குடிநீரை விட பெட்ரோல் விலை கம்மி... ஆப்பிரிக்காவில் உள்ள இந்த நாடு இன்னும் ஏழை நாடுதான்!!
பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel)-க்காக செலவிடவே ஒவ்வொரு மாதமும் பெரிய தொகையை ஒதுக்க வேண்டியதாக உள்ளதே என்பது நம்மில் நிறைய பேரது கவலையாக உள்ளது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலையில் பெரியதாக மாற்றம் இல்லை என்றாலும், அதுக்கு முன்பு வரையில் அவற்றின் தொடர் விலை அதிகரிப்பு பெரிய பிரச்சனையாக இருந்தது. இந்தியாவில் 2 லிட்டர் பெட்ரோலுக்கும் குறைவான விலையில் சுமார் 80 லிட்டர் பெட்ரோல் கிடைத்தால் எப்படி இருக்கும். இது எல்லாம் கனவில்தான் நடக்கும் என உங்களில் சிலர் நினைக்கலாம்.
ஆனால், உலகில் ஒரு நாட்டில் உண்மையில் இந்த விலையில் பெட்ரோல் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆப்பிரிக்கா (Africa) என்றதுமே நம்மில் நிறைய பேருக்கு முதலில் நினைவிற்கு வருவது அங்கு நிலவும் வறுமையான சூழலும், வெப்பமான காலநிலையும் தான். குறிப்பாக, வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனம் உள்ளதால் அங்கு நிலவும் சூழலை பற்றி சொல்லவே வேண்டாம்.

ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் அந்த நாடும் வட ஆப்பிரிக்காவை சேர்ந்ததே ஆகும். லிபியா (Libya), ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமில்லாமல் உலகளவிலேயே மிகவும் ஏழ்மையாக இருந்த நாடுகளுள் ஒன்று. கடந்த சில வருடங்களாக தான் லிபியாவின் பொருளாதாரம் மெல்ல மெல்ல முன்னேற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம், கச்சா எண்ணெய் ஆகும்.
ஆப்பிரிக்க கண்டத்தில் அதிகமான ஜிடிபி-ஐ கொண்ட நாடுகளுள் ஒன்றாக லிபியா உள்ளது. லிபியா நாட்டிற்கு அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயில் சுமார் 95% பங்களிப்பை பெட்ரோலியம் கொண்டுள்ளது. கச்சா எண்ணெய், பெட்ரோலியம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவை தான் லிபியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரதானமான பொருட்கள் ஆகும்.

உலக வரைப்படத்தில் லிபியா நாட்டின் இருப்பிடத்தை பார்த்தாலே உங்களுக்கு தெரியும், இந்த நாட்டில் 3இல் 2 பங்கு முழுவதுமாக சஹாரா பாலைவனம் தான். அந்த 1 பங்கு கூட கடல் மூலமாக கிடைக்கக்கூடிய உப்பு காற்றில் முளைத்த செடி, மரங்கள் தான். அந்த அளவிற்கு லிபியாவில் கடுமையான வெப்பநிலை நிலவினாலும், அங்கே தான் பொக்கிஷமும் புதைந்து கிடைக்கிறது. அதுதான், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை தயாரிப்பதற்கான மூல பொருளான கச்சா எண்ணெய் ஆகும்.
வெளிநாடுகளுக்கு என்றே இவ்வளவு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்கிறது என்றால், லிபியா அரசாங்கம் தன்னுடைய சொந்த நாட்டு பயன்பாட்டிற்கென இருப்பில் எவ்வளவு கச்சா எண்ணெய்யை வைத்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இதனாலேயே அந்த நாட்டில் வெறும் 1 டாலரில் சுமார் 40 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை வாங்க முடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய ரூபாயில் 1 டாலரின் மதிப்பு தற்சமயம் 86 ரூபாயாக உள்ளது.

176 ரூபாயை, அதாவது 2 டாலர் வைத்திருந்தால் 80 லிட்டர் பெட்ரோல் (அ) டீசல் நிரப்பிக் கொள்ளலாம். 80 லிட்டர்கள் என்பது அளவில் பெரியதான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரின் எரிபொருள் டேங்கிங் முழு கொள்ளளவு ஆகும். இந்தியாவில் தற்சமயம் ஃபார்ச்சூனர் காரின் டேங்கை முழுவதுமாக டீசலில் நிரப்புவதற்கு ஏறக்குறைய ரூ.7,000 செலவிட வேண்டியதாக உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 83 டாலர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லிபியா மக்களின் சராசரி மாத வருமானம் 1,000இல் இருந்து 2,500 லிபியன் தினர்கள் வரையில் உள்ளது. தற்சமயம் 1 டாலரின் லிபியன் தினரின் மதிப்பு 4.96 தினர்கள் ஆகும். அப்படியென்றால், வெறும் 10 லிபியன் தினர்களை அந்த நாட்டில் வைத்திருந்தாலே 80 லிட்டர் பெட்ரோல்/ டீசலை நிரப்பிவிடலாம். தற்சமயம், ரூ.20 ஆயிரத்தை சராசரி மாத வருமானமாக கொண்டுள்ள நம் இந்தியர்களுக்கு இதற்கு ரூ.7,000 தேவைப்படுகிறது.


Click it and Unblock the Notifications









