இறந்த மகனின் நினைவா இப்போதைக்கு இது மட்டுமே இருக்கு! டொயோட்டா ஷோரூமில் நிற்கும் இவர் யாரென்று தெரிகிறதா?

சித்து மூஸ்வாலா (Sidhu Moose Wala), பிரபலமான பஞ்சாபி பாடகர் (Punjabi Singer) மற்றும் ராப் சிங்கர் (Rap Singer). பஞ்சாபி பாடகர் என்பதை தாண்டி, பாலிவுட் (Bollywood) சினிமாவிலும் கவனத்தை ஈர்த்தவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 2022ஆம் ஆண்டில் மர்ம நபர்களால் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகராக சித்து மூஸ்வாலா விளங்கினார். மறைந்த இந்த பஞ்சாபி பாடகரின் அடையாளமாக பாடல்கள் பலவற்றை கூறலாம்.

அதேபோல், சித்து மூஸ்வாலாவின் அடையாளமாக அவரது வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை சொல்லலாம். சினிமாவில் வளர்ந்த பிறகு சொகுசு கார்களை வாங்கும் அளவிற்கு பணம் சேர்ந்துவிட்டாலும், அந்த வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் தான் பரவலாக சித்து மூஸ்வாலா வெளியில் காட்சி தந்தார்.

balkaur singh buys toyota fortuner

இதற்காக, தனது ஃபார்ச்சூனர் காரை புல்லட்-ப்ரூஃப் ஆக அவர் மாற்றி வைத்திருந்தார். சித்து மூஸ்வாலா இறக்கும் தருவாயில்கூட அவர் அந்த புல்லட்-ப்ரூஃப் ஃபார்ச்சூனர் காரை தான் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பிறகு அந்த வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரை சித்து மூஸ்வாலாவின் குடும்படுத்தினர் விற்றுவிட்டனர்.

சித்து மூஸ்வாலா பயன்படுத்திய கார் என்பதினாலேயே அதற்கு நல்ல மதிப்பு கிடைத்த நிலையில், அந்த காரை பஞ்சாபி தொழிலதிபர் ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் வாங்கி பயன்படுத்தி வருகிறார். பஞ்சாப் சிந்த் பிரீமியம் டைரி (Punjab Sindh Premium Dairy) என்கிற பால்-சார்ந்த பொருட்களின் உற்பத்தி செய்யும் கம்பெனியின் இயக்குனராக ஸ்வாரஞ்சித் சிங் பஜாஜ் உள்ளார்.

balkaur singh buys toyota fortuner

இவர் சமீபத்தில்தான் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) என்கிற லக்சரி காரை பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் வாங்கியதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்கர் சிங் (Balkaur Singh) பிராண்ட்-நியூ டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

இதில், ஹைலைட் என்னவென்றால், மறைந்த மகன் பயன்படுத்தியதை போலவே வெள்ளை நிறத்தில் ஃபார்ச்சூனர் காரை இவர் வாங்கியுள்ளார். சித்து மூஸ்வாலாவின் தந்தை புத்தம் புதிய ஃபார்ச்சூனர் காரின் சாவியை பெறும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஃபார்ச்சூனர் கார் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்டது கிடையாது.

balkaur singh buys toyota fortuner

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் ஸ்டாண்டர்ட் மற்றும் லெஜண்டர் என 2 விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஃபார்ச்சூனர் காரின் விலைகள் ரூ.33.78 லட்சத்தில் இருந்து ரூ.51.94 லட்சம் வரையில் உள்ளன. அதுவே, ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரின் விலைகள் ரூ.44.11 லட்சத்தில் இருந்து ரூ.48.09 லட்சம் வரையில் உள்ளன.

இதில், சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்கர் சிங் வாங்கியிருப்பது ஸ்டாண்டர்ட் ஃபார்ச்சூனர் கார் ஆகும். இந்தியாவில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டில் அப்டேட் செய்யப்பட்டது. புதிய ஃபார்ச்சூனரில் புதிய முகப்பு பகுதி, டி.ஆர்.எல்-கள் உடன் ரீ-டிசைனில் எல்இடி ஹெட்லைட்கள், பெரிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

balkaur singh buys toyota fortuner

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மறைந்த மகனின் நினைவாக பல்கர் சிங் இந்த ஃபார்ச்சூனர் காரை வாங்கியிருப்பது, காரின் நிறத்தை பார்த்தாலே தெரிகிறது. இதற்கு பழைய புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் காரையே வைத்திருக்கலாமே என உங்களில் சிலர் நினைக்கலாம். சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்ட போது அவர் பயன்படுத்திய கார் என்பதால், அதை பார்க்கும்போது எல்லாம் மகனின் நினைவு ஏற்படும் என்பதால் அதனை விற்றுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 1, 2025, 14:19 [IST]
English summary
Late singer sidhu moose wala father balkaur singh buys toyota fortuner
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X