பிரம்மாண்டமான காருக்குள் யாருக்கும் தெரியாமல் சென்றது அந்த பிரபல நடிகரா? காரின் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

சஞ்சய் தத் (Sanjay Dutt), இந்திய அளவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்ததை பார்த்திருப்பீர்கள். மும்பையில் வசிக்கும் சஞ்சய் தத் மற்ற பாலிவுட் சினி நட்சத்திரங்களை போல அவ்வப்போது புது, புது லக்சரி கார்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். இந்த வகையில், சமீபத்தில் வாங்கிய புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Range Rover Autobiography) காரில் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் காட்சி தந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் உள்பட பல்வேறு லக்சரி கார்களை வைத்துள்ளார். இதில் புதியதாக இணைந்திருப்பது பிராண்ட்-நியூ ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் ஆகும். இந்த காரை நன்கு நீளமானதாக சஞ்சய் தத் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.3.5 கோடி ஆகும்.

snjay dutt in range rover autobiography

புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரில் சஞ்சய் தத் செல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் மும்பையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பின் அங்கிருந்து நடிகர் சஞ்சய் தத் கிளம்பி செல்லும்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டண்ட் பாலிவுட் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில், புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் காரை சஞ்சய் தத் ஓட்டிச் செல்வதையும், அவருடன் வேறு சிலரும் காரினுள் இருப்பதையும் காணலாம். இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் ஆனது ஷார்ட்-வீல்பேஸ் மற்றும் லாங்-வீல்பேஸ் என 2 விதமான வெர்சன்களில் கிடைக்கிறது. வீடியோவில், நடிகர் சஞ்சய் தத் ஓட்டி செல்லும் ஆட்டோபயோகிராபி கார் நன்கு நீளமானதாக உள்ளது. ஆதலால், இது லாங்-வீல்பேஸ் வெர்சன் ஆகும்.

snjay dutt in range rover autobiography

இந்திய சந்தையில் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்பேஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.3.10 கோடியில் இருந்து ரூ.3.44 கோடி வரையில் உள்ளன. நடிகர் சஞ்சய் தத்தின் ஆட்டோபயோகிராபி கார் படுமி கோல்டு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப காரின் உட்பக்க கேபினையும் அழகான நிறத்தில் சஞ்சய் தத் வாங்கியிருப்பதை வீடியோவில் காண முடிகிறது.

மற்றப்படி, எந்த என்ஜின் உடன் இந்த ஆட்டோபயோகிராபி காரை நடிகர் சஞ்சய் தத் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்தியாவில் 3.0 லிட்டர் டீசல், 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஆற்றல்மிக்க 4.4 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 4.4 லிட்டர் என்ஜின் ஆப்ஷன் ஆனது ஆட்டோபயோகிராபி காரின் லாங் வீல்பேஸ் வெர்சனுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

snjay dutt in range rover autobiography

ஆதலால், 4.4 லிட்டர் என்ஜின் ஆப்ஷனிலும் இந்த காரை நடிகர் சஞ்சய் தத் வாங்கியிருக்கலாம். இதில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 346 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறனையும், 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது 345 பிஎச்பி மற்றும் 700 என்.எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. பவர் ஃபுல்லான 4.4 லிட்டர் என்ஜின் மூலமாக சுமார் 523 பிஎஸ் மற்றும் 750 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

இதில் அனைத்து என்ஜின் ஆப்ஷன்களிலும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இந்த காரில் என்ஜினின் ஆற்றல் ஆனது அனைத்து 4 சக்கரங்களுக்கும் செல்கிறது. 22 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களை பெறும் இந்த ரேஞ்ச் ரோவர் காரில் எல்இடி ஹெட்லைட்கள், பறித்து இழுக்கக்கூடிய வகையிலான கதவு கைப்பிடிகள் மற்றும் ஹீட்டட் விண்ட்ஸ்க்ரீன் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், அனுபவம் வாய்ந்த இந்தியாவின் முன்னணி நடிகர்கள் என்று எடுத்து பார்த்தால், அதில் சஞ்சய் தத்தும் நிச்சயமாக இருப்பார். அத்தகையவருக்கு இவ்வாறான ஒரு லக்சரி காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி காரை லாங் வீல்பேஸ் வெர்சனில் தேர்வு செய்ததை போன்று, காரை ஆற்றல்மிக்க 4.4 லிட்டர் என்ஜின் உடன் சஞ்சய் தத் வாங்கியிருப்பார் என நினைக்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2024, 12:18 [IST]
English summary
Leo actor sanjay dutt seen in range rover autobiography check all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X