வாம்மா மின்னலு... உலகின் அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் பைக்!

By Saravana

பெட்ரோலில் இயங்கும் அதிசக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்களையெல்லாம் வாய் பிளக்க வைத்திருக்கிறது இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக். ரேஸ் வீரர்கள் மத்தியில் இப்போது பிரபல மாடலாக மாறியிருக்கிறது.

லைட்னிங், அதாவது மின்னல் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் 2013ம் ஆண்டு பைக்ஸ் பீக் பைக் பந்தயத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்த பைக் அமெரிக்காவின் பிரபல டிவி தொகுப்பாளரும், வாகன சேகரிப்பாளருமான ஜே லெனோ கராஜில் இடம்பிடித்திருக்கிறது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தயாரிப்பு

தயாரிப்பு

லைட்னிங் நிறுவனத்தின் பத்தாண்டு கால உழைப்பில் இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் தயாராகி இருக்கிறது. லைட்னிங் எல்எஸ்- 218 என்ற மாடலில் பெயரில் அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டுதான் இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக்கின் வர்த்தக ரீதியிலான உற்பத்தி துவங்கியது.

 டிசைன்

டிசைன்

டிசைனில் புதுமையாக எதுவும் இல்லை. வழக்கமான சூப்பர் பைக்குகள் போன்றுதான் தோற்றமளிக்கிறது. சைலென்சர், எக்சாஸ்ட் பைப் போன்றவை இல்லாமல் இதர சூப்பர் பைக் மாடல்களின் தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

மின் மோட்டார்

மின் மோட்டார்

பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட சூப்பர் பைக்குகளுக்கு இணையாக 200எச்பி பவரை அதிகபட்சமாக அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. டைரக்ட் ட்ரைவ் தொழில்நுட்பம் கொண்டது.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

எலக்ட்ரிக் பைக் என்பதை நம்ப முடியாத அளவுக்கு, இந்த பைக் சோதனையின் போது மணிக்கு 350.8கிமீ வேகத்தை தொட்டதாக லைட்னிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இதில் பொருத்தப்பட்டிருக்கும் அதிக திறன் வாய்ந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 160 கிமீ தூரம் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக் 224.5 கிலோ எடை கொண்டது.

 பேட்டரி

பேட்டரி

இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக் 12KWh மற்றும் 20KWh பேட்டரிகள் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை

விலை

இந்த புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் 38,800 டாலர் விலை கொண்டது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lightning Motorcycles, a small start-up electric motorcycle manufacturer based in San Carlos, have claimed to made the fastest motorcycle in the world, the LS-281. The motorcycle is powered by an electric motor, capable of producing 200-horsepower, weighs around 495 lbs, and has attained a top speed of 218 miles per hour (350.8 km/h) while testing.
Story first published: Tuesday, July 14, 2015, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X