அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?

வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக நாம் வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இவ்வாறு டீலர்ஷிப் மையங்கள் வழியாக கார்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்வது சற்று செலவு மிகுந்த வேலை என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு தங்களது கார் மற்றவர்களிடம் இருந்து வேறுப்பட்டு தெரிய வேண்டும் என்பதற்காக மாடிஃபை செய்து பயன்படுத்தும் இந்தியாவின் சில முக்கிய பிரமுகர்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

எம்.எஸ் தோனி

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனிக்கு கிரிக்கெட் மீது எந்த அளவிற்கு ஆர்வம் உள்ளதோ அதே அளவிற்கு வாகனங்கள் மீதும் ஆர்வம் உள்ளது என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இதனாலேயே இவரை இந்த வரிசையில் முதலாவதாக பார்க்கிறோம். தோனியிடம் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட நிஸான் ஒன்-டன் பிக்அப் ட்ரக் உள்ளது. இதற்கான கஸ்டமைஸ்ட் பணிகளை பஞ்சாப்பை சேர்ந்த எஸ்டி கார் வோர்ல்டு என்ற நிறுவனம் செய்து முடித்து கொடுத்தது.

மாடிஃபைடு லக்சரி கார்களை வைத்திருக்கும் விஐபி-கள்!!

பிரித்விராஜ் சுகுமாறன்

கிரிக்கெட்டில் தோனி எவ்வாறோ அதே போன்றுதான் சினிமா உலகில் கார்கள் மீது பைத்தியமாக இருப்பவர் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன். இவரிடம் பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் எஸ்யூவி கார் உள்ளது. ஆனால் அதனை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பழைய வாகனம் என்றே சொல்ல மாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை பிரித்விராஜ் நர்டோ கிரே நிறத்தில் வைத்துள்ளார்.

டிசா படானி

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து இளம் நடிகையான டிசா படானியிடம் ஏகப்பட்ட லக்சரி கார்கள் உள்ளன. அதில் ஒன்றான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்450 லக்சரி செடான் கார் சற்று வித்தியாசமானது. ஏனெனில் இந்த காரை முழுவதுமாக மேட் கருப்பு நிறத்தில் டிசா படானி பெயிண்ட் செய்துள்ளார். இதனாலேயே முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு இவர் பயன்படுத்தும் காராக இந்த கஸ்டமைஸ்ட் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்450 விளங்குகிறது.

ரன்வீர் சிங்

எல்லா விஷயங்களிலும் ஸ்டைலிஷை எதிர்பார்ப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். அப்படியிருக்கையில், கார்களை மட்டும் என்ன சாதாரணமானவைகளாகவா வைத்திருக்க போகிறார்? ரன்வீர் சிங்கிடம் அஸ்டன் மார்டீன் ரபிடே எஸ் என்ற ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று உள்ளது. இதனை வெள்ளை நிறத்திலேயே ரன்வீர் சிங் வாங்கினார். ஆனால் அதன்பின் எலக்ட்ரிக் நீல நிறத்தில் பெயிண்ட் செய்து கொண்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

சில வருடங்களுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ்வை பற்றி கேட்டிருந்தால் உங்களுக்கு பலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று அவர் அடைந்திருக்கும் உயரமோ மிக பெரியது. அவை அத்தனைக்கும் தகுதியானவரான சூர்யகுமாரிடமும் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட நிஸான் 1 டன் பிக்அப் ட்ரக் வாகனம் ஒன்று உள்ளது. எவரொருவரையும் கவரக்கூடிய நியோன் பச்சை நிறத்தில் உள்ள இந்த ட்ரக் வாகனத்தில் அளவில் பெரியதான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாடிஃபைடு லக்சரி கார்களை வைத்திருக்கும் விஐபி-கள்!!

துல்கர் சல்மான்

மலையாள சினிமா உலகின் மற்றொரு முன்னணி நடிகரான துல்கர் சல்மானிடம் ஏகப்பட்ட பழமையான கிளாசிக் மற்றும் எஸ்யூவி கார்கள் உள்ளன. குறிப்பாக டிஃபெண்டர் கார்களை அதிகம் விரும்பக்கூடியவராக துல்கர் உள்ளார். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், பழைய தலைமுறை டிஃபெண்டரும் இவரிடம் உள்ளது, அதேநேரம் புதிய தலைமுறை டிஃபெண்டர் காரும் துல்கர் சல்மானிடம் உள்ளது. இருப்பினும் இரண்டும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக பளபளப்பான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. ஏனெனில் பழைய டிஃபெண்டரையும் இவர் புதிய தோற்றத்திற்கு மாடிஃபை செய்துள்ளார்.

அனன்யா பாண்டே

ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார்கள் பாலிவுட்டின் இளம் நடிகர், நடிகையினர் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாகனங்களாக உள்ளன. இந்த வகையில் இளம் பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் ஒன்றை சொந்தமாக கொண்டுள்ளார். அனன்யா பாண்டேவின் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி கார் ஆனது மிலிட்டரி பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
List of indian celebrities who have modified their cars
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X