லியோ படத்தில் விஜய் ஓட்டி வரும் பைக்கை பத்தி தெரியுமா? இதுலயும் ஏதாவது குறியீடு இருக்குமோ?

நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் லியோ திரைப்படம் குறித்த இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது லீக் ஆகி உள்ளது. அதில் நடிகர் விஜய் ஜாவா பைக்கை ஒட்டி செல்வது போலவும், மஹிந்திரா தார் காரில் தனது குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போலவும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிகமாக இருந்து வருகிறது. இதன் டிரைலர் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பாக தமிழ் சினிமாவை மாற்றி உள்ளது.

leo vijay in jawa bike

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் உள்ள சில காட்சிகள் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகி உள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில் விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் ஜாவா பைக்கில் சென்று கொண்டு இருப்பது போல இருக்கிறது. மற்றொரு புகைப்படத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் ஆகியோர் மஹிந்திரா தார் கார் அருகே நின்று கொண்டிருப்பதாக இருக்கிறது.

இந்த திரைப்படம் காஷ்மீரில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு அதிக பனிப்பொழிவு மற்றும் கரண்டு முரடான சாலைகள் இருப்பதால் அங்கு ஆஃப் ரோடு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கு தான் மவுசு அதிகமாக இருக்கும். அதனால் அங்கு விஜய் மஹிந்திரா தார் காரை பயன்படுத்துவதாக காட்சிப்படுத்திருக்கலாம் என தெரிகிறது. அதேநேரம் டூவீலரை பொறுத்தவரை ஜாவா பைக்கும் அதிக ஆஃப்ரோடு அம்சங்கள் கொண்ட பைக்காக இருக்கிறது.

leo vijay in jawa bike

மஹிந்திரா தார் காரை பொறுத்தவரை டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் உள்ளன. இதில் 2184 சிசி டீசல் இன்ஜினும் 1497 சிசி டீசல் இன்ஜினும் அதே நேரம் 1997 சிசி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது.

இது ஒரு ஆஃப் ரோடு ரக கார் என்பதால் இதில் 226 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. தற்போது இந்தியாவில் 3 டோர் கொண்ட நான்கு சீட்டர் கார்தான் விற்பனையாகி வருகிறது. இதன் 5 சீட்டர் கார் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதியின் ஜிம்னி காருக்கு போட்டியாக விற்பனையாகும் என தெரிகிறது.

இந்த காரின் டீசல் இன்ஜின் சிட்டி பயன்பாட்டில் 9 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது இந்த காரில் பவர் ஸ்டேரிங், பவர் விண்டோ, ஏபிஎஸ், ஏசி, டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர் பேக், அலாய் வீல்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. ஆஃப் ரோடு அம்சங்களுடன் அதிகமான பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.

மற்றொரு புகைப்படமான நடிகர் விஜய் பைக் ஓட்டி கொண்டு வரும் புகைப்படத்தில் இவர் ஜாவா நிறுவனத்தின் ஃபார்ட்டி டூ என்ற பைக்கை ஓட்டி வந்துள்ளார். இந்த பைக்கை பொறுத்தவரை இந்தியாவில் விற்பனையாகும் சிறப்பான ஜாவா பைக்கில் ஒன்றாக இருக்கிறது இந்த பைக் ரூபாய் 1.72 லட்சம் என்ற விலையில் சிங்கு சேனல் எபிஎஸ்வும் 1.81 லட்சம் என்ற விலையில் டூயட் சேனல் ஏபிஎஸ்கொண்ட பைக்காக விற்பனையாகி வருகிறது.

இந்த பைக்கில் 294.72 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27.32 பிஎஸ் பவரையும் 26.84 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இன்ஜின் ஆக இருக்கிறது. மேலும் இந்த பைக்கின் முக்கியமான அம்சம் என்றால் இதில் 1369 மிமீ வீல் பேஸ் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் ஆறு விதமான வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் விஜய் நடித்த படத்தில் நயன்தாரா கார் மற்றும் ஜாவா 42 பைக் மற்றும் காருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் இந்த கார் மற்றும் பைக் குறித்த பேச்சு அதிகமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வெளியாகும் போது இந்த கார் பைக் பற்றி இன்னும் பலர் தேடி படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

More from DriveSpark

Article Published On: Wednesday, October 11, 2023, 19:25 [IST]
English summary
Leo vijay and trisha showcase mahindra thar car and jawa forty two bike in posters
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+