சட்ட கல்லூரி மாணவரின் கைதுக்கு இதுதான் காரணமா!.. கார் சன்ரூஃப்-க்கான மரியாதையே போச்சு!
கார்களில் வழங்கப்படும் அனைத்து அம்சங்களும் இந்தியாவிற்கு ஏற்றது என கூறிவிட முடியாது. காலத்தின் கட்டாயம் காரணமாக சில தேவையற்ற அம்சங்களுக்கு கார் உற்பத்தியாளர்கள் அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தமாதிரியான அம்சங்களில் ஒன்றே சன்ரூஃப் (Sunroof) ஆகும். இது இந்தியாவிற்கு தேவையற்ற அம்சம் என பலரால் கருதப்படுகின்றது. இருப்பினும், இந்த அம்சம் தற்போது இந்தியர்களின் விருப்பமான ஒன்றாக மாறிவிட்டது. இதனாலேயே இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளில் சன்ரூஃப் அம்சத்தை வழங்குவதற்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், இதை ஒரு சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். சன்ரூஃபை திறந்து வெளியே எட்டி பார்ப்பது மற்றும் அதன் மீது அமர்ந்து பயணிப்பது உள்ளிட்ட வேண்டாத செயல்களையே இந்த அம்சம் கொண்ட காரின் உரிமையாளர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது.

அதுவும், மிகவும் பிசியான சென்னை சாலையிலேயே இத்தகைய சம்பவத்தை ஓர் ஹோண்டா சிட்டி (Honda City) கார் உரிமையாளர் செய்திருக்கின்றார். அந்த நபர் ஓர் சட்டக்கல்லூரி மாணவர் என கூறப்படுகின்றது. தன்னுடைய காதலியுடன் ஓர் ஹேப்பியான ரைடை செய்யவேண்டி அவர் இவ்வாறு செய்திருக்கின்றார். ஆனால், மிகவும் ஆபத்தான செயல் ஆகும்.
மேலும், அவர் சன்ரூஃபில் அமர்ந்தபடி மதுவையும் அருந்தியிருக்கின்றார். இளைஞரின் அருவருக்கத்தக்கச் செயலின் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த வீடியோவின் அடிப்படையிலேயே சட்டக் கல்லூரி மாணவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தாம்பரம்-துரைப்பாக்கம் இணைக்கும் சாலையிலேயே இந்த முரண்பாடான செயலில் சட்டக் கல்லூரி மாணவர் ஈடுபட்டிருக்கின்றார்.
இவர்களின் இந்த பொறுப்பற்ற நடத்தைக்காக மாணவர் சஞ்சய் மற்றும் அவரின் காதலி வீணாவை தாம்பரம் போலீஸார் கைது செய்தனர். இதுபோன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. எனவே இதன் தீவிரத்தன்மையை உணர்ந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓடும் காரின் சன்ரூஃப் மேலே நிற்பது அல்லது அமர்வது மிகவும் ஆபத்தான செயல் ஆகும். இது சம்பந்தப்பட்டவர்களின் உயிரையே பறிக்க நேரிடலாம். இதுமட்டுமல்ல, சாலையில் வரும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தான சூழலை இது ஏற்படுத்தும். இதனால் இதுபோன்ற செயல்கள் மீது கடும் நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.

இந்த மாதிரியான சூழலிலேயே ஆபத்தான பயணம் மட்டுமின்றி இளம் ஜோடிகள் இருவரும் மதுவையும் சேர்த்து அருந்தியிருக்கின்றனர். இதனால்தான் இவர்கள் மீது கூடுதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கார்களில் சன்ரூஃப் வழங்கப்படுவதற்கான உண்மை காரணம் என்ன? நம்மில் பலர் சன்ரூஃப் பற்றிய புரிதல் இல்லாமலேயே இருக்கின்றோம்.
வெளியே எட்டி பார்த்து காற்றை ரசிக்கவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக பலரும் நம்புகின்றனர். ஆனால், இது சன்ரூஃப் வழங்கப்படுவதற்கான நோக்கம் அல்ல. காருக்குள் காற்றோட்டத்தை உறுதிப்படுத்துவதே சன்ரூஃப் வழங்கப்பட்டதற்கான உண்மையான நோக்கம் ஆகும். ஆனால், இந்தியாவின் நகரங்கள் பல காற்று மாசால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்தியாவிற்கு சன்ரூஃப் ஏற்றதல்ல என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நகரும் வாகனத்தில், சன்ரூஃபில் அமர்ந்து பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இதுவும் ஒரு வாகன ஸ்டண்ட்-க்கு சமம் ஆகும். இதனால்தான் இந்த செயலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். சன்ரூஃப்கள் போன்ற அம்சங்களை தவறாக பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிக்காட்டும் நோக்கிலேயே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதும் இந்த நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








