கர்ம வீரர் காமராஜரின் காரை 'கை' விட்ட காங்கிரசார்!
ஓட்டு போட்ட கையுடன் மக்களை 'கை' கழுவி விடும் இக்காலக்கட்டத்தில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த தலைவர்களில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 39 வது நினைவுதினம் இன்று. தமிழகத்தின் கல்விக் கண் திறந்த தலைவராக போற்றப்படும் கர்ம வீரர் காமராஜர் தமிழக முதல்வராக 9 ஆண்டுகாலம் இருந்தவர்.
இன்றைக்கும் பலரின் முன்மாதிரி தலைவராக திகழும் காமராஜரை நினைவு கூற அவர் பயன்படுத்திப் பொருட்களும் சான்றாக இருக்கின்றன. இந்த நிலையில், காமராஜர் பயன்படுத்திய கார் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியிலும், காமராஜரை போற்றுபவர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவலைக்குரிய நிலையில்..
காமராஜர் அரங்கத்தின் பின்புற நுழைவாயில் அருகில் உள்ள கூண்டு அறையில் தூசிகள் படிந்த நிலையில், காயலாங்கடைக்கு செல்வதற்கு கூட தகுதியில்லாமல் நிற்கின்றது காமராஜர் பயன்படுத்திய கார். அவரது அருமை, பெருமைகளை அடுக்கும் தலைவர்கள், அந்த அரங்கத்தின் பின்புறம் நிற்கும் கார் பக்கம் மறந்தும் திரும்புவதில்லை.

முட்டுக்கொடுத்து நிற்கும் கார்
சக்கரங்கள் பராமரிப்பு இல்லாததால் முட்டுக் கொடுத்து அந்த கார் நிற்க வைக்கப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் கார்
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் கார் தியாகராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சிறப்பாக பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, காமராஜர் காரையும் பராமரிப்பு செய்ய வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

பராமரிப்புக்கு பணம்?
காமராஜர் அரங்கத்தின் மூலம் நல்ல வருவாய் இருப்பதால் இந்த காரை எளிதாக பராமரிக்க முடியும். மேலும், தனியாரிடம் இந்த காரை ஒப்படைத்தால் சிறப்பாக பராமரிப்பர் என்பதும் பலரது ஆதங்கம்.

நடவடிக்கை எடுக்கப்படுமா
இன்னும் சில காலத்தில் அந்த காரை பார்ட் பார்ட்டாக கழற்றி குப்பையில் வீச வேண்டிய நிலை வந்துவிடும். அதற்கு முன்னதாக இந்த காரை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதே எமது ஆதங்கம்.


Click it and Unblock the Notifications








