இரண்டாம் எலிசபெத் ராணியின் கராஜில் இத்தனை கார்களா? உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க...

இங்கிலாந்து ராணியாக இருந்து தற்போது மறைந்து போன இரண்டாம் எலிசபெத் அம்மையாருக்குச் சொந்தமாக ஏகப்பட்ட கார்கள் அவரது கராஜில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கார்களின் பட்டியலைக் காணலாம் வாருங்கள்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் மரணமடைந்துவிட்டார். இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்மோரால் கேஸ்டிலில் அவர் உயிரிழந்துவிட்டார். அவருக்குப் பின்னர் அவரது மூத்த மகன் சார்லஜ் இங்கிலாதின் மன்னராக பதவியேற்றுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

குயின் இரண்டாம் எலிசபெத் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பதவியை ஏற்றார். இந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு இங்கிலாந்தின் ராஜ பரம்பரைக்குச் சொந்தமான அரண்மனை மட்டுமல்ல ஏராளமான சொகுசு கார்களும் அவர்களுக்குச் சொந்தமாகும்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

இங்கிலாந்தின் ராஜ பரம்பரைக்குச் சொந்தமான சொகுசு கார்களை பற்றித் தெரிந்துகொள்வதில் எந்த ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்குத் தான் விருப்பம் இருக்காது.இந்தப் பதிவில் குயின் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்த கார்களை பற்றித் தான் பார்க்கப்போகிறோம். அதற்கு முன்பு இது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் பார்த்து விடலாம்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

இங்கிலாந்தின் ராணி என்றாலே நாம் எல்லோருக்கும் தெரியும் அவரது கார்களை ஓட்ட ஒரு ஓட்டுநர் கண்டிப்பாக இருப்பார் என்று, ஆனால் இரண்டாம் எலிசபெத் ராணியும் சில நேரம் லேண்ட்ரோவர் எஸ்யூவி கார்களை ஓட்டியுள்ளார். இங்கிலாந்தில் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்ட இவர் ஒருவருக்கு மட்டுமே அனுமதியுள்ளது. பிரிட்டிஷ் ராஜ பரம்பரையில் பல விதவிதமான தனித்துவம் நிறைந்த கார்களை பயன்படுத்துவதற்குப் பிரபலமானது.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

டைம்லர்

குயின் இரண்டாம் எலிசபெத்திடம் இருக்கும் முக்கியமான கார் டைம்லர் சூப்பர் வி8 எல்டபிள்யூபி. இந்த கார் வி8 இன்ஜினை கொண்டது. இந்த காரின் வீல்கள் மற்றும் காரின் உட்புறம் உள்ள சென்டர் ஆர்ம் ரெஸ்ட் குயின் இரண்டாம் எலிசபெத்திற்காகப் பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்டது. இந்த காரில் அவரது ராயல் ஹேண்ட்பேக்கை போடுவதற்கு எனத் தனி இடமும் இருக்கிறது.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

லேண்ட் ரோவர்

குயின் இரண்டாம் எலிசபெத்திற்கு பிடித்தமான கார் இந்த லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார். இதில் 30 கார்கள் குயின் எலிசபெத் வாங்கி தனது கராஜில் அடுக்கியுள்ளார். முதல் சிரீஸ் முதல் புதிதாக வந்த டிஃபென்டர் கார் வரை இங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். பல முறை குயின் இரண்டாம் எலிசபெத்தே இந்த கார்களை ஓட்டியுள்ளார்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

ரோல்ஸ் ராய்ஸ்

1950-1960களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பாந்தோம் 5 மற்றும் 6 குயின் எலிசபெத்தின் கராஜில் இருந்தது. இந்த கார்களும் ராஜ குடும்பத்தினர் பயன்படுத்தும் கார் என்று பெயரைப் பெற்றதால் பலர் இந்த கார்களை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்கத் தயாராக இருக்கின்றனர். இன்றும் இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல கிரேஸ் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

ஆஸ்டன் மார்டின்

குயின் இரண்டாம் எலிசபெத் தனது கணவர் பிரின்ஸ் பிலிப் உடன் சேர்ந்து தங்களது மகனான இளவரசர் சார்லஸிற்கு அவரது 21வது பிறந்தநாள் அன்று 1965 ஆஸ்டன் மார்டின் டிபி6 வோலன்ட் காரை பரிசளித்தனர். இந்த காரும் இன்றும் ராஜ பரம்பரையின் கராஜில் இருக்கிறது.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

பென்ட்லி

குயின் இரண்டாம் எலிசபெத் பென்ட்லி நிறுவனத்தின் லிமோசைன் காரா கடந்த 2002ம் ஆண்டு வாங்கினார். லிமோசைன் என்றால் நீளமான காரகும். இந்தக் காரை அவர் தனது பொன் விழா ஆண்டின் கொண்டாட்த்தின் நினைவாக இவருக்கேன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட காராக இந்தக் காரை வாங்கினார்.

இரண்டாம் எலிசபெத் ராணியில் கராஜில் இத்தனை கார்களா . . . உண்மையிலேயே ராஜ பரம்பரைன்னு காட்டிட்டாங்க . . .

இந்த காரில் 6.75 லிட்டர் வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 400 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இது மணிக்கு 210 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. முக்கிய விஷயமாக இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ80 கோடி எனக் கூறப்படுகிறது.

Article Published On: Friday, September 9, 2022, 10:42 [IST]
English summary
List of car collections owned by Queen Elizabeth
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+