தமிழ் சினிமால பெருசா சாதிப்பாங்கன்னு நெனச்சோம்! ஆனா ஒரு படத்தோட ஆளையே காணோம்! விலை உயர்ந்த கார்ல போனது அவங்களா
தமிழ் திரைப்பட துறையில் ஒரு சில நடிகைகள் உச்சம் தொடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பின்னர், அவர்கள் காணாமல் போய் விடுகின்றனர். அப்படி ஒரே ஒரு திரைப்படத்துடன் தமிழ் திரையுலகில் இருந்து காணாமல் போன நடிகைகளில் ஒருவர்தான் சோனாக்ஸி சின்ஹா (Sonakshi Sinha). இவர் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருஹன் சின்காவின் (Shatrughan Sinha) மகள் ஆவார். சத்ருஹன் சின்ஹாவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் (Super Star Rajinikanth) நெருங்கிய நண்பர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லிங்கா (Lingaa) திரைப்படத்தில் சோனாக்ஸி சின்ஹா நடித்ததற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்தவொரு திரைப்படத்திலும் சோனாக்ஸி சின்ஹா நடிக்கவில்லை. இருப்பினும் பாலிவுட் திரையுலகில் சோனாக்ஸி சின்ஹா முன்னணி நடிகைகளில் ஒருவராகவே திகழ்கிறார்.

இந்த சூழலில் சோனாக்ஸி சின்ஹாவின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், மெர்சிடிஸ் பென்ஸ் எம்-க்ளாஸ் எம்எல் 350 சிடிஐ (Mercedes Benz M-Class ML 350 CDI) காரில் சோனாக்ஸி சின்ஹா பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது.
இது இந்திய சந்தையில் தற்போது விற்பனையிலேயே இல்லாத ஒரு கார் ஆகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. கடைசியாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சமயத்தில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) 69.11 லட்ச ரூபாயாக இருந்தது.

இந்த விலை உயர்ந்த காரில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சோனாக்ஸி சின்ஹா மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ரசிகை ஆவார். அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் எம்-க்ளாஸ் எம்எல் 350 சிடிஐ தவிர, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS) ஆகிய கார்களும் உள்ளன.
இதில், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரானது, 1.79-1.90 கோடி ரூபாய் என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் காரானது, 1.34-1.39 கோடி ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகி கொண்டுள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சோனாக்ஸி சின்ஹாவின் கணவர் ஜாகீர் இக்பால் (Zaheer Iqbal) ஆவார். இவரும் பிரபலமான பாலிவுட் நடிகர்களில் ஒருவர்தான். சோனாக்ஸி சின்ஹா தற்போது பயணம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் எம்-க்ளாஸ் எம்எல் 350 சிடிஐ கார் இவருடையதுதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் தனது மனைவி சோனாக்ஸி சின்ஹாவிற்கு அவ்வப்போது விலை உயர்ந்த பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) காரை ஜாகீர் இக்பால் தனது மனைவி சோனாக்ஸி சின்ஹாவிற்கு பரிசாக வழங்கினார் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








