இவர்தானா அந்த தொழிலதிபர்...? மொத்தமும் ரியல் எஸ்டேட் பணம்... டெஸ்லா காரை எல்லா நேரில் பார்த்திருக்கவே மாட்டோம்
டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக வாங்கி உள்ளார். இதனை பற்றி ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த டெஸ்லா வாகனம் தொடர்பான படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த முதல் டெஸ்லா சைபர்டிரக் வாகனத்தை வாங்கியவர் யார் என்கிற விபரம் கிடைத்துள்ளது. அதனை பற்றி பார்ப்பதற்கு முன்னர் டெஸ்லா நிறுவனத்தை பற்றியும், அதன் இந்திய வருகையை பற்றியும் முதலில் பார்த்துவிடுவோம். டெஸ்லா ஆனது அமெரிக்காவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமாகும்.

இந்தியாவிற்குள் நுழைய டெஸ்லா கடந்த பல வருடங்களாகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் ஆரம்பத்தில் பலன் அளிக்காவிடினும், தற்போது இந்தியாவிற்குள் டெஸ்லா நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. ஏனெனில், கடந்த சில வாரங்களாக டெஸ்லா மாடல் ஒய் (Model Y) என்கிற எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக, ஒருவேளை இந்திய மார்க்கெட்டிற்கு டெஸ்லா நிறுவனம் வந்தாலும், முதலாவதாக மாடல் ஒய், மாடல் 3 போன்ற விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை தான் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. சைபர்டிரக் போன்ற சற்று விலையுயர்ந்த எலக்ட்ரிக் வாகனத்தை ஆரம்பத்திலேயே இந்தியாவில் டெஸ்லா அறிமுகம் செய்யாது. இதனாலேயே இன்னும் பல வருடங்களுக்கு இந்தியாவில் டெஸ்லாவின் சைபர்டிரக் வாகனத்தை விற்பனைக்கு எதிர்பார்க்க முடியாது என்கிற சூழல் நிலவுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த சில தினங்களாக இந்தியாவில் முதல்முறையாக காட்சித்தரும் டெஸ்லா சைபர்டிரக் வாகனம் ஒன்றின் படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிதும் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன. அந்த படங்களையும், வீடியோக்களையும் வைத்து ஆராய்ந்து பார்த்ததில், இந்தியாவின் குஜராத் மாநில சூரத் நகர சாலைகளில் ஓடும் இந்த டெஸ்லா சைபர்டிரக் ஆனது லாவ்ஜி டாலியா (Lavji Daliya) என்கிற சூரத்தை சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமானது ஆகும்.
குஜராத்தை சேர்ந்தவர் என்பதினாலேயே பாஜக கட்சி உடன் நெருக்கமாக இருக்கும் 55 வயதான தொழிலதிபர் லாவ்ஜி டாலியா பிரதமர் நரேந்திர மோடி உடன் நெருக்கமாக புகைப்படம் கூட எடுத்துக் கொண்டுள்ளார். சூரத்தில் இவரை லாவ்ஜி பாட்சா என்றே மக்கள் அழைக்கின்றனர். சூரத்தில் ரியல் எஸ்டேட்டில் கொடிக்கட்டி பறக்கும் லாவ்ஜி டாலியா, 'கோபின் க்ரூப்' என்கிற குழுமத்தின் தலைவராக உள்ளார்.
இந்த குழுமத்தின் கீழ் இயங்கும் 'கோபின் டெவெலபர்ஸ்' மூலம் ரியல் எஸ்டேட் பிஸ்னஸை கவனித்துவரும் தொழிலதிபர் லாவ்ஜி டாலியா, கோபின் அறக்கட்டளை மற்றும் கோபின் முதலீட்டு நிறுவனங்களையும் நிர்வகித்து வருகிறார். மேலும், வைரங்கள் விற்பனையிலும் ஈடுப்பட்டு வரும் லாவ்ஜி டாலியா டெஸ்லா சைபர்டிரக்கை வாங்கியது ஓர் சுவாரஸ்யமான கதை ஆகும்.
சைபர்டிரக் வாகனத்தை லாவ்ஜி டாலியா புக் செய்ததது 6 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டெஸ்லா ஷோரூமில் ஆகும். பின்னர் சில மாதங்கள் கழித்து தொழிலதிபர் லாவ்ஜி டாலியாவின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அவர்களுக்கான சைபர்டிரக் வாகனம் துபாயில் டெலிவிரி செய்யப்பட்டது. துபாயில் டெஸ்லா ஷோரூம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
துபாயில் டெஸ்லா சைபர்டிரக்கை டெலிவிரி பெற்ற பின்னர், அங்கேயே ஒரு ஆர்டிஓ (RTO)இல் தங்களது சைபர்டிரக்கை லாவ்ஜி டாலியா குடும்பத்தினர் பதிவு செய்துக் கொண்டுள்ளனர். அதன்பின்பே இந்தியாவின் சூரத்திற்கு கப்பல் வழியாக கார் துபாயில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அனைத்தையும் லாவ்ஜி டாலியாவின் மூத்த மகன் பியூஷ் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் அடிப்படை விலை மட்டும் ரூ.60 லட்சம் என பியூஷ் தெரிவித்துள்ளார். இது இல்லாமல், காரை துபாயில் டெலிவிரி பெறுவதற்கு, பின்னர் அதனை துபாய் போன்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நகரத்தில் பதிவு செய்வதற்கு மற்றும் பின்னர் அதனை அங்கிருந்து இந்தியா கொண்டுவருவதற்கு என பணத்தை லாவ்ஜி டாலியா குடும்பத்தினர் தண்ணி போல் செலவு செய்துள்ளனர். எங்களுக்கு தெரிந்தவரையில், டெஸ்லா சைபர்டிரக் வாகனத்திற்காக இந்த தொழிலதிபர் குடும்பம் ரூ.2 கோடி வரையில் செலவு செய்திருக்க கூடும்.


Click it and Unblock the Notifications








