அடுத்த கோடைக்குள்ள ஒண்ணு வாங்கிட்டா தேவலாம்... இல்லையா?!

Written By:

கோடையில் சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம், இந்தியாவிலேயே அதிக மாசு நிறைந்த நகரத்தில் வசிக்கிறோம் என்ற பயம் மறுபக்கம். இதையும் தாண்டி தாறுமாறாக ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மத்தியில் தினசரி இருசக்கர வாகன பயணம் என்பது உயிரை பணயம் வைத்து செல்லும் செயலாகிவிட்டது.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தை போன்று எளிதாக செல்லவும், கார் போன்று பாதுகாப்பு மற்றும் வசதிகள் நிறைந்த ஒரு மாடலாக இருக்கும் விதத்திலும் ஒரு புதிய இருசக்கர வாகனத்தை லிட் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.

மாடல்

மாடல்

லிட் சி1 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. கைரோ டெக் எனப்படும் நிலைப்படுத்தி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 ஏரோடைனமிக் டிசைன்

ஏரோடைனமிக் டிசைன்

மிகச் சிறப்பான ஏரோடைனமிக் டிசைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அகலமான கண்ணாடி ஜன்னல் மற்றும் பெரிய விண்ட் ஷீல்டு போன்றவற்றுடன் டிசைனும் அசத்தலாக இருக்கிறது. உட்புறத்தில் வெளிப்புறத்தை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு ஏதுவான வடிவமைப்பு அது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஒருவர் பயணிக்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஓட்டுபவருக்கு பின்னால் மற்றொருவரும் அமர்ந்து செல்ல முடியும். ஆனால், அது மிக நெருக்கடியாக இருக்கும்.

 வசதிகள்

வசதிகள்

ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் சிஸ்டம் கொண்டிருப்பதன் காரணமாக கார் போன்ற சொகுசு மற்றும் ஓட்டுதல் உணர்வை தரும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

சீட் பெல்ட்டுகள், உயிர் காக்கும் காற்றுப் பைகள், ரீ- இன்ஃபோர்ஸ்டு ஸ்டீல் சேஸீ, கைரோ ஸ்டெபிளிட்டி சிஸ்டம் என்ற நிலைப்படுத்தி தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் ஒரு காருக்கு நிகரான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

மின்சார வாகனம்

மின்சார வாகனம்

இந்த நிலைப்படுத்தி தன்மை கொண்ட இருசக்கர கார் முழுக்க முழுக்க பேட்டரி மின்சாரத்தில் இயங்குகிறது. எனவே, எதிர்காலத்துக்கு பொருந்தி போகக்கூடிய பசுமை வாகனமாகவும் கூறலாம்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த லிட் சி1 இருசக்கர கார் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் தொட்டுவிடும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று லிட் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பார்க்கிங்

பார்க்கிங்

அலுவலகம் மற்றும் ஷாப்பிங் செல்லும்போது டூ வீலர் போன்று எளிதாக பார்க்கிங் செய்ய முடியும். போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக முன்னேறி செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த வாகனத்தை நிறுத்திவிடும்போது இரண்டு இரும்பு கம்பிகள் முட்டுக் கொடுத்து நிற்கும்.

விலை

விலை

இந்த வாகனம் 24,000 டாலர் விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், விரைவில் உற்பத்தி துவங்குவதற்கான முயற்சிகளை லிட் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த கோடைக்குள்ள வந்துடுமா?!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Lit C1... Slip and park between cars, get to work fast, and do it all safely, without fossil fuels.
Story first published: Friday, July 17, 2015, 16:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark