கண்ணுக்கே தெரியாது! சூப்பரான ஸ்பீக்கரை தயாரிக்கும் எல்ஜி! உங்க ஃபேவரிட் யுவன், இளையராஜா பாட்டு லிஸ்ட் ரெடியா?

பிரபல எல்ஜி நிறுவனம் கார்களில் பயன்படுத்தக் கூடிய மிக மெல்லிய ரக ஸ்பீக்கர் ஒன்றை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்பீக்கரின் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விரிவான தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆட்டோமொபைல்ஸ் உலகம் நாம் நினைத்துகூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ச்சி அடைந்துக் காணப்படுகின்றது. ஒரு காலத்தில் கார்கள் என்ற ஓர் வாகனம் பயன்பாட்டிற்கு வரும் என்பதை இந்த மனித சமுதாயம் நினைத்துகூட பார்த்திருக்காது. ஆனால் இப்போதோ அவை சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஏன் சில வாகனங்கள் டிரைவரே இல்லாமல்கூட இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இது வாகன உலகின் மிகப் பெரிய சாதனை ஆகும்.

கார் ஸ்பீக்கர்

இதுமட்டுமா, ஆபத்து காலத்தில் தானாகவே பிரேக் பிடித்தல், சாலையில் யாரேனும் குறுக்கே வந்தால் வேகத்தை குறைத்தல் போன்ற நம்ப முடியாத திறன்களைக் கொண்ட வாகனங்கள்கூட சந்தையில் உள்ளன. இதுமட்டுமில்லைங்க, தங்களை தாங்களே காலியான இடத்தில் எடுத்துச் சென்று நிறுத்திக் கொள்ளுதல், தங்களைச் சுற்றியிருக்கும் சுழலைக் கண்டறிந்து அதற்கேற்ப திசையை மாற்றி பயணித்தல் என மனிதனுக்கு இணையாக செயல்படும் செயற்கை நுண்ணறிவுக் கொண்ட வாகனங்களும் இந்த உலகில் விற்பனையில் இருக்கின்றன.

இந்த அளவு நாம் நம்ப முடியாத அதீத வளர்ச்சியையே ஆட்டோமொபைல்ஸ் உலகம் சந்தித்துள்ளது. இதுமட்டுமின்றி, இன்னும் நாம் எதிர்பார்த்திராத அதீத வளர்ச்சி பாதையை நோக்கி அது பயணித்த வண்ணம் இருக்கின்றது. இதை உறுதிபடுத்தும் விதமாகவே பிரபல எல்ஜி நிறுவனம் மிகவும் மெல்லிய ரக ஸ்பீக்கரை உருவாக்கியிருக்கின்றது. பார்ப்பதற்கு பவர் பேங்க் போன்று காட்சியளிக்கக் கூடிய ஸ்பீக்கரையே நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. ஆனால், அது பவர் பேங்கை விட மிக மிக மெல்லியதாகக் காட்சியளிக்கின்றது.

பத்து திடமான பேப்பரை ஒன்றாக அடுக்கி வைத்தால் இருக்கக் கூடிய தடிமனில் அது காட்சியளிக்கின்றது. இவ்வளவு சிறுசா இருக்கே இதுல எப்படி சத்தம் வரும்னு கேக்குறீங்களா?, கவலையேப்படாதீங்க அதெல்லாம் நீங்க எதிர்பார்த்ததைவிடவே சூப்பரா வரும்னு எல்ஜி நிறுவனம் தெரிவிச்சிருக்கு. ஆகையால், இசை பிரியர்கள் ஒலியின் அளவைக் கண்டு கவலைக் கொள்ள தேவையில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. பொதுவாகவே, ஸ்பீக்கர்கள் என்றால், கூம்பு வடிவத்திலோ அல்லது பெரிய பட்டன் போன்றோ அல்லது பெரிய காந்தத்தைத் தாங்கியதாகவோ காட்சியளிக்கும்.

இவை அனைத்திலிருந்தும் மாறபட்டதாக எல்ஜி உருவாக்கியிருக்கும் இந்த ஸ்பீக்கர் இருக்கின்றது. இதனை பிரத்யேகமாக வாகன உலகிற்காக மட்டுமே தயாரித்திருப்பதாக எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், எதிர்காலத்தில் இந்த ஸ்பீக்கரே கார்களில் ஆளுகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை கார்களில் பயன்படுத்தினால் அவை இருக்கும் இடமே தெரியாது. ஏதோ, அடர்த்தியான தூணி ஒன்றில் இருந்து சத்தம் வருவதைப் போல் இருக்கும். இது காரின் பிரீமியம் லுக்கிற்கு கூடுதல் பிளஸ்ஸாக இருக்கும்.

எல்ஜி நிறுவனத்தின் டிஸ்பிளே பிரிவே இந்த ஸ்லிம்மான ஸ்பீக்கரை வடிவமைத்திருக்கின்றது. இது ஓர் பாஸ்போர்டைக் காட்டிலும் மிக மெல்லிய தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இன்னும் துள்ளியமாக கூற வேண்டுமானால் 2.5 மிமீ அடர்த்தியில் புதிய ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதேவேலையில், 150 மிமீ நீளம் மற்றும் 90 மிமீ அகலத்திலும் ஸ்பீக்கர் உள்ளது. ஆகையால், இது ஓர் ஸ்பீக்கர் என்பதே தெரியாது. இதன் எடையும் குறைவாகும்.

40 கிராம் எனும் மிக மிக குறைவான எடையிலேயே அது உருவாக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ் உலகில் முதன்மையான நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் எல்ஜி நிறுவனம், கார்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிப்பதிலும் கை தேர்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. அந்தவகையில், நிறுவனம் காருக்கான திரைகள், பேட்டரிகள் மற்றம் சிப்கள் போன்ற மிக முக்கயமான பாகங்களை அது தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அதி-நவீன வசதிகள் நிறைந்த மிக மெல்லிய ஸ்பீக்கரை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இந்த ஸ்பீக்கரை காரின் எந்த பகுதியிலும் நிறுவிக் கொள்ளலாம். காரின் இருக்கை, ஹெட்ரெஸ்ட், டேஷ்போர்டு, டூர் பேனல், மேற்பகுதி என எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஸ்பீக்கரை நிலை நிறுத்திக் கொள்ளலாம். இத்தகைய ஸ்பீக்கரையே நிறுவனம் தற்போது உருவாக்கியிருக்கின்றது. இதனை எப்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என தகவல்கள் வெளியாகவில்லை. அதேவேலையில் விரைவில் பிரீமியம் தர கார்களில் இந்த அம்சம் விரைவில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lg invisible speaker
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X