லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

வாகன ஓட்டிகள் லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆர்டிஓக்கள் காட்டி வரும் திடீர் கெடுபிடியால் அவர்கள் கடுமையாக அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இந்தியாவை பொறுத்தவரை டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது என்பது அவ்வளவு கடினமான காரியம் ஒன்றும் கிடையாது. வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினால் கூட, மிக எளிதாகவே டிரைவிங் லைசென்ஸை வாங்கி விட முடியும்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆனால் லைசென்ஸ் பெற வேண்டுமானால், அதற்கென நடத்தப்படும் டிரைவிங் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டிரைவிங் சோதனைகளும் மிக எளிதானதுதான். அத்துடன் ஒருவரின் டிரைவிங் திறன்கள் பெரிய அளவில் சோதித்தும் பார்க்கப்படாது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

எனவே டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால், பெரிதாக அலட்டி கொள்ள வேண்டியதில்லை. ஆனால் புதிதாக டிரைவிங் லைசென்ஸ் வாங்க விரும்பும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று ஏற்பட்டுள்ளது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்ட தெரியாதவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்க புனே ஆர்டிஓ மறுத்து வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. இன்றைய சூழலில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகின்றன.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதனால் பலருக்கும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்ட தெரிவதில்லை. எனவே புனேவிற்கு அருகே போசரியில் உள்ள டிரைவிங் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்படும் டிரைவிங் சோதனைகளில் கடந்த சில மாதங்களாக பலர் தோல்வியடைந்து வருகின்றனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

அத்துடன் தோல்வியடையும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டும் வருகிறது. புனே ஆர்டிஓ அலுவலகம் சார்பில், ஒரு நாளைக்கு சுமார் 220 டிரைவிங் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில், 10-20 விண்ணப்பதாரர்கள் தோல்வியடைந்து விடுகின்றனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இவ்வாறு தோல்வியடையும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இதுகுறித்து டிரைவிங் பயிற்சி பள்ளி உரிமையாளரும், புனே ஆர்டிஓ அலுவலகத்தின் அங்கீகாரம் பெற்ற ஏஜெண்ட்டுமான ரவி அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதுகுறித்து அவர் கூறுகையில், சொந்தமாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார் வைத்திருப்பவர்கள் பலரும் எங்கள் டிரைவிங் பயிற்சி பள்ளிக்கு வருகின்றனர். அந்த காரில்தான் அவர்கள் டிரைவிங் பழகுகின்றனர். ஆனால் டிரைவிங் சோதனைகளின்போது இது அவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஏனெனில் டிரைவிங் சோதனைகளின்போது, ''ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களுக்கு பதிலாக மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்டும்படி அவர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர்களில் பலருக்கும் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை ஓட்ட தெரியாது.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதனால் சோதனையில் தோல்வியடைந்து விடுகின்றனர். தற்போதைய நிலையில் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை வாங்குவதை காட்டிலும், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களை வாங்குவதற்குதான் மக்கள் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

எனவே ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களை டிரைவிங் சோதனைகளின்போது பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஆர்டிஓ செய்ய வேண்டும். டிரைவிங் சோதனைகளில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் தோல்வியடைகின்றனர்'' என்றார்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆனால் இதற்கு முன்பாகவும் கூட ஒரு சில ஆர்டிஓ அலுவலகங்களில் இதே பிரச்னை நடைபெற்றுள்ளது. குறிப்பாக ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் காருடன் சென்ற தன்னை டிரைவிங் சோதனைகளுக்கு அனுமதிக்கவில்லை என பெண் ஒருவர் டிவிட்டரில் புகார் தெரிவித்தார்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதன் பின்பு இந்த விவகாரம் கவனம் ஈர்த்தது. ஆனால் அதன்பின்பு டிரைவிங் லைசென்ஸ் சோதனைகளுக்கு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்களையும் அனுமதிக்க வேண்டும் என அனைத்து ஆர்டிஓக்களுக்கும் போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதுகுறித்து டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ஆட்டோமெட்டிக் கார்களை டிரைவிங் லைசென்ஸ் சோதனைகளுக்கு அனுமதிப்பது தொடர்பாக தெளிவான நெறிமுறைகள் எதுவும் இருப்பது போல் தெரியவில்லை.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

