எப்போதும் இருசக்கர வாகன முன்விளக்குகள் ஒளிரவேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு

Written By: Azhagar

அடுத்தமாதம் முதல் இருச்சக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பைக்குகளில் முன்விளக்குகள் தானாக தொடர்ந்து எரியும் தொழில்நுட்பத்தை கொண்டுயிருக்கவேண்டும் என மத்திய அரசு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளது.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

முன்விளக்குகள் தானாக இயங்கும் தொழில்நுட்பத்தை AHO (Automatic Headlamp On) என ஆட்டோமொபைல் உலகம் கூறுகிறது. கார்களில் பகல் நேரங்களிலும் இயங்கும் லேம்ப்கள் போல AHOவின் இயக்கம் மோட்டார் சைக்கிளில்களில் இருக்கும்.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

மத்திய அரசு சமீபத்தில் நடத்திய ஆய்வுப்படி, இந்தியாவிலேயே கர்நாடக மாநிலத்தில் தான் இருச்சக்கர வாகன விபத்துகள் (30%) அதிகளவில் நடக்கின்றன. ஒரு நாளைக்கு சாரசரியாக 44,011 பயணிக்கும் வண்டிகளில் 13155 விபத்துகள் நடப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

தேசிய குற்ற ஆவண காப்பகம்(NCRB) 2015ம் ஆண்டு இந்தியளவில் நடைபெற்ற 1.4 லட்சம் விபத்துக்களில் 32,524 விபத்துகள் இருசக்கர வண்டிகளால் நடைபெற்றவை என கூறுகிறது. அதிகரித்து வரும் இதுபோன்ற விபத்துகள் மீது தற்போது இந்திய அரசு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

அதன் முதற்கட்டமாகத்தான் தற்போது மோட்டார் சைக்கிள்களில் AHO அமைப்பில் இயங்கும் முன்விளக்குகள் பொருத்துவதற்கான உத்தரவை பிரபல இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

AHO தொழில்நுட்பத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள்களில் எப்போதும் முன்விளக்குகள் ஒளிர்ந்துகொண்டே இருக்கும், பகல் நேரத்தில் மட்டும் சில பெரிய கார்களின் முன்பக்கத்தில் இயங்கும் லேம்ப் போல ஒளிரும்.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சரான நிதின் கட்கரியும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டுள்ளார், அதனால் எந்த நேரத்திலும் AHOவிற்கான அறிவிப்பை மத்தியரசு வெளியிடலாம்.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

மார்ச் 2016ம் ஆண்டு தானியங்கி விளக்குகள் இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படவேண்டும் என்ற அறிக்கையை நீதிபதி ராதாகிருஷ்ணன் குழு பரிந்துரை செய்திருந்தது. அதனை ஏற்றுக்கொண்டு மத்தியரசு இதற்கான உத்தரவை தற்போது வழங்கியுள்ளது.

இருசக்கர வாகனங்கள் இனி ஒளிர்ந்துகொண்டே இருக்கும்

இந்த உத்திரவுடன், சுற்றுச்சூழலும் எந்த தீங்கும் விளைவிக்காத பாரத் ஸ்டேஜ் IV எஞ்சின்களை வாகனங்களில் பொருத்துவதையும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.

வாசகர்கள் படித்து வரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்

வாசகர்கள் படித்து வரும் மேலும் சில் சுவாரஸ்யமான செய்திகள்
வாசகர்கள் படித்து வரும் மேலும் சில் சுவாரஸ்யமான செய்திகள்
வாசகர்கள் படித்து வரும் மேலும் சில் சுவாரஸ்யமான செய்திகள்
வாசகர்கள் படித்து வரும் மேலும் சில் சுவாரஸ்யமான செய்திகள்

இருசக்கர வாகனங்களுக்காக ஐரோப்பா, ஆஃப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் நடைபெறும் பிரபல டக்கர் ரேலி பந்தயங்களின் இந்தாண்டிற்கான புகைப்பட தொகுப்பு

மேலும்... #ஆஃப் பீட்
English summary
The Union Ministry of Road Transport and Highways had made it compulsory that new bikes be equipped with Automatic Headlamp On (AHO) from next month.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark