சாவை நேர்ல பாத்தும் எமன் கண்ணில் மண்ணை தூவி விட்டு தப்பித்த அதிசய மனிதர்கள்... கதையை கேக்கும்போதே நடுங்குது...

சமீபத்தில் ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் ஆன அடுத்த சில நிமிடங்களில் பூமியில் மோதியது, இந்த சம்பவத்தில் விமானத்தில் சுமார் 280 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டுமே விமான விபத்திலிருந்து தப்பியுள்ளார். இந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்டுள்ளது. இப்படியாக உலகம் முழுவதும் இதற்கு முன்னர் நடந்த விமான விபத்துகளில் தனி ஆளாக உயிர் தப்பியவர்கள எத்தனை பேர்? அவர்கள் மட்டும் எப்படி தப்பினார்கள்? விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி சவுத் சூடான் பகுதியில் லைட் ஏர் சர்வீஸஸ் சார்பில் ஈகில் ஏர் நிறுவனம் பீச்கிராஃப்ட் 1900டி என்ற விமானத்தை இயக்கியது. இந்த விமானம் 21 பயணிகளுடன் கிளம்பிய நிலையில் கிளம்பிய 10 நிமிடத்தில் தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த இமானுவேல் மேக்கர் மாக்கோய் என்ற பயணி மட்டும் படு காயங்களுடன் உயிர் தப்பினார். மற்றவர்கள் பலியானார்கள். இந்த விமானம் பிறக்கும் போது அதன் ஃபிளாப் போசிஷன் மாறியதால் இந்த விபத்து நடந்தது.

sole survivors in Flight Accident

கடந்த 2024ம் ஆண்டு நேபால் நாட்டைச் சேர்ந்த மணிஷ் ஷாக்யா என்ற கேப்டன் செளரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தை இயக்கினார். இவர் நேபால் தலைநகர் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து விமானத்தை டேக் ஆஃப் செய்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கேப்டன் மட்டுமே உயிர் தப்பினார். மற்றவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி உக்ரைன் நாட்டில் விமானிகளுக்கான பயிற்சி நடந்தது. அப்பொழுது 7 பேர் ஒரே விமானத்தில் பயணித்தனர். இந்த விமானம் டேக் ஆஃப் செய்யப்பட்டவுடன் இடது பக்க இன்ஜினில் பிரஷர் குறைவதை பார்த்த விமானி இதை ஏர் டிராஃபிக் கண்டரோலில் தெரிவித்துள்ளார். அப்பொழுது ஏற்கனவே ஒரு விமானம் ஓடு பாதையில் இருந்ததால் ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு தரையிறக்க உத்தரவு வந்தது. ஆனால் அதற்கும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியது. இதில் விமானத்தில் இருந்த Viacheslav Zolochevsky என்பவர் மட்டும் உயிர் தப்பினார்.

sole survivors in Flight Accident

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி காங்கோ நாட்டில் உள்ள கோமா சர்வதேச விமான நிலையித்தில் இருந்து டோர்னியர் 228 விமானம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த அடுத்த நிமிடமே இன்ஜின் ஃபெயிலியர் காரணமாக இந்த விமானம் தரையில் வந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விமானத்தில் மும்மா இமானுவேல் என்ற கேமிரூன் நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டுமே தப்பினார். மற்ற 27 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி போயீங் நிறுவனத்தின் 707 ரக விமானத்தை ஷாகார் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கியது. ஃபாத் ஏர்பேஸ் பகுதியில் தரையிறங்கியது. இந்த வமானம் பாயம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது.

sole survivors in Flight Accident

இரண்டு விமான நிலையங்களும் அருகருகே இருக்கும் நிலையில் இந்த விமானம் பாயம் விமான நிலையம் என கருதி பாத் ஏர்பேஸில் தரையிறங்கியது. இந்த விமானம் தரையிறங்க கூடுதல் ரன் வே தேவைப்படும் நிலையில் அங்கு கூடுதல் இடம் இல்லாததால் ரன்வேயை விட்டு வெளியே வந்து விபத்தகி்ல சிக்கியது. இதில் விமானத்தில் இருந்த ஃபர்ஷாத் என்ற இன்ஜினியர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானம் விபத்தில் சிக்குவது அரிதான விஷயமாக தான் இருக்கிறது. இந்த விமானம் விபத்தில் சிக்கும் போது அதில் பயணிக்கும் பயணிகள் உயிர் தப்பிப்பது கடினமா விஷயம் தான். அதிலும் ஒருவர் மட்டும் உயிர் தப்பிப்பது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான். இந்த பட்டியல் குறித்த உங்கள் கருத்து என்ன?

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2025, 19:40 [IST]
English summary
List of sole survivors in flight accidents
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X