உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு விபத்துக்களை குறைக்க உதவுமா?

Posted By: Staff

தேசிய நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகள், பார்களை அகற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரமுள்ள மதுக்கடைகள், ஹோட்டல் பார்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியச் சாலைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் மிக அதிகம் என்பதால் சாலை ஓரம் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுபானக் கடைகளை மூட வேண்டுமென உத்தரவிட்டது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்த தூரத்திற்குள் உள்ள ஹோட்டல்கள், பார்களுக்கு மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் புதிதாக உரிமம் கொடுப்பதை நிறுத்த வேண்டுமென்றும் ஏற்கனவே இருக்கும் கடைகளை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் மூட வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தத் தடை உத்தரவு மதுபானக் கடைகள் மட்டுமல்லாது ஹோட்டல்கள், பார்களுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தேதியில் உரிமங்களை வழங்கியிருப்பதால், அவை அக்டோபர் ஒன்றுவரை கடைகளைத் திறந்திருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழகத்தில் மதுபானக் கடைகளை அரசே நடத்துவதால் ஏப்ரல் ஒன்று முதல் கடைகளை மூட வேண்டுமென உத்தரவிட்டது. 500 மீட்டரை 100 மீட்டராகக் குறைக்க வேண்டுமென்ற தமிழகத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் நெடுஞ்சாலையோரங்களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் இருப்பதால், அந்தச் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்கள் போன்றவற்றிலும் மது விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து புதுச்சேரியிலும் 160க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

இதன் காரணமாக நாங்கள் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் தென்னிந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்கள் சங்க செயலாளரான நடராஜன். இருப்பினும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு முக்கிய காரணமே மது குடித்துவிட்டு ஓட்டுவது தான் என்பது தெள்ளத்தெளிவாக உணரப்படும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது சாலைகளில் பயணிக்கும் எண்ணற்ற மனித உயிர்களை பாதுகாப்பதாக அமைந்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் மூடல்: உச்சநீதிமன்றம் அதிரடி!

எனினும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு எந்த அளவுக்கு விபத்துக்களை குறைக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

English summary
supreme court bans tasmac shops in highways

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark