லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்த கேரள நடிகை விலையுயர்ந்த டொயோட்டா காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகை? அவர் வாங்கியிருப்பது எந்த மாதிரியான டொயோட்டா கார்? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர், நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டால் அந்த ஸ்டேட்டஸுக்கு இணையாக ஏதேனும் ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாக உள்ளது. அதில் ஒன்றுதான், விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்குவது ஆகும். இன்றைய கால இளம் நடிகர், நடிகைகள் 1, 2 திரைப்படங்களில் நடித்து விட்டாலே புதியதாக கார் வாங்கிவிடுகின்றனர். சினிமாவில் அறிமுகமாகுவதற்கு முன்னரே புதுமுகங்களில் பலர் கார்களை வைத்துள்ளனர் என்பது வேறு கதை.

இந்த வரிசையில், 35 வயதான மலையாள நடிகை சாந்தி மாயாதேவி புதியதாக டொயோட்டா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். 1988இல் கேரளாவில் பிறந்தவரான சாந்தி மாயாதேவி நடிகை மட்டுமல்ல, எழுத்தாளரும் கூட. ராம் என்கிற மோகன்லாலின் மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிய இவருக்கு, 2021இல் வெளிவந்த திரிஷ்யம் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
அதன்பின், சமீபத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படம் லியோவிலும் சாந்தி மாயாதேவி நடித்திருந்தார். லியோ படத்தில் விஜய்யின் பார்த்திபன் கதாபாத்திரத்தின் வழக்கறிஞராக சாந்தி மாயாதேவி நடித்துள்ளார். முந்தைய படங்களின் மூலம் வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவராக கேரள மக்களால் சாந்தி மாயாதேவி பார்க்கப்படுவதால், லியோ படத்திலும் அவ்வாறான கதாபாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நடிகை சாந்தி மாயாதேவியின் வாழ்வில் புதியதொரு மகிழ்ச்சியான செய்தியாக, புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் ஒன்றை இவர் வாங்கி உள்ளார். டொயோட்டா இன்னோவா கார்கள் நம் இந்திய மக்கள் மத்தியில் மிக பிரபலமானவை. டொயோட்டா இன்னோவாவின் ஹைப்ரீட் வெர்சன் 'ஹைகிராஸ்' என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு ஷோரூமில் இந்த டொயோட்டா காரை நடிகை சாந்தி மாயாதேவி டெலிவிரி எடுத்துள்ளார். ஷோரூமுக்கு கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து சென்று காரை டெலிவிரி பெற்றுள்ளார். இன்னோவா ஹைகிராஸ் காரின் விலைமிக்க இசட்.எக்ஸ் வேரியண்ட்டை சாந்தி மாயாதேவி வாங்கி உள்ளார். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.30.98 லட்சமாக உள்ளது.
ஆர்டிஓ கட்டணம், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்ட கட்டணங்கள் எல்லாம் சேர்த்தால் ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.39 லட்சம் வந்துவிடும். டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மார்க்கெட்டில் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்பன அந்த 2 என்ஜின் ஆப்ஷன்களாகும்.
இதில் ஸ்ட்ராங் ஹைப்ரீட் ஆப்ஷனை சாந்தி மாயாதேவி வாங்கியுள்ளார். இந்த ஆப்ஷனில் என்ஜினுடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இந்த பவர்டிரெயின் செட்-அப் மூலமாக 184 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த ஹைப்ரீட் காரின் சிறப்பம்சம் என்னவென்றால், நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் காரின் மைலேஜை அதிகரிக்கும் விதமாக கார் தானாக எலக்ட்ரிக் பவருக்கு மாறிவிடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பென்ஸ், பிஎம்டபிள்யூ என சினிமா நட்சத்திரங்கள் விலையுயர்ந்த கார்களை வாங்கும் இந்த காலத்தில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் போன்ற காரை ரூ.40 லட்சத்தில் வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது. இருப்பினும், வழக்கமான பெட்ரோல்/ டீசல் என்ஜின் ஆப்ஷனில் காரை வாங்காமல், ஹைப்ரீட் வெர்சனில் காரை நடிகை சாந்தி மாயாதேவி வாங்கியிருப்பது பாராட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications









