சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான்...

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இறந்துவிட்டார். இவர் கார் விபத்தில் சிக்க என்ன காரணம்? முன் சீட்டில் அமர்ந்தவர்கள் பிழைத்துக்கொண்ட போது பின் சீட்டில் அமர்ந்திருந்த அவர் உயிரிழந்த காரணம் என்ன? இதன் மூலம் நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். முழு விபரங்கள் இதோ.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

டாடா சன்ஸ் குழுமத்தில் சேர்மனாக இருந்த ரத்தன் டாடா தனது ஓய்வை அறிவித்த பின் கடந்த 2012ம் ஆண்டு அந்த குழுமத்தற்கு சேர்மனாக பதவியேற்றவர் சைரஸ் மிஸ்திரி, இவர் கடந்த 2016ம் ஆண்டு வரை அந்நிறுவனத்தில் சேர்மனாக பதவி வகித்தார்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இந்நிலையில் நேற்று அவர் குஜராத் மாநிலம் உத்வாடா பகுதியிலிருந்து மும்பைக்கு தனது நண்பர்கள் ஜகான்கீர் பன்டோல், அனஹித்தா பண்டோல், டேரியஸ் பண்டோல், ஆகியோருடன் மெர்சிடீஸ் ஜிஎல்ஜி காரில் வந்து கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்து போன இவர்களது உறவினரின் இறுதிச் சடங்கிற்குச் சென்றுவிட்டு மீண்டும் மும்பைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இதில் அனஹித்தா மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரபல கைனகாஜிஸ்ட் டாக்டராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் டேரியஸூம் இந்த காரில் இருந்தா் அவர் ஜேஎம் ஃபைனான்ஸியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ஜாங்கீரும், சைரஸ் மிஸ்திரியும் காரில் இருந்தனர்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

கார் நேற்று மதியம் சரியாக மதியம் 3.15 மணிக்கு சூர்யா நதி அருகே கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. காரை அனஹித்தா வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார்.கார் கிட்டத்தட்ட 120 கி.மீ க்கு அதிகமான வேகத்தில் பயணித்திருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்பொழுது அனஹித்தா முன்னே சென்று கொண்டிருந்த வாகனத்தை ஓவர் டேக் செய்ய முயற்சி செய்தார்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

அப்பொழுது முன்னே சென்ற வாகனத்திற்கு வலது புறம் இடம் இல்லாததால் ராங்க் சைடான இடது புறத்திலிருந்து காரை முந்தி செல்ல முயற்சி செய்தார். இவர் எதிர்பாராத விதமாக அப்பகுதியில் சாலையில் குறுக்கே பாலம் வருவதால் அதற்கான டிவைடர் இருந்துள்ளது. அதிகமான வேகத்தில் வந்ததால் காரை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாத அனஹித்தா காரை அந்த டிவைடரில் மோத விட்டுள்ளார்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

கார் டிவைடரில் மோதியதில் பலத்த சேதமடைந்தது. காரின் பின் சீட்டில் சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான்கீர் பண்டோல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் டிவைடரில் மோதியதில் ஏற்பட்ட இம்பேக்டில் இவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். முன்பக்கம் அமர்ந்திருந்த அனஹித்தா மற்றுமு் அவரது கணவர் டேரியஸ் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான்கீரின் உடல் பரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய போலீசார், விபத்திற்குக் காரணம் அதிவேகமாக கார் ஓட்டியதால் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது தான் எனக் கூறியுள்ளார்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இந்த விபத்தில் பலருக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. காரின் முன் பகுதி தான் டிவைடரில் மோதியது. அப்படி இருக்கும் போது இந்த விபத்தின் இம்பேக்ட் முன் சீட்டில் இருப்பவர்களுக்குத் தான் அதிகமாக இருக்கும், பின் சீட்டில் இருப்பவர்களுக்குக் குறைவாக தான் இருந்திருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி முன் சீட்டில் அமர்ந்திருந்த இருவர் உயிர் பிழைத்த நிலையில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் மட்டும் உயிரிழந்தனர் எனக் கேள்வி கேட்கின்றனர்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இதற்கு முக்கியமான காரணம் சீட் பெல்ட் அணியாதது. தான். இந்த பயணத்தின் போது காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் சீட்பெல்ட் அணிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் பின் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருக்க வாய்ப்பில்லை. சீட் பெல்ட் அணியாததால் கார் டிவைடரில் மோதியதும் இவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் இவரும் உயிரிழந்துள்ளனர்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

பொதுவாக நம்மில் பலருக்கு இருக்கும் பழக்கம் காரின் முன்பக்கத்தில் இருப்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் ஆனால் காரின் பின் சீட்டில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்றே கருதுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு காரில் உள்ள ஒவ்வொரு பயணிக்கும் சீட் பெல்ட் என்பது அவசியம்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

குறிப்பிட்ட இந்த விபத்தில் சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜஹான்கீர் ஆகியோர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் இந்த விபத்தில் உயிர் பிழைத்திருக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்திலிருந்து மற்றொரு பாடத்தையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

அதாவது சாலையில் நீங்கள் செல்லும் போது ஒரு வாகனத்தை முந்த வேண்டும் என்றால் சரியான சைடில் தான் முந்த வேண்டும். அதாவது எதிரில் செல்லும் வானகத்தின் வலது புறம் தான் முந்த வேண்டும். ஏன் என்றால் இந்தியாவில் வலது புற டிரைவிங் சிஸ்டத்தில் தான் வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இதனால் நீங்கள் வலது புறம் முந்த முயற்சி செய்யும் போதே எதிரில் ஏதாவது தடை இருந்தால் டிரைவருக்கு தான் முதலில் தெரியும்.அதனால் அவர் உடனடியாகச் சுதாரித்துக்கொள்ள முடியும். இதுவே இடது புறம் முந்த முயன்றால் கார் முழுவதுமாக இடதுபுறம் ஏறிய பிறகே டிரைவருக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பது தெரியவரும். அப்பொழுது டிரைவருக்கு உடனடியாகச் சுதாரித்துக்கொள்ள நேரம் இருக்காது.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இதனால் கார் ஓட்டும் போது ஒரு வாகனத்தை முந்த வேண்டும் என்றால் சரியான சைடில் மட்டும் முந்த முயற்சி செய்யுங்கள். அதே நேரம் வேகத்திலும் கவனம் தேவை. நெடுஞ்சாலைகள் காலியாக இருக்கிறது என வேகமாக செல்லும் பலர் பாலங்கள், அல்லது கூட்ட நெரிசல் மிகுந்த பகுதி வரும் போது தங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த மறந்துவிடுகின்றனர். இதுவும் பல விபத்துகளுக்குக் காரணம்.

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து மூலம் நாம் காற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்கள் இவைதான் . . .

இதனால் நீங்கள் சாலையில் செல்லும் போது கட்டுப்பாடான வேகத்தில் பயணம் செய்யுங்கள். பாதுகாப்பான வேகத்தையும் தாண்டி கார் பயணிக்கிறது என நீங்கள் நினைத்தால் அந்த மாத்திரத்திலேயே வேகத்தைக் குறைத்து விடுங்கள் அதிக வேகம் ஆபத்தைத் தரும் என்பதை உணர்ந்து பயணம் செய்யுங்கள். விபத்தில் மரணமடைந்த சைரஸ் மிஸ்திரிக்கு திருணமாகி ஒரு மனைவி மற்றும் இரு மகன்கள் இருக்கின்றனர். என்பது கூடுதல் தகவல்

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 10:55 [IST]
English summary
Lesson to learn in cyrus mistry death in car accident
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+