இந்த வாகனங்கள் அடுத்த மாசம் அறிமுகமாகுவது கன்ஃபார்ம்! 2024 ஜனவரியை மறக்க முடியாததாக மாற்ற வரும் வாகனங்கள்!

அடுத்த மாசம் இந்தியாவில் கன்ஃபார்மாக அறிமுகமாக இருக்கும் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். 2024 ஜனவரியை அலங்கரிக்கும் விதமாக இந்த வாகனங்கள் அடுத்தடுத்து என வரும் ஜனவரியில் அடுத்த மாதம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. அப்படி என்ன வாகன மாடல்கள் அவை என்பது பற்றிய விபரத்தையே இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

2024 ஜனவரியில் புதிய இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பலதரப்பட்ட புதுமுக வாகனங்கள் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. இவற்றில் கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட், ஹூண்டாய் கிரெட்டா ஃப்ஸ்லிஃப்ட் மற்றும் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 ஆகிய வாகனங்களின் வருகை ஏற்கனவே அந்தந்த நிறுவனங்களால் உறுதி செய்யப்பட்டு விட்டன. இந்த வாகனங்கள் பற்றிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Jan launch

ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 (Royal Enfield Shotgun 650): இந்திய இருசக்கர வாகன விரும்பிகள் பலரின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் மாடலாக ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 காட்சியளிக்கின்றது. இந்த பைக்கை சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வீக் 2023 வாயிலாகவே ராயல் என்பீல்டு வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அப்போதே அந்த பைக்கை புக் செய்துக் கொள்ளும் வாய்ப்பை ராய்ல் என்பீல்டு வழங்கியது. மேலும், மற்றவர்களும் இந்த பைக்கை புக் செய்துக் கொள்ள ஏதுவாகவே வரும் ஜனவரியில் அதனை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ராயல் என்பீல்டு.

இந்த தகவலை ராயல் என்பீல்டு ஏற்கனவே உறுதி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் ரூ. 3.3 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் 650 சிசி பைக் என்பது குறிப்பிடத்தகுந்தது. ராயல் என்பீல்டு ட்வின் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின்தான் இது ஆகும்.

கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் (Kia Sonet Facelift): இந்த காரை வெகு சமீபத்திலேயே கியா நிறுவனம் உலக அளவில் வெளியீடு செய்தது. இதைத்தொடர்ந்தே, சில தினங்களுக்கு முன்னர் இக்காருக்கான புக்கிங் பணிகளையும் அது தொடங்கியது. ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் இக்காருக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது.

காரணம், இந்த காரில் லெவல் 2 வகை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டத்தை கியா வழங்கி இருக்கின்றது. இதுதவிர இன்னும் பல தொழில்நுட்ப வசதிகளை இந்த காரில் கியா வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. 70 வகையான கார் இணைப்பு அம்சம், ஃபைண்டு மை கார், ஹிங்கிலிஷ் கமேண்ட்ஸ் மற்றும் வேலட் மோட் ஆகிய அம்சங்களையும் கியா வழங்கி இருக்கின்றது.

ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Creta Facelift): ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றாக கிரெட்டா இருக்கின்றது. இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாகவும் இது இருக்கின்றது. இத்தகைய காரையே புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது. இந்த காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் உட்புற தோற்றம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஹூண்டாய் வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடப்பாண்டைப் போல வரும் 2024 ஆம் ஆண்டிலும் இந்தியாவை அலங்கரிக்கும் விதமாக புதுமுக இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் என பலதரப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கு சேம்பிளாகவே வரும் ஜனவரி மாதம் அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2023, 23:10 [IST]
English summary
List of vehicles to be launched in january 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+