இந்தியாவில் வெள்ளை தங்கம் கொட்டி கிடக்கா! சிதம்பர ரகசியம் வெளியே வந்தது! வயித்தெரிச்சலில் உலக நாடுகள்!
பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்க கூடிய வாகனங்கள் சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்தி வருகின்றன. எனவே உலகம் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி வருகிறது. இதன் காரணமாக லித்தியம் (Lithium) உலகிற்கு மிகவும் அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
லித்தியம் என்பது ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளில் (Batteries) பயன்படுத்தப்படும் ஒரு உலோகம் (Metal) ஆகும். இது மிகவும் எடை குறைவானது. உலகம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாற தொடங்கியுள்ளதால், லித்தியத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது உலகில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

உலகம் முழுவதும் லித்தியத்திற்கான தேவை அதிகரித்து கொண்டே செல்வதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் (Smartphones) மற்றும் லேப்டாப்கள் (Laptops) தற்போது எவ்வளவு அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ளன? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவற்றிலும் லித்தியம் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே லித்தியம் உலோகத்தை வைத்திருக்கும் நாடுகள், எண்ணெய் வளம் மிக்க தற்போதைய அரபு நாடுகளை போல், எதிர்காலத்தில் பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்தவையாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. உலகிலேயே பொலிவியா (Bolivia) நாடுதான், அதிகமான லித்தியம் இருப்பை கைவசம் வைத்துள்ளது. அவர்களிடம் 21 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பொலிவியா தவிர, அர்ஜென்டினா (Argentina), சிலி (Chile) மற்றும் அமெரிக்கா (America) போன்ற நாடுகளிடமும் குறிப்பிடத்தகுந்த அளவில் லித்தியம் உள்ளது. ஆனால் இந்தியா தனது லித்தியம் தேவைகளுக்கு இறக்குமதியைதான் பெரிதும் நம்பியுள்ளது. பெட்ரோல், டீசலை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் (Economy) மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், லித்தியம் தேவைகளுக்கும் வெளிநாடுகளையே சார்ந்து இருப்பது இந்தியாவிற்கு பல்வேறு விதங்களிலும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்தியாவின் லித்தியம் தேவைகளில் பெரும்பகுதியை சீனாதான் (China) பூர்த்தி செய்கிறது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், இந்தியாவின் லித்தியம் தேவைகளில், 53.67 சதவீதத்தை சீனாதான் பூர்த்தி செய்து கொண்டுள்ளது. சீனாவிடம் 5.1 மில்லியன் டன்கள் லித்தியம் இருப்பு உள்ளதால், இந்தியா போன்ற நாடுகளுக்கு அதனால் ஏற்றுமதி செய்ய முடிகிறது. சர்வதேச சந்தையில் தற்போதைய நிலையில் ஒரு டன் லித்தியத்தின் விலை (Price) 57.46 லட்ச ரூபாய் ஆகும்.
எனவே வெள்ளை தங்கம் (White Gold) என்ற பெயராலும் லித்தியம் அழைக்கப்படுகிறது. இவ்வளவு விலை உயர்ந்த ஒன்றை இறக்குமதி செய்து கொண்டே இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். ஆனால் அப்படியான ஒரு சூழல் ஏற்படாது என நாம் நம்பலாம். ஏனெனில் இந்தியாவில் லித்தியம் இருப்பது சமீப காலமாக தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் (Jammu-Kashmir) கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆம், ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் டீகனா (Degana) பகுதியில் தற்போது மிகப்பெரிய அளவிலான லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் கண்டறியப்பட்டதை விட, ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவிலான லித்தியம் இருப்பதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் லித்தியம் தேவையில் இது சுமார் 80 சதவீதத்தை பூர்த்தி செய்து விடும் என கூறப்படுகிறது. இந்திய மக்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லித்தியத்திற்காக இந்தியா வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் நிலையை இது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை இது குறைக்கலாம். பொதுவாக இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளின் விலை மிகவும் அதிகமாகதான் இருக்கும். எனவேதான் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருக்கிறது.
பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை மிகவும் அதிகமாக இருப்பதற்கு, லித்தியம் இறக்குமதி செய்யப்படுவதுதான் மிகவும் முக்கியமான காரணம். ஆனால் இந்தியாவிலேயே தற்போது லித்தியம் கண்டறியப்பட்டு வருவதால், வரும் காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பெரும் அளவில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான லித்தியம் இருப்பு கண்டறியப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) கூட தற்போது இதை வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சவால் மிகுந்த காலகட்டத்தில், இந்தியா முன்னேறுவதற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications
