காங்கிரசார் 'கை' விட்ட கர்ம வீரர் காமராஜர் கார் பற்றிய தகவல்கள்!

By Saravana

ஓட்டு போட்ட கையுடன் மக்களை 'கை' கழுவி விடும் இக்காலக்கட்டத்தில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் முக்கியமானவர். தமிழகத்தின் கல்விக் கண் திறந்த தலைவராக போற்றப்படும் கர்ம வீரர் காமராஜர் தமிழக முதல்வராக 9 ஆண்டுகாலம் இருந்தவர்.

இன்றைக்கும் பலரின் முன்மாதிரி தலைவராக திகழும் காமராஜரின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வதற்கு அவர் பயன்படுத்திப் பொருட்களும் சான்றாக இருக்கின்றன. இந்த நிலையில், காமராஜர் பயன்படுத்திய கார் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியிலும், காமராஜரை போற்றுபவர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பரிதாப நிலையில் இருக்கும் அந்த கார் பற்றிய சில தகவல்களை காணலாம்.

காமராஜர் கார்

காமராஜர் கார்

தமிழக முன்னாள் முதல்வராக இருந்த காமராஜர் பயன்படுத்தியது கருப்பு நிற செவர்லே கார். தொழிலதிபர் டிவிஎஸ். சுந்தரம் அய்யங்காரால் வழங்கப்பட்டது.

அரசு கார் வேண்டாம்...

அரசு கார் வேண்டாம்...

இப்போதைய அரசியல்வாதிகள், பதவிக்காலம் முடிந்தும் அரசு வீடு, காரை திருப்பி தராமல் இழுத்தடிக்கும் வேளையில், முதல்வராக பதவி வகித்தபோது அரசு காரை பயன்படுத்தாமல் இந்த காரையே பயன்படுத்தினார்.

கார் விற்பனை

கார் விற்பனை

1975ம் ஆண்டு காமராஜர் மறைந்தார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சிக்கு நிதி திரட்டுவதற்காக காமராஜர் பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்தனர். அதில், இந்த செவர்லே காரும் அடக்கம். மேலும், காரை விற்பதற்காக ரூ.2,000 முன்பணமாகவும் பெற்றுவிட்டனர். ஆனால், கவியரசு கண்ணதாசன் வெளியிட்ட கவிதையால் அந்த காரை திரும்பவும் பெற்றனர். மேலும், முன்பணத்தை திருப்பி கொடுத்துவிட்டனர் அப்போதைய காங்கிரஸ் நிர்வாகிகள்.

பராமரிப்பு

பராமரிப்பு

அவ்வாறு பெறப்பட்ட அந்த கார் தற்போது பராமரிப்பு இல்லாமல் இருப்பது காமராஜரை போற்றுபவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்

வருவாய்

தற்போது காங்கிரஸ் கட்சிக்கு காமராஜர் அரங்கம் உள்ளிட்டவைகளின் வாயிலாக நல்ல வருவாய் இருக்கும்போது, காமராஜர் காரை பராமரிப்பு என்பது பெரிய விஷயமில்லை என்கின்றனர்.

எம்ஜிஆர் கார்

எம்ஜிஆர் கார்

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கார் தியாகராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிறப்பாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, காமராஜர் காரையும் பராமரிப்பு செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Wednesday, July 15, 2015, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X