இதன் காரணமாகதான் இந்த விவகாரத்தை ஒவ்வொரு ஆர்டிஓக்களும் ஒவ்வொரு வழிகளில் கையாண்டு வருகின்றனர். உண்மையில் மேனுவல் கியர் பாக்ஸ் கார்களை எப்படி இயக்க வேண்டும்? என்பதை அனைவரும் தெரிந்து வைத்து கொள்வது நல்லதுதான்.

லைசென்ஸ் வாங்குவதில் புதிய சிக்கல்.. ஆர்டிஓக்களின் திடீர் கெடுபிடியால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி

ஆனால் தற்போது உள்ள சூழலை பார்த்தால், எதிர்காலத்தில் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கார்கள் பெரும் வளர்ச்சியை சந்திக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. இதனையும் நம்மால் திட்டவட்டமாக மறுத்து விட முடியாது.

Note: Images used are for representational purpose only.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

வாகனப் பெருக்கத்தால் திக்கித் திணறும் நகரச் சாலைகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களால் கால் கடுத்தவர்கள் தற்போது ஆட்டோமேட்டிக் கார்களின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். இருப்பினும், கார் விரும்பிகளின் கருத்தை கேட்டால், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களே சிறந்ததே என்று அடித்து கூறுவர்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக், ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் போன்ற கியர்பாக்ஸ் வகைகளால் மேனுவல் கியர்பாக்ஸ் கார்களின் எண்ணிக்கை அருகத் துவங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்களை இனி காணலாம்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

எரிபொருள் சிக்கனம்

ஆட்டோமேட்டிக் கார்கள் எடை அதிகம் என்பதுடன், அதன் ஹைட்ராலிக் சிஸ்டத்துக்கு எஞ்சின் பவர் உறிஞ்சப்படுவதால், எரிபொருள் சிக்கனம் குறைவாக இருக்கும். ஆனால், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்கள் எடை குறைவு என்பதுடன், ஹைட்ராலிக் சிஸ்டம் கிடையாது என்பதால் அதிக எரிபொருள் சிக்கனம் பெற முடிகிறது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

ஆட்டோமேட்டிக் கார்களில் கியர் மாற்றத்தைவிட, மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் சரியான கியரை மாற்றுவது எளிது என்பதுடன் சீக்கிரமாகவே கியர் ஷிப்ட் நடக்கும். இதன் காரணமாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் மைலேஜ் 20 சதவீதம் வரை அதிகம் இருக்கிறது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

தற்போது ஆட்டோமேட்டிக் கார்களின் தொழில்நுட்பம் மேம்பட்டிருப்பதுடன், மேனுவல் கியர்பாக்ஸ் கார்களுக்கு இணையான மைலேஜை சில மாடல்கள் வழங்குகின்றன. அதிலும், ஒன்றிரண்டு கிலோமீட்டர் வித்தியாசம் இல்லாமல் இருக்காது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

கூடுதல் விலை

ஆட்டோமேட்டிக் கார்களைவிட மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களின் விலை குறைவாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் தினசரி சென்று கிளட்ச்சை மிதித்து கால் கடுத்து அலுத்தவர்களுக்கு வேண்டுமெனில் ஆட்டோமேட்டிக் கார்களை தேர்வு செய்யலாம்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

ஆனால், நகர்ப்புறம், நெடுஞ்சாலை என இரண்டிலும் சமமாக பயன்பாடு கொண்டவர்களும், நீண்ட தூர பயணத்திற்கு மட்டும் கார் வாங்குவோர்க்கும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிறந்ததே.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

3. குதூகலம்

கார் பிரியர்களுக்கு குதூகலத்தை தருவது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களே ஆகும். சாலை நிலை, மனநிலைக்கு தக்கவாறு சரியான கியரை மாற்றி நம் விருப்பத்திற்கு செல்லும்போது கிடைக்கும் சுகமே அலாதியாக இருக்கும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

