் காரை கடந்த ஜனவரி மாதத்தில் வெளியீடு செய்தது. ஆனால், புதிய க்யூ7 ஃபேஸ்லிஃப்ட் கார் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் ரூ.1.10 கோடியாக உள்ளது. அதாவது, மிகுந்த விலைமிக்க ஆடி கார் கிடையாது, அதேபோல் இது விலை குறைவான காரும் கிடையாது. இவ்வளவு விலை கொண்ட காரை வாங்குவது திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருக்கு பெரிய விஷயமே கிடையாது.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 19:58 [IST]
English summary
Late actor puneeth rajkumar wife ashwini buys audi q7 check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+