இவ்வளவு சின்ன வயதில் தொழிலில் எவ்வளவு பெரிய வளர்ச்சி!! சொமாடோ சிஇஓ-ஐ பற்றி தெரியாத சில உண்மைகள்!

சொமாடோ (Zomato), இந்தியாவின் முன்னணி உணவு டெலிவிரி நிறுவனம். இருக்கும் இடத்திற்கே உணவை வரவழைத்து உண்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, சொமாடோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை நாடு முழுவதும் விரிவுப்படுத்தி வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு சொமாடோ நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவர் தீபிந்தர் கோயல். இவர் தான் தற்சமயம் சொமாடோவின் சிஇஓ-ஆக உள்ளார்.

தீபிந்தர் கோயல் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது கூடுதல் ஆர்வம் கொண்டவராக விளங்குகிறார். சமீபத்தில் இவர் வாங்கிய அஸ்டன் மார்டின் கார் மற்றும் அதன் பளிச்சிடும் வித்தியாசமான பச்சை நிற பெயிண்ட் உள்ளிட்டவை தீபிந்தர் கோயல் லக்சரி கார்களின் மீது ஈடுப்பாடு கொண்டவர் என்பதை வெளிகாட்டுவதாக உள்ளது. இத்தகைய தொழிலதிபரிடம் என்னென்ன லக்சரி கார்கள் உள்ளன? வாருங்கள் இனி பார்க்கலாம்.

zomato ceo owned luxury cars

அஸ்டன் மார்டின் டிபி12 (Aston Martin DB12): தீபிந்தர் கோயல் சமீபத்தில் வாங்கிய அஸ்டன் மார்டின் காரில் இருந்து இந்த லிஸ்ட்டை ஆரம்பிப்போம். அஸ்டன் மார்டின் நிறுவனத்தில் இவர் வாங்கியிருப்பது டிபி12 காரை ஆகும். இத்தகைய அஸ்டன் மார்டின் காரை இந்தியாவில் வேறு யாரும் வாங்கியது கிடையாது. ரூ.4.59 கோடியில் விலையை கொண்ட அஸ்டன் மார்டின் டிபி12 காரை கவர்ச்சிக்கரமான சாடின் ரேசிங் பச்சை நிறத்தில் தீபிந்தர் கோயல் வாங்கி உள்ளார்.

பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் (BMW M8 Competition): மேலே குறிப்பிட்ட அஸ்டன் மார்டின் காருக்கு முன்பாக சொமாடோ சிஇஓ வாங்கிய கார் இதுவாகும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கூபே-ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் காரான எம்8 காம்பெடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.2.44 கோடியாக உள்ளது. இந்த காரையும் அஸ்டன் மார்டின் டிபி12 காரை போன்று, ஐஸல் ஆஃப் மேன் க்ரீன் பெயிண்ட்டில் தீபிந்தர் கோயல் வாங்கி உள்ளார்.

zomato ceo owned luxury cars

ஃபெராரி ரோமா (Ferrari Roma): ஃபெராரி காரை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள்? விலையுயர்ந்த காரை வாங்கும் அளவிற்கு பணம் சேர்ந்துவிட்டால், பெரும்பாலான செல்வந்தர்கள் வாங்குவது எதாவது ஒரு ஃபெராரி காரை தான். இந்த வகையில், தீபிந்தர் கோயல் வாங்கியது ஃபெராரி ரோமா காரை ஆகும். ரூ.3.76 கோடியில் விலையை கொண்டிருப்பினும், விலை குறைவான ஃபெராரி கார்களுள் ஒன்று ரோமா மாடல் ஆகும்.

zomato ceo owned luxury cars

போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S): இத்தாலியன் ஸ்டைல் ஃபெராரி காருடன், சில ஜெர்மன்-ஸ்டைல் போர்ஷே கார்களையும் சொமாடோ சிஇஓ வைத்துள்ளார். இவரிடம் உள்ள போர்ஷே கார்களுள் ஒன்று, 911 டர்போ எஸ் ஆகும். ஃபெராரி ரோமா காரை வாங்கிய சமயத்தில்தான், இந்த போர்ஷே காரையும் தீபிந்தர் கோயல் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் ரூ.3.3 கோடியாக உள்ளது.

zomato ceo owned luxury cars

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus): உலகளவில் பிரபலமான லம்போர்கினி காராக இருக்கும் உருஸ் மாடலையும் தீபிந்தர் கொண்டுள்ளார். லம்போர்கினியின் லக்சரி எஸ்யூவி காரான இது முற்றிலும் கருப்பு நிறத்தில் இவரிடம் உள்ளது. உருஸ் கார்களில் ஆற்றல்மிக்க 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் சில பெண்ட்லீ கார்களிலும் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

zomato ceo owned luxury cars

போர்ஷே கர்ரேரா எஸ் (Porsche Carrera S): தீபிந்தரிடம் உள்ள மற்றொரு போர்ஷே கார் இதுவாகும். போர்ஷே கார்கள் மீது கொஞ்சம் கூடுதல் ஆர்வம் கொண்டவராக விளங்கும் தீபிந்தர் முதலாவதாக வாங்கிய கார் இதுவென கூறப்படுகிறது. இந்த காரில் பொருத்தப்படுகின்ற 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு ஃபிளேட்-6 சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 450 எச்பி மற்றும் 530 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொமாடோ சிஇஓ தீபிந்தர் கோயலிடம் உள்ள சொகுசு கார்கள் என இந்த லிஸ்ட்டில் 7 கார்களை பார்த்துள்ளோம். இதில் மெர்சிடிஸ், ஆடி போன்ற 2ஆம் நிலை சொகுசு கார்கள் எதையும் சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்த்தால் லிஸ்ட் இன்னும் பெருசா போகும். இந்த லிஸ்ட் இதோடு நிற்கும் என்று நாங்கள் நினைவிக்கவில்லை. இன்னும் பெரியதாகி கொண்டுதான் போக போகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 12:08 [IST]
English summary
List of luxury cars owned by zomato ceo deepinder goyal check full list here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X