பேடில் ஷிப்ட்டர்கள் இந்த வசதியை கொடுத்தாலும், அதனை எலக்ட்ரானிக் யூனிட் கன்ட்ரோல் செய்வதால் சரியான கியரை மட்டுமே தேர்ந்தெடுத்து ஓட்ட முடியும். நம் இஷ்டத்திற்கு கியர் மாற்றும் அனுபவத்தை மேனுவல் கியர்பாக்ஸில் மட்டுமே பெற முடியும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

4. பராமரிப்பு

எளிய தொழில்நுட்பம் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களின் பராமரிப்பு செலவும் குறைவாக இருப்பதுடன், எந்த இடத்திலும் எளிதாக பழுது நீக்கவும் முடியும். பெரும்பாலான கார்களில் அதிக பராமரிப்பு தேவைப்படாது. அப்படி பராமரிப்பு தேவைப்பட்டாலும், ஸ்பேர் பார்ட்ஸ், பழுது நீக்கும் நேரம், லேபர் சார்ஜ் போன்றவை குறைவு. ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களின் தொழில்நுட்பம் சற்று சிக்கலானது. மேலும், பழைய ஆட்டோமேட்டிக் கார்களில் பலவற்றில் ஆயில் கசிவு பிரச்னை இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பராமரிப்பு செலவு கூடுதலானது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

5. பாதுகாப்பு

அவசர சமயங்களில் கியரை குறைத்து எஞ்சின் பிரேக்கிங் செய்ய முடியும். பிரேக் மற்றும் கியரை வேகமாக குறைத்து காரை சீக்கிரமாக நிறுத்த முடியும். குறிப்பாக, சரிவான பாதைகளில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களை குறைவான கியரில் வைத்து பாதுகாப்பாக இறக்க முடியும். ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களில் பிரேக்கை நம்பியே ஓட்ட முடியும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

6. பெர்ஃபார்மென்ஸ்

விரைவான ஆக்சிலரேஷனை மேனுவல் கியர்பாக்ஸ் கார்கள் சிறப்பாக வழங்கும். இதற்கு இணையான அனுபவத்தை டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கினாலும், அதன் விலை தடைக்கல்லாக அமைந்துவிடுகிறது. தொழில்நுட்பம் படுவேகமாக முன்னேறிய நிலையிலும், பெரும்பான்மையான கார் பந்தய வீரர்கள் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களையே அதிகம் விரும்புகின்றனர். விரைவான ஆக்சிலரேஷன் மற்றும் காரை கட்டுப்படுத்துவதற்கும் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள் சிறந்ததாக இருப்பதே காரணம்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

7. ஸ்டார்ட் ஆகலே...

சில சமயங்களில் கார் செல்ஃப் ஸ்டார்ட் எடுக்கவில்லையெனில், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட காரை நகர்த்தி ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், ஆட்டோமேட்டிக் கார்களில் இது ஆகாது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!

பாதகங்கள்

புதிதாக கார் கற்றுக்கொள்பவர்களுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்களை ஓட்டுவதற்கு சிரமங்கள் இருக்கும். சகஜமாக ஓட்டிச் செல்வதற்கு கூடுதல் காலம் பிடிக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் காரில் மலைச்சாலைகளில் ஏறும்போது காரை நிறுத்தி, மீண்டும் எடுக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சிலருக்கு கார் பின்னால் உருளும் நிலை ஏற்படும். மலைச்சாலைகளில் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது, கியர் மாற்றத்தில் சிலருக்கு தடுமாற்றம் எழலாம். கிளட்ச் கட்டுப்படுத்தும் நோக்கில் சிலருக்கு கவனச்சிதறல் ஏற்படலாம். சிலருக்கு கிளட்ச்சை கட்டுப்படுத்துவதால் கால் உபாதை ஏற்படும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Learn To Drive Manual Cars, Says Pune RTO
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X