கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!

இரவு நேரத்தில் தனியாக பைக்கில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள், அந்த சமயத்தில் உங்களுக்கு எதிரே ஓர் ஆக்ரோஷமான வனவிலங்கு வந்தால், என்ன செய்வீர்கள்? கேட்கவே பயமாக இருக்கிறது அல்லவா... அத்தகைய இக்கட்டான சூழலில்தான் ஒரு பைக் ஓட்டி சமீபத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். பின், அதில் இருந்து எவ்வாறு மீண்டார்? அவ்வாறான சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? வாருங்கள் அதை பற்றி இனி விவாதிப்போம்.

வெப்பமண்டல நாடான நம் இந்தியாவில் அடர்ந்த காடுகள் அதிகம் உள்ளன என்பது உங்களுக்கே தெரியும். இதன் காரணமாகவே, இந்தியாவில் ஒரு சில பகுதிகளுக்கு செல்ல வேண்டுமென்றால், வன பகுதியை கடந்தே செல்ல வேண்டியதாக உள்ளது. மத்திய அரசாங்கமும் நாட்டில் ஒரு சில பகுதிகளில் சாலைகளை காட்டிற்கு நடுவே அமைத்துள்ளது.

lion comes closer to bikers

இதனாலேயே, இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் வாகனத்தில் செல்லும்போது எளிதாக வன விலங்குகளை காண முடிகிறது. அத்தகைய இடங்களுக்கு காரில் அல்லது பேருந்தில் செல்லும்போது வன விலங்குகளை எதிர்கொள்ள நேர்ந்தால் பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை. விலங்கு வாகனத்திற்கு அருகே வந்தாலும், வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை மூடிவிட்டால், எளிதாக தப்பித்து விடலாம்.

ஆனால், பைக்கில் செல்லும்போது நிலைமையே வேறு. பைக்கில் செல்லும்போது தாக்கக்கூடிய வன விலங்கை கண்டால், பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பிக்கவும் முடியாது. ஏனெனில், ஒரு வன விலங்கை பார்த்து பயந்து, வாகனத்தை விட்டு காட்டிற்குள் ஓடினால் அங்கே எத்தனை வன விலங்குகள் இருக்கும் என்பது தெரியாது. இரவு நேரமாக இருந்தால், சொல்லவே வேண்டாம், பைக்கை விட்டு காட்டிற்குள் ஓடுவது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம்.

lion comes closer to bikers

இத்தகைய நிலைமை தான் குஜராத்தில் இரவு நேரத்தில் பைக்கில் சென்ற இருவருக்கு நேர்ந்துள்ளது. குஜராத் மாநிலம், சிங்களுக்கு பிரபலமானது. அதாவது குஜராத் மாநிலத்தில், காடுகளுக்கு அருகே இருக்கும் பகுதிகளில் பகல் நேரத்தில் கூட பரவலாக அவ்வப்போது சிங்கங்களை காண முடியும். அப்படியிருக்கையில், இரவு நேரத்தில் சொல்லவே வேண்டாம். ஏனெனில், இரவு நேரத்தில்தான் சிங்கங்கள் இரைக்காக வெளியே வரும்.

அவ்வாறு, குஜராத்தில் கிர் தேசிய சரணாலயத்துக்கு அருகே இரவு நேரத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் இருவர் சென்று கொண்டிருந்த போது, அவர்களுக்கு எதிரே மெல்ல அண்ண நடை போட்டு ஒரு இளம் ஆண் சிங்கம் வந்துள்ளது. இதனை கண்டதும் பைக்கில் வந்தவர்கள் உடனடியாக தங்களது பைக்கை நிறுத்திவிட்டு மரண பயத்துடன் தங்களை நோக்கிவரும் சிங்கத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

lion comes closer to bikers

ஆனால், சிங்கம் என்ன நினைத்ததோ என தெரியவில்லை. பைக்கை நோக்கி வந்த சிங்கம் திடீரென சாலையை கடந்து, அங்கிருந்த கல் சுவரின் மீது ஏறி தாண்டி சென்றுவிட்டது. உயிர் போய் உயிர் வந்ததாக நினைத்த பைக் பயணிகள், கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்காமல் உடனே அங்கிருந்து தப்பித்து கிளம்பிவிட்டனர். இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், சிங்கம் ஏன் பைக் பயணிகளை தாக்கவில்லை?

ஏற்கனவே கூறியதுபோல், குஜராத்தின் கிர் சரணாலயத்துக்கு அருகே இருக்கும் பகுதிகளில் சிங்கங்கள் சுற்றி திரிவது வழக்கமே ஒன்றே. இதனால், மனிதர்களை அடிக்கடி பார்த்த அனுபவத்தில் இந்த சிங்கம் மனிதர்களை ஒன்றும் செய்யாமல் சென்றிருக்கலாம். இவ்வாறு ஒருவேளை நீங்கள் சிக்கிக் கொண்டால், இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை போல முற்றிலுமாக அமைதியாக இருக்க வேண்டும் அல்லது அதிக ஒலியுடன் சிங்கத்தை பயமுறுத்தும் வகையில் கூக்குரலிடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிங்கத்தை நேரில் பார்த்தால் வாயில் இருந்து பேச்சே வராது, இதில் எங்கே இருந்து கூக்குரல் வரபோகிறது என நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், இத்தகைய நேரங்களில்தான் முழு அறிவை பயன்படுத்த வேண்டும், உங்களிடம் பைக் உள்ளது, பைக்கில் ஹார்ன் உள்ளது. கூக்குரல் என்றால், வாயில் இருந்து மட்டும்தான் சத்தங்களை எழுப்ப வேண்டும் என்றில்லை, பைக் ஹார்னையும் சிங்கத்தை பயமுறுத்த பயன்படுத்தலாம். அதேபோல், பைக்கின் எல்இடி விளக்கு ஒளியையும் சிங்கத்தின் முகத்திற்கு நேராக அடித்து, அதன் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 19, 2024, 8:00 [IST]
English summary
Lion comes closer to bikers in gujarat but did not attacked check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X