சென்னை-டூ-சிங்கப்பூர் கப்பல்லையே போகலாம்! என்ன இந்த இடத்தை எல்லாம் சுத்திட்டு போகபோகுதா! பாக்க 2 கண்ணு போதாது!
முன்னணி சுற்றுலா கப்பல் நிறுவனமான லிட்டோரல் க்ரூஸஸ் லிமிடெட் நிறுவனம், விசாகப்பட்டியனம் வழியாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
லிட்டோரல் க்ரூஸஸ் (Littoral Cruises), இது ஓர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே விசாகப்பட்டினம் வழியாக சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிக்கும் புதிய கப்பல் போக்குவரத்து திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கின்றது.

மிக சமீபத்திலேயே இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கப்பல் நிறுவனம் கையொப்பம் போட்டது. சில தினங்களுக்கு முன்னர் குளோபல் மேரிடைம் இந்திய உச்சி மாநாட்டில் (Global Maritime India Summit) கலந்துக் கொண்டது. இங்கு வைத்தே புதிய போக்குவரத்து சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் இடப்பட்டது.
நிறுவனத்தின் புரமோட்டரான ராஜா வைஸ் இந்த திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த நிலையிலேயே சென்னை -விசாகப்பட்டினம்- சிங்கப்பூர் சேவையை நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. விசாகப்பட்டினத்தின் விரிவான மற்றும் அழகிய மலைகளைக் பார்த்த வண்ணம், அழகிய கடல் நகரமான சிங்கப்பூரை இந்த பயணிகள் சென்றடைய இருக்கின்றனர்.
ஆகையால், இந்த பயணம் க்ரூஸ் பயணிகளுக்கு மிக சிறந்த போக்குவரத்து அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த க்ரூஸ் மிகவும் லக்சூரி வசதிகள் நிறைந்தது என கூறப்படுகின்றது. ஆகையால், அல்டிமேட் டிராவல் அனுபவம் கன்ஃபார்ம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
லிட்டோரல் க்ரூஸ் நிறுவனம் சென்னை-விசாகப்பட்டினம்-சிங்கப்பூர் திட்டத்துடன் இன்னும் சில புதிய போக்குவரத்து சேவையையும் தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. அந்தவகையில், இந்தியாவை ஸ்ரீலங்கா மற்றும் மால தீவுகளுடன் இணைக்கின்ற வகையில் புதிய க்ரூஸ் கப்பல் போக்குவரத்து திட்டங்களை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.
சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டங்களை அது செயல்படுத்த இருக்கின்றது. நிறுவனம் சென்னை -திரிகோமலி -கொழும்பு -மாலத்தீவுகள் மற்றும் மும்பை -கொச்சின் -லட்ச தீவுகள் க்ரூஸ் கப்பல் சேவையை மேற்கொள்ள இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை அதன் அதிகாரப்பூர்வ தளமும் உறுதிப்படுத்தி உள்ளது.
சென்னை-விசாகப்பட்டினம்-சிங்கப்பூர் க்ரூஸ் கட்டணம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. இப்போதைய நிலவரப்படி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து புக்கிங்கைப் பெறும் பணியில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது. அதன் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பெயர், செல்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட விபரங்களை வழங்கி புக் செய்துக் கொள்ள முடியும்.
உங்களுடைய இந்த விருப்பத்தை தெரிவிக்க எந்த கட்டணமும் தேவைப்படாது. ஆமாங்க, வெறும் தகவலை அவர்களுடன் பகிர்ந்தால் போதுமானது. இத்துடன், எத்தனை பேருக்கு நீங்கள் புக் செய்ய இருக்கின்றீர்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக பெரியவர்கள் எத்தனை பேர், சிறியவர்கள் எத்தனை பேர் என்பது பற்றிய விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
இந்த தகவல்கள் அனைத்தையும் வழங்கும்பட்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு பின்னர் அவர்கள் உங்களை தொடர்புக் கொண்டு உங்கள் பயண விபரங்களை சேகரிப்பார்கள் என தெரிகின்றது. இதற்கு பின்னரே உங்களுக்கு தேவைப்படும் வகுப்பு மற்றும் கட்டணம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் மத்தியில் சுற்றுலா செல்லும் வழக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் லிட்டோரல் க்ரூஸ் நிறுவனம் தன்னுடைய கப்பல் போக்குவரத்து சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. சற்று மலிவான விலையில் இந்த சேவையை மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








