நடுரோட்டில் சிங்கங்களின் ஆக்ரோஷ வேட்டை... வனச் சாலைகளில் செல்லும்போது உஷார்!
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள குருகர் தேசிய வனவிலங்கு பூங்காவில், கார்கள் சென்று கொண்டிருந்த சாலையில் மான் ஒன்றை இரண்டு சிங்கங்கள் வேட்டையாடிய சம்பவம் சுற்றுலாப் பயணிகளை உறைய வைத்தது.
சிங்கங்களின் ஆக்ரோஷத்தை கண்டு அந்த வழியாக சென்ற சுற்றுலா சென்ற கார்கள் அனைத்தும் விக்கித்து நின்றன. சில அடி இடைவெளியில் நடந்த இந்த சம்பவத்தை இளம் புகைப்பட கலைஞர் ஒருவர் படம்பிடித்து வெளியிட்டிருக்கிறார். அந்த சம்பவத்தின் படங்களையும், வனச்சாலையில் செல்லும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் ஸ்லைடரில் தந்துள்ளோம்.

கோரப் பசி
கோரப் பசியிலிருந்த அந்த சிங்கங்கள் வேட்டையாடிய அசுர வேகத்தை பார்த்து சுற்றுலாப் பயணிகள் நடுங்கிபோயினர். மேலும், அங்கு நின்றிருந்த கார்களை கூட கண்டு கொள்ளாமல் தங்களது இரையை அடைவதற்கு மூர்க்கத்தனமாக அந்த மானை வேட்டையாடின.

தில்லான பயணிகள்
சம்பவத்தை படம் பிடிக்கவும், பார்க்கும் ஆர்வத்திலும் பல பயணிகள் கார் கண்ணாடி ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். இது விபரீதத்தை ஏற்படுத்தும் விஷயம். இப்போது வனப்பகுதி மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் சுற்றுலா செல்வது பலர் விரும்புகின்றனர். ஆனால், ஆர்வக் கோளாறில்

கவனம்
பொதுவாக, வன விலங்கு சரணாலயங்களில் சவாரி செல்லும்போது கார் கதவுகளை திறந்து வைத்து செல்வது ஆபத்தை விளைவிக்கும். ஒருவேளை, அந்த இரை கிடைக்காவிட்டால், காரில் இருப்பவர்களை தாக்கும் ஆபத்து அதிகம். எனவே, கார் கண்ணாடி ஜன்னல்களை திறந்து வைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

செல்ஃபீ மோகம்
வன விலங்குகளை பார்க்கும் ஆர்வத்தில், அதனுடனே சேர்த்து செல்ஃபீ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், விலங்குகளை பாதுகாப்பாக காரில் அமர்ந்து பார்ப்பதுடன், செல்ஃபீ எடுப்பதற்கு முயற்சி செய்வது தவிர்ப்பது அவசியம். அத்துடன் மிருகங்கள் அருகில் வருவதற்கு எத்தனித்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது அவசியம்.

வேகக் கட்டுப்பாடு
வனச் சாலைகளில் செல்லும்போது வேகக் கட்டுப்பாடுகளை மதித்து காரை இயக்க வேண்டும். ஏனெனில், கார் உள்ளிட்ட வாகனங்களில் அடிபட்டு பலியாகும் விலங்குகளின் எண்ணிக்கை வேட்டையாடுவதை விட அதிகமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

ஹாரன் வேண்டாம்...
வனச் சாலைகளில் விலங்குகளை பார்த்தவுடன் ஹாரன் அடித்து அச்சமூட்ட எண்ண வேண்டாம். சில சமயம் யானை உள்ளிட்ட விலங்குகள் அச்சமடைந்து தாக்குதல் நடத்தும் வாய்ப்புள்ளது.

முகப்பு விளக்கு...
விலங்குகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருந்தால் முகப்பு விளக்கை ஒளிர விட்ட படி, அங்கிருந்து வேகமாக நகர்ந்து விடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

வனக்கட்டுபாடுகள்
வனக்கட்டுப்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு சரணாலயங்களில் சுற்றுலா செல்வது அவசியம். கட்டுப்பாடுகளை மீறும்போது அது நமக்கே எமனாக அமைந்துவிடும்.

உணவுப் பண்டங்கள்
உணவுப் பண்டங்களை கொடுப்பதையும் தவிர்க்கவும். கையை வெளியில் நீட்டி கொடுக்கும்போது விலங்குகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து கண்டிப்பாக உண்டு. இதுபற்றி, ஏராளமான செய்திகளை அவ்வப்போது படித்திருக்கலாம். மொத்தத்தில் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும், வனச் சுற்றுலாவை சென்று வருவது சந்தோஷத்தை தரும். இல்லையெனில், மறக்க முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
Photo credit: Carolyn Dunford


Click it and Unblock the Notifications