பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

தன்னுடைய தந்தையின் பிரம்மாண்டமான பெரிய காரை, சிறுவன் ஒருவன் சிறிய பொம்மை காரால் மீட்கும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

முகநூல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், பள்ளத்தில் சிக்கி கொண்ட தனது தந்தையின் காரை மீட்பதற்கு சிறுவன் ஒருவன் 'உதவி' செய்வதை பார்க்க முடிகிறது. பார்ப்பதற்கே 'க்யூட்' ஆக இருக்கும் இந்த காணொளி, சமூக வலை தளங்களில் அனைவரின் மனங்களையும் வென்றுள்ளது.

பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

தன்னுடைய தந்தையின் உண்மையான பெரிய காரை பள்ளத்தில் இருந்து மீட்பதற்கு அந்த சிறுவன் பொம்மை காரை பயன்படுத்தியுள்ளார். அந்த சிறுவனின் சிறிய காரும், அவனுடைய தந்தையின் உண்மையான பெரிய காரும், நீளமான கயிறு ஒன்றின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

சற்று நேரத்தில் அந்த சிறுவன் தன்னுடைய தந்தையின் பெரிய காரை, தனது சிறிய காரில் அமர்ந்து இழுக்க தொடங்குகிறான். அப்போது அந்த சிறுவனின் தந்தையும் தன்னுடைய காரில் அமர்ந்து அதனை ஓட்ட தொடங்குகிறார். உண்மையில் அவருடைய கார் அப்படி ஒன்றும் பெரிய பள்ளத்தில் எல்லாம் சிக்கி கொள்ளவில்லை.

பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

மேலும் பிரம்மாண்ட தோற்றம் கொண்ட அவரது காரை, அந்த சிறுவனின் சிறிய பொம்மை காரால் எல்லாம் மீட்கவும் முடியாது. பிறகு ஏன் அந்த தந்தை, தன்னுடைய மகனை இப்படி செய்ய வைத்தார்? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். தன்னுடைய மகன் மீது அவர் கொண்டுள்ள பாசமே அவரை இப்படி செய்ய வைத்துள்ளது. ஆம், உண்மைதான்.

பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

நமது சிறிய பொம்மை காரின் மூலம், தந்தையின் பெரிய காரை பள்ளத்தில் இருந்து இழுத்து மீட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சியை அந்த சிறுவனுக்கு ஏற்படுத்துவதற்காகவே அவர் இப்படி செய்தது போல் தெரிகிறது. அந்த சிறுவன்தான் பெரிய காரை உண்மையில் மீட்கிறான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, அவர் தனது காரை ஒரு சில வினாடிகள் நிறுத்தி நிறுத்தி எடுப்பதையும் பார்க்க முடிகிறது.

பிரம்மாண்டமான பெரிய காரை சிறிய பொம்மை காரால் மீட்ட சிறுவன்! சாத்தியப்படுத்திய தந்தை... க்யூட் வீடியோ

இதன் மூலமாக தனது தந்தையின் காரை மீட்டு விட்டோம் என்ற மகிழ்ச்சி அந்த சிறுவனுக்கு கிடைத்திருக்க கூடும். இந்த காணொளி பார்ப்பதற்கே அழகாக உள்ளது. இதனால் 'மிகச்சிறந்த தந்தை' என்ற பட்டத்தை அந்த சிறுவனின் தந்தைக்கு இந்த காணொளி தேடி கொடுத்துள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது பலரும் இந்த காணொளியை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதே சமயம் பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும், சமூக வலை தளங்களில் இந்த காணொளி ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று செய்வதால் விபத்துக்கள் நேரலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. நாம் ஏற்கனவே கூறியபடி, அந்த சிறுவனின் சிறிய பொம்மை காரால், உண்மையான பெரிய காரை இழுக்க முடியாது.

ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350? உங்களுக்கான பதில் இந்த வீடியோவில்!

எதிர்பாராதவிதமாக உண்மையான பெரிய கார் வேகமாக முன்னோக்கி செல்லும்பட்சத்தில், முன்னால் இருக்கும் சிறுவனின் சிறிய காரின் மீது மோதி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு சிலர் இந்த காணொளியை 'க்யூட்' என வர்ணித்தாலும், சிலர் இது அபாயகரமானது எனவும் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன? என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Little Boy 'Helps' Tow His Dad's SUV Out Of Ditch - Watch Video. Read in Tamil
Story first published: Wednesday, November 18, 2020, 21:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X