ரஷ்ய அதிபரின் காரில் குண்டு வெடிப்பு? காயமே இல்லாமல் புடின் உயிர் தப்பினார்! அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பயணித்த காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் அவர் சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எப்படி சாத்தியம்? என்ன நடந்தது? அவர் பயணித்த காரின் அப்படி என்ன பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறது? முழு விபரங்கள் இதோ உங்களுக்காக

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

உலகம் முழுவதும் ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபர்களுக்கு அந்நாட்டின் உச்சபட்ச பாதுகாப்பு இருக்கும். அவரை பாதுகாப்பதற்கு என்றே ஒரு குழு வேலை செய்யும். பிரதமர் ஒரு இடத்திற்குப் போகிறார் என்றால் அதற்குப் பல விதமான புரோட்டாகால் பின்பற்றப்படும். பல்வேறு பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகே அவர் அப்பகுதிக்குச் செல்வார். இது இந்தியாவின் பிரதமர் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

இப்படி தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கிறது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொலை செய்யும் நோக்கில் அவர் வந்த காரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

ரஷ்ய டெலிகிராம் சேனலான ஜெனரல் எஸ்விஆர் என்ற சேனலில் ரஷ்யாவில் அதிபர் விளாடிமர் புடின் தனது இல்லத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்த போது அவரது காரின் இடது பக்க வீலில் இருந்து ஏதோ மர்ம சத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சத்தத்திற்குப் பிறகு அதிலிருந்து பெரும் புகை கிளம்பியுள்ளது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவரது நெருங்கிய பாதுகாப்பு படை வீரர்கள் அவரை காரிலிருந்து இறக்கி

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

பேக்கப்பிற்கு இருக்கும் வாகனத்தில் அவரை ஏற்றி அவரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அதிபர் விளாடிமிர் புடினிற்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. அவர் பத்திரமாக இருக்கிறார். அவர் காரின் இடது பக்க வீல் அருகே வெடித்தது வெடி குண்டாக இருக்கலாம். இது விளாடிமிர் புடினை கொலை செய்யும் சதித் திட்டமாக இருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது பாதுகாப்புப் படையிலிருந்த சிலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் தப்பிச் சென்றுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. தப்பிச் சென்றவர்கள் அவர்கள் தப்பிச் சென்ற காரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் தப்பிச் சென்ற கார் அங்கு ஆட்கள் இன்றி காலியாக மீட்கப்பட்டுள்ளது.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

ரஷ்ய அதிபரின் கான்வாயில் அவருக்காக ஒரே மாதிரியாக இருக்கும் 5 வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த 5 வாகனங்களும் லிமோசைன் ரக வாகனங்களாகவும் அதாவது ரஷ்ய அதிபருக்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டு அதில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருக்கும் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அந்த காரில் நிறைந்திருக்கும்.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

அவசர சூழ்நிலை ஏற்பட்டால் அந்த காரில் உள்ள ஆயுதங்களைப் பயன்படுத்திக்கூட ரஷ்ய அதிபரின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதில் ஒரே நேரத்தில் 5 கார்கள் கான்வாயில் இருக்கும் கான் வாய் செல்லும் போது ரஷ்ய அதிபர் எந்த காரில் பயணிக்கிறார் என்று அந்த கான்வாயிலேயே சிலருக்கு மட்டும் தான் தெரியும். தற்போது நடந்த இந்த சம்பவத்தில் இந்த தகவலைத் தெரிந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர்தொடுத்தது. இதற்குப் பிறகு ரஷ்ய அதிபரின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்நாட்டின் உள்நாட்டிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிற்கு எதிராக எதிர்க்கட்சியின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

ரஷ்ய அதிபர் மீது என்று எந்த நேரத்தில்,எந்த இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் சம்பவம் நடக்கும் போது அவர் அவரது 5 கார்களில் 3வது காரில் அவர் பயணித்துக்கொண்டிருந்தார். அவரது கான்வாயில் அவர் பயணித்தாரில் தான் இடது பக்க வீலில் வெடிப்பு சத்தம் வந்ததா அல்லது வேறு காரில் வந்ததா என்ற தகவலும் இதுவரை ரஷ்ய அரசு வெளியிடவில்லை.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

இதில் ஒரு விநோதமான விஷயம் என்னவென்றால் உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் நேற்று அந்நாட்டில் விபத்தில் சிக்கியுள்ளார். ஜெலன்ஸ்கி கீவ் நகரில் பயணித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த பயணிகள் கார் ஒன்று இவரது காரின்மீது மோதியது. இதில் இவர் காரின் மீது மோதிய பயணிகள் காரின் ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

உடனடியாக இந்த விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அதிபர் ஜெலன்ஸ்கியை சோதனை செய்த டாக்டர்கள் இவருக்கு எந்த விதமான காயமும் இல்லை. இந்த விபத்தால் அவருக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என உறுதியளித்தனர். இந்த விபத்து குறித்தும் அந்நாட்டு அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னர் பிரதமரின் வெளிவட்டார வளையப் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்யும் வாகனங்கள் செல்லும் அதில் அவர்கள் பிரதமர் செல்லும் இடத்தில் மக்களோடு மக்களாகக் கலந்திருப்பர். அவசரக் காலங்களில் பிரதமரின் உயிரைப் பாதுகாக்க வேண்டியது இவர்களது கடமை அடுத்து பிரதமரின் உள் வளையப் பாதுகாப்பு அதிகாரிகள் இருப்பார்கள். அவர்கள் பிரதமரை நெருக்கி வரும் ஆபத்துக்களைப் பாதுகாப்பார்கள்.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

அடுத்த பிரதமரின் கார்கள் இடம் பெரும் அதில் அவர் பயணம் செய்யும் கார்கள் போலவே சில கார்கள் இருக்கும். அதில் பிரதமர் எந்த காரில் பயணம் செய்ய வேண்டும் எனக் கடைசி நிமிடத்தில் தான் முடிவு செய்யப்படும். பிரதமருக்கே இதை முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது. இந்த தகவல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும். மேலும் அவர் செல்லும் அனைத்து கார்களும் ஆயுதம் ஏந்திய கார்களாகதான் இருக்கும்.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

இதில் அனைத்து கார்களையும் இயக்கும் ஓட்டுநர்கள் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி கார்களை இயக்கும் பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள். இது போக இந்த கான்வாயில் ஆயுதம் ஏந்திய வாகனம், தொலைத் தொடர்புகளைக் கட் செய்யும் வாகனம், ரிமோட் மூலம் இயங்கும் ஆயுதங்களைச் செயல்பட விடாமல் தடுக்கும் வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் எல்லாம் இருக்கும்.

அதிபரின் காரில் குண்டு வெடிப்பு . . . சிறு காயம் கூட இல்லாமல் புடின் உயிர் தப்பியது எப்படி . . . அவர் கார் அவ்வளவு பாதுகாப்பானதா . .

ரஷ்ய அதிபர் பயணித்த இந்த லிமோகார் அவருக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேகமான கார் இந்தகாரில் ஏகப்பட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கிறது. கார் குண்டு வெடிப்புகளையே தாங்கும் திறன் கொண்டதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சம்பவம் குண்டுவெடிப்பா அல்லது காரில் ஏற்பட்ட கோளாறா என்பது தெரியவில்லை. குண்டு வெடிப்பாக இருந்தால் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் தான் அவரை காப்பாற்றியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை

Article Published On: Friday, September 16, 2022, 12:17 [IST]
English summary
Limousine safety features saved Russian president from assassination attack
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+