டெலிவரிக்கு முன்பே தலைகுப்புற கவிழ்ந்த கார்! வைரலாகும் வீடியோ!
நீங்கள் ஒரு பணக்காரர் ரூ3கோடிக்கு உங்கள் கனவு காரை வாங்கியுள்ளீர்கள்? இந்த கார் உங்கள் வீட்டிற்க டெலிவரி செய்யஎடுத்து வரும் போது டிரக்கிலிருந்து கவிழ்ந்து விழுந்த விபத்திற்குள்ளாகிவிட்டது என செய்தி வந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் தான் உண்மையிலேயே நடந்துள்ளது. அதுவும் லெக்ஸஸ் நிறுவத்தின் எல்எம்350எச் கார்தான் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
எக்ஸ் தளத்தில் பட்டேல் என்பவர் தனது பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் காரில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த போது சாலையில் அதிக நெருக்கடி இருந்தது. குறிப்பிட்ட தூரத்தில் வாகனங்கள் எல்லாம் வலது பக்க லேனில் மாற்றிவிடப்பட்டுக்கொண்டிருந்தது. இவரது கார் அருகே சென்ற போது தான் நடு ரோட்டில் ஒரு லெக்ஸஸ் எல்எம்350எச் கார் தலை கீழாக கவிழ்ந்து கிடப்பதை காண முடிந்தது. இந்த வீடியோவில் ஒரு ஒருவர் பேசிக்கொண்டே வருகிறார்.

இந்த வீடியோவில் பேசியவர் கவிழ்ந்து கிடக்கும் கார் ரூ1-1.5 கோடி வரை விலை இருக்கும் எனவும், இது டொயோட்டா நிறுவனத்தின் வில் ஃபயர் கார் என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் தெரியாமல் குறிப்பிடுகிறார். இது உண்மையில் லெக்ஸஸ் நிறுவனத்தின் எல்எம் 350எச் ரக கார் ஆகும். இந்த வீடியோ ஆமதாபாத் வதோதரா பகுதியில் நடந்த விபத்து என்பது தெரியவருகிறது. வாகனத்தின் நம்பர் பிளேட் எதுவும் இல்லை.
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் இந்த காரை வாங்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் விபத்தில் சிக்கிய கார் அவர் கார் போல தெரியவில்லை. இந்த லெக்ஸஸ் எல்எம்350எச் கார் டொயோட்டா வில் ஃபயர் காரை அடிப்படையாக கொண்டு உரவாக்கப்பட்டது தான். ஆனால் இதன் விலை வில்ஃபயர் காரைவிட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இதற்கு முக்கியமான காரணம் லெக்ஸஸ் பிராண்ட் தான். இதுமட்டுமல்ல இதில் டிசைன் மாற்றங்கள் புதிய அம்சங்கள் எல்லாம் இருக்கிறது.

இந்த விபத்து குறித்து அதிகாரப்பூர்வமாக வேறு எந்த ரிப்போர்ட்டும் பதிவாகவில்லை. இந்த விபத்திற்கு காரணம் இதை எடுத்து சென்ற டிரக் தான் என தெரிகிறது. இதை எடுத்து சென்ற டிரக் சரியாக அளவில் இல்லை, இதை எடுத்து செல்லும் அளவிற்கு பெரிய வாகனமாக இல்லை. அந்த டிரக் சிறிய வாகனங்களை எடுத்து செல்லும் டிரக்காக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பாரம் தாங்காமல் கார் கவிழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி டெலிவரிக்கு முன்பே வாகனம் சிக்குவது முதன்முறையல்ல. கடந்த வாரம் கூட தார் ராக்ஸ் கார் டெலிவரிக்கு எடுத்து செல்லும் போது விபத்தில் சிக்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இதற்கு இந்த காரை ஓட்டி சென்ற பெண் தெரியாமல் ஆக்ஸிரேட்டரை வேகமாக அழுத்திவிட்டார். இதனால் முதல் தளத்திலிருந்து கார் தலை குப்புற கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ3 கோடிக்கு கார் வாங்கியவர் இதை டெலிவரி எடுக்கும் முன்பே கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. பலர் இந்த வாகனத்தை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









