மாருதி சுசுகி தொழிற்சாலைக்கு சிறுத்தை புலி விசிட்... பொறி வைத்தும் பிடிக்க முடியவில்லை..!!

Written By:

மனிதர்களை தாண்டி விலங்குகள் அவ்வப்போது கார் ஷோரூம்களுக்கு வாடிக்கையாளர்களாக வருவது இந்தியாவில் சற்று அதிகரித்து வருகிறது.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

இந்தியாவில் குடும்பங்களுக்கு ஏற்ற கார்களை வாங்க நினைக்கும் குடிமகன்கள் பலர் முதலில் தேர்வு செய்வது மாருதி சுசுகியின் தயாரிப்புகளை தான்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

அதிக வாங்கும் திறன், சுலபமாக கிடைக்கும் உதிரி பாகங்கள், டீலர்ஷிப் தரம் என இந்தியாவில் கார் விற்பனையில் கில்லி என்றால் அது மாருதி தான்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

வாகன துறையில் வெறித்தனமாக செயல்பட்டு வரும் மாருதி சுசுகியின் தொழிற்சாலை ஒன்றுக்கு சிறுத்தை புலி அடித்த விசிட் அடித்திருப்பது, இன்று இந்தியாவின் டாப் டிரெண்டிங் செய்திகளில் ஒன்று.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

மாருதி சுசுகியின் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகளில் ஒன்று ஹரியானா மாநிலம் மானசர் பகுதியில் இயங்கி வருகிறது.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

அதிகாலை 3.00 மணியளவில் பரபரப்பாக இயங்கி வந்த தொழிற்சாலையில் ஒரு சிறுத்தை குட்டி நடமாடி வருவதை பாதுகாவலர் தரம்பீர் சிங் பார்த்துவிட்டார்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

உடனே ஆலையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சுமார் பல கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கார் தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

வன அலுவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் மாருதி சுசுகியின் மானசர் தொழிற்சாலைகளுக்கு சிறுத்தை பிடிக்கும் உபகரணங்களோடு வந்துவிட்டனர்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

உடன் அப்பகுதியின் போலீசாரும் வந்தனர். வனதுறையினரும், போலீசாரும் இணைந்து, தொழிற்சாலையில் இருந்த அனைத்து தொழிலார்களையும் வெளியேற்றினர்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

முதலில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக அறியப்பட்ட பகுதிகளில் வனதுறை அலுவலர்கள் பட்டாசுகளை வெடிக்க செய்தனர்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

ஆனால் அதில் ஒன்றும் பயனில்லை. பிறகு சிசிடிவி காட்சிகளின் படி ஆலையில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தான் சிறுத்தை இருக்கிறது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

தற்போது அந்த பகுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மதிப்பில் கார் தயாரிக்கும் உபகரணங்கள் கட்டப்பட்டுள்ளதால், சிறுத்தையை பிடிப்பது வனத்துறையினருக்கு சற்று கடினமாக இருந்து வருகிறது.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

சிறுத்தையை பிடிக்கும் வரை, சந்தேகத்திற்குரிய பகுதியில் 100 போலீசார்கள் பாதுகாப்பு பணிகளுக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுப்பற்றி மாருதி சுசுகி நிறுவனத்தின் பல மூத்த அதிகாரிகள் அவ்வப்போது அலோசனை நடத்தி வருகின்றனர்.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

சிறுத்தை புலியை பிடிக்கும் வரை, தொழிற்சாலையின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பலநூறு தொழிலாளர்களுக்கு மாருதி சுசுகி தலைமை விடுமுறை அறிவித்துள்ளது.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

ஹரியானா மாநிலம் மானசர் பகுதியில் உள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் சிறுத்தை புலியின் வருகையால் அங்கு பல கோடி மதிப்பிலான கார் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மாருதி சுசுகி தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை புலி..!!

இந்நிலையில் இன்று ஏதேனும் ஒரு நேரத்தில் சிறுத்தை புலியை பிடித்துவிட பல துரித நடவடிக்கைகளை ஹரியானான மாநில வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Leopard Enters into Maruti Suzuki Manesar Plant at Late Night. Click for Details...
Story first published: Friday, October 6, 2017, 12:53 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark