அஞ்சலி படத்தில் நடித்த குழந்தையா இவரு? இப்ப இவ்வளவு காஸ்ட்லி காரை வாங்கிட்டாரே!
சினிமா பிரபலங்கள் பலர் காஸ்ட்லியான காரை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். இப்படியாக சமீபத்தில் பாலிவுட் சினிமா நடிகர் ஒருவர் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இவர் வாங்கிய கார் எது? இதன் விலை என்ன? இதில் உள்ள அம்சங்கள் என்ன? இந்த காரை வாங்கிய இந்த பிரபலம் யார்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
லெக்ஸஸ் நிறுவனத்தின் எல்எம் 350 என்ற கார் ஒரு அல்ட்ரா சொகுசு எம்பிவி ரக கார் ஆகும். இது இந்தியாவில் அதிகம் விற்பவனவையாகும் காரில் உள்ளறாக பார்க்கப்படுகிறது. இந்த காரை வாங்கும் அளவிற்கு திறன் கொண்ட வாடிக்கையாளர்கள் என்றால் பெரிய சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் மட்டும் தான். இவர்களிடம் மட்டும் தான் இந்தகாை வாங்கும் எளவிற்கு பணம் உள்ளது.

இந்நிலையில் பிரபல ஹிந்தி படங்களில் நடந்த ராஜ்குமார் ராவ் என்பவர் இவர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் ஹிந்தியில் ஸ்டிரீ, பைரலிக் கி பர்ஃபி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகள் பட்டாளத்தில் ஒருவராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு தெளிவான தகவல்களும் கிடைக்கவில்லை. இவர் தற்போது சொந்தமாக லெக்ஸஸ் எல்எம் 350எச் காரை வங்கியள்ளார். இந்த புகைப்படம் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் இவர் தனது காருக்கு 7770 என்ற ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை வாங்கியதும் தெளிவாக தெரிகிறது.
இவர் சோனிக் டைட்டானியம் நிறத்திலான காரணை வாங்கியள்ளார். இதே கலர் கார் தான் பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஷாரூக்கான் ஆகியோர் வாஙகியள்ளர். இந்தகாரின் விலையை பொருத்தவரை ரூ2.7 கோடி எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். இதன் ஆன்ரோடு விலை மும்பையில் ரூ3.18 கோடியாகும். இந்த கார் ஒரு பிரிமியம் எம்பிவி ரக கார் ஆகும். இந்த காரின் முன்பக்கம் பெரிய கிரில் ஹெக்ஸகோனல் வடிவமைப்பில் உள்ளது. இது போக ஸ்லீக்கான எல்இடி ஹெட்லைட், நீள வாக்கிலான ஃபாக்லைட்டுகள், எல்இடி டிஆர்எல் ஆகிய லைட்டுகள் உள்ளன.

இந்த கார் 4 சீட்டர் மற்றும் 7 சீட்டர் லேஅவுட்களி்ல விற்பவனவைக்கு வருகிறது. இதில் 4 சீட்டர் வெர்ஷனில் பின்பக்கம் 2 கேப்டன் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் ரூஃப் பகுதியில் டிம் செய்யக்கூடிய கிளாஸ் பேனல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காருக்கும் 48 இன்ச் டிவி, விமானத்தில் உள்ளதை போல சாயு்வு வசதி கொண்ட சீட்டுகள், 23 ஸ்பீக்கர் சிஸ்டம், பிரிமியமான சவுண்ட் எக்ஸ்பிரியன்ஸ், மடித்து வைக்ககூடிடேபிள், ஹீட்டட் ஆர்ம் ரெஸ்ட், வயர்லெஸ் போன் சார்ஜர்கள், பிரிட்ஜ், பின்பக்க கிளவ் பாக்ஸ், டிஜிட்டல் ரியவர்வியூ மிரர், குடை வைக்கும் பகுதி ஆகியன உள்ளன.
மேலும் இந்த காரில் லெக்ஸஸ் பாதுகாப்பு சிஸ்டம் +3சூட் உள்ளது. இதில் அடாஸ் தொழிற்நுட்பம், வெஹிகிள் டிடெக்ஷன், பின்பக்க ரேடார் உதவியில்இயங்கும் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிபார்ச்சர், ஸ்டியரிங் அலர்ட், லேன் டிரேஸிங் அசிஸ்ட், ஆட்டோமடெட்டிக் ஹைபீம், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், சேஃப் எக்ஸிட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த காரில் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 190 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.7 நொடியில் பிக்கப் செய்துவிடும். இந்த கார் அதிகபட்சம் 190 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக பல எம்பிவி கார்களை விட்டாலும் பிரபலங்கள் மத்தியில் இந்த லெக்ஸஸ் கார் தான் மிகவும் பிரபலமாக உள்ளது. பலர் இந்த காரை வாங்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த கார் நிச்சயம் நீண்ட காலம் